ரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மிகத்தீவிரமாக களப்பணி ஆற்றிவருகிறது. கட்சியின் மாநிலத் தீர்மானக் குழு உறுப்பினரும் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நலன் மற்றும் சமூக பாதுகாப்பு நல வாரிய உறுப்பினரான செஞ்சி சிவா இதில் மிகவும் அக்கறை செலுத்திவருகிறார்.

Advertisment

கடந்த 2020-ஆம் ஆண்டு "எல்லோரும் நம்முடன்' என்ற அடிப்படையில் தி.மு.க.வின் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெற்றன (தற்போது அதையே மாற்றி "ஓரணியில் தமிழ்நாடு' என்று உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது) அதேபோல் தற்போது தொழிலாளர் நல வாரியத்தின்மூலம் உடலுழைப்பு தொழிலாளர் களுக்கு அரசுவழியாக என்னென்ன சலுகைகள் கிடைக்கும், அதன்மூலம் எவ்வளவு பலன் ஏற்படுகிறது என்பதை மயிலம், மரக்காணம், செஞ்சி, திண்டிவனம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் முகாம் அமைத்து உடலுழைப்பு தொழிலாளர்களை வரவழைத்து உறுப்பினராகச் சேர்த்துள்ளதோடு அதிகாரிகளுடன் இணைந்து சலுகைகள் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.

இதுகுறித்து நலவாரிய உறுப்பினர் செஞ்சி சிவா, "குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய உடலுழைப்பு தொழிலாளர் களுக்கு அரசு அறிவித்த அனைத்து திட்டங் களையும் சலுகைகளையும் கொண்டுசென்று சேர்த்துள்ளோம். இந்த முகாம் நிகழ்ச்சிகளில், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் உட்பட பலர் வந்து கலந்துகொண்டனர். சுமார் 137 கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தொழிலாளர் நல வாரியத்தில் 6000 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அடையாள அட்டைகள் பெற்றுள்ளனர். இந்த முகாம் முடிந்த பின் அரசு, "உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்''” என்கிறார்.

 விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.வில் மக்களை சந்தித்து அரசுத் திட்டங்களை கொண்டுசேர்க்கும் தீவிர செயல்பாடுகளைப் பார்த்த அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம்,  ஜெயலலிதாவின் 77-ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும்வகையில் மயிலம், வல்லம், ஒலக்கூர், கூட்டேரிப்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு "அம்மா சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி' என்று பெயர்வைத்து, அந்த போட்டிகளைத் தொடர்ந்து பல்வேறு கிராமப் பகுதிகளில் நடத்தி அதில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வாரி வழங்கிவருகிறார். 

Advertisment

விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் கட்சியினரும் 2026 சட்ட மன்றத் தேர்தலில் தொகுதிகளைக் கைப்பற்றும் நோக்கத்தில் ஆடு-புலி ஆட்டத்தை நடத்தி வருகின்றனர்.