ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பதைப் போல மாநிலத்துக் கேற்ற கூட்டணி கும்மாங்குத்து புதுச்சேரியில் அரங்கேறியிருக் கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தால் காங்கிரஸ் ஆதரவு, புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சிக்கு தி.மு.க. .ஆதரவு, இதுதான் இரு கட்சிகளின் தலைமை ஏற்படுத்தி யுள்ள எழுதப்படாத ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் புதுச்சேரி பகுதியில் சற்றே கிழிசல் ஏற்படும் நிலை ஆரம்பமாகியுள்ளது.
புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க. செயற்குழு கூட்டம் சில நாட்களுக்கு முன்பு லப்போர்த் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந் தது. முன்னாள் எம்.பி.யும் தலை மை செயற்குழு உறுப்பினருமான சி.பி.திருநாவுக்கரசு தான் முதலில் பேச ஆரம்பித்தார். "நமது தலை மையிடம் உள்ள நெருக்கத்தை வைத்துக் கொண்டு இங்கே தி.மு.க.வினரை அவமானப்படுத்து கிறது காங்கிரஸ். இப்படியே போனால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்குச் சமம். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர் ஸ்டாலி னிடம் இதுகுறித்து உடனடி யாகப் பேச வேண்டும்' என பொருமினார்.
இவருக்கு அடுத்தபடியாக பேசிய துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, விவசாய அணி அமைப்பாளர் சோமு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தைரியநாதன் என அனைவருமே முதல்வர் நாராயணசாமியின் அலட்சியப் போக்கைச் சொல்லி குமுறினார்கள்.
கட்சியினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இறுதியாகப் பேசிய மாநில அமைப்பாளர் சிவா, ""இம்மாநிலத்தின் மூன்று அமைப்பாளர்களும் ஒற்றுமை யாக செயல்பட்டு, வரும் தேர் தலில் நமது பலத்தைக் காட்டு வோம். அதற்கு முன்னோட்ட மாக விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தச் சொல்லி மாபெரும் போராட்டம் நடத்து வோம். அனைத்து விஷயங்களை யும் நமது தலைமைக்குத் தெரியப் படுத்துவோம். தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம்'' என்றார்.
"ஏன் இந்த திடீர் புகைச்சல்? என புதுச்சேரி தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலரிடம் கேட் டோம். “""பின்ன என்னங்க, அரசு நிகழ்ச்சிகள் எதற்கும் எங்களை அழைப்பதில்லை. அதுமட்டு மல்ல, அமைச்சர் கந்தசாமி உட்பட சில அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். உப்பளம், முதலியார்பேட்டை, மண்ணடிப் பட்டு பகுதி கோவில் நிர்வாக கமிட்டிகளில் அ.தி.மு.க.வினரை நியமிக்கிறார் முதல்வர் நாரா யணசாமி. இதுமாதிரியான ஆதங்கம் எங்களுக்கு மட்டுமல்ல, அடிமட்டத் தொண்டர்களுக்கும் இருக்கு. அதுதான் கூட்டத்தில் எதிரொலிச்சிருக்கு'' என்றார்கள்.
காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, ""கவர் னர் கிரண்பேடியை சமாளிப்பதே எங்க முதல்வருக்கு பெரும்பாடா இருக்கு. அதே சமயம் தி.மு.க. வினரின் ஆதங்கமும் எங்களுக்கு புரிகிறது. இருந்தாலும் என்ன செய்ய?'' என்கிறார்கள்.
-சுந்தரபாண்டியன்