தி.மு.க. 200 சீட்! ஐபேக் ரிப்போர்ட்! அதிர்ச்சியில் கூட்டணிக் கட்சிகள்!

r

லோ தலைவரே, பிரசாந்த் கிஷோர் தலைமையிலான தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் குழுவான ஐபேக், கட்சித் தலைமையிடம் சமீபத்தில் ஒரு அறிக்கை கொடுத்திருக்குதாம்.''

""என்ன அறிக்கை?''’’“

rr

""சட்டமன்றத் தேர்தலை எப்படி எல்லாம் எதிர்கொள்ளலாம்னு ஒரு சீக்ரெட் ஆலோசனை அறிக்கையை தி.மு.க.விடம் ஐபேக் கொடுத்திருக்கு. அதில், தி.மு.க.வுக்கு மக்களிடம் சாதகமான அலை வீசுவதால், குறைந்தபட்சம் 190-ல் இருந்து அதிகபட்சமா 200 தொகுதி கள் வரையில் உதயசூரியன் சின்னம் களமிறங்குவது தான் நல்லதுன்னு சொல்லியிருக்கும் அந்த அறிக்கை யில், கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள் ரொம்ப கம்மியா குறிப்பிடப்பட்டிருக்குதாம். அதோடு, தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளுக்காக தலா 3 வேட்பாளர்களையும் ஐபேக் பரிந்துரை பண்ணியிருக்குதாம். இப்படி ஒரு அறிக்கை தி.மு.க. சைடிலிருந்தே கசிந்திருப்பதா சொல்றாங்க. இது கூட்டணிக் கட்சிகளில் அதிர்வையும் விவாதத்தையும் உண்டாக்கியிருக்கு.''

""உண்டாக்கத்தானே செய்யும்?''

""காங்கிரசுக்கு 2016ல் ஒதுக்கியதில் பாதியும், இரண்டு கம்யூனிஸ்ட்டுகளுக்கும் சேர்த்து ஒரு டஜன் சீட்டும், ம.தி.மு.க-வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்திலும், அதிலும் பெரும்பாலும் உதயசூரியன் சின்னம்னும் ஐபேக் பரிந்துரைத்திருப்பதா பேச்சு ஓடுது.''

""தி.மு.க. சைடில் என்ன சொல்றாங்க?''

""வெற்றிவாய்ப்புள்ள கூட்டணி பற்றி இப்படி ஆலோசனைகள் வந்துக்கிட்டேதான் இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் போல சீட்

லோ தலைவரே, பிரசாந்த் கிஷோர் தலைமையிலான தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் குழுவான ஐபேக், கட்சித் தலைமையிடம் சமீபத்தில் ஒரு அறிக்கை கொடுத்திருக்குதாம்.''

""என்ன அறிக்கை?''’’“

rr

""சட்டமன்றத் தேர்தலை எப்படி எல்லாம் எதிர்கொள்ளலாம்னு ஒரு சீக்ரெட் ஆலோசனை அறிக்கையை தி.மு.க.விடம் ஐபேக் கொடுத்திருக்கு. அதில், தி.மு.க.வுக்கு மக்களிடம் சாதகமான அலை வீசுவதால், குறைந்தபட்சம் 190-ல் இருந்து அதிகபட்சமா 200 தொகுதி கள் வரையில் உதயசூரியன் சின்னம் களமிறங்குவது தான் நல்லதுன்னு சொல்லியிருக்கும் அந்த அறிக்கை யில், கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள் ரொம்ப கம்மியா குறிப்பிடப்பட்டிருக்குதாம். அதோடு, தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளுக்காக தலா 3 வேட்பாளர்களையும் ஐபேக் பரிந்துரை பண்ணியிருக்குதாம். இப்படி ஒரு அறிக்கை தி.மு.க. சைடிலிருந்தே கசிந்திருப்பதா சொல்றாங்க. இது கூட்டணிக் கட்சிகளில் அதிர்வையும் விவாதத்தையும் உண்டாக்கியிருக்கு.''

""உண்டாக்கத்தானே செய்யும்?''

""காங்கிரசுக்கு 2016ல் ஒதுக்கியதில் பாதியும், இரண்டு கம்யூனிஸ்ட்டுகளுக்கும் சேர்த்து ஒரு டஜன் சீட்டும், ம.தி.மு.க-வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்திலும், அதிலும் பெரும்பாலும் உதயசூரியன் சின்னம்னும் ஐபேக் பரிந்துரைத்திருப்பதா பேச்சு ஓடுது.''

""தி.மு.க. சைடில் என்ன சொல்றாங்க?''

""வெற்றிவாய்ப்புள்ள கூட்டணி பற்றி இப்படி ஆலோசனைகள் வந்துக்கிட்டேதான் இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் போல சீட் ஷேரிங்கில் மு.க.ஸ்டாலின் கவனமாகவும், வெற்றிகரமாகவும் ப்ளான் பண்ணுவாருன்னு சொல்றாங்க. எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் பெரும்பாலான மாநிலங்களில் தோல்வியுற்ற நிலையிலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு 10 எம்.பி. தொகுதிகளை ஒதுக்கி, 9 பேரை ஜெயிக்க வச்சது தி.மு.க.தான். அதனால் சட்டமன்றத் தேர்தல் நிலவரத்தை சோனியாவுக்கும் ராகுலுக்கும் தி.மு.க. தலைமை ஏற்கனவே தெரிவிச்சிருக்குதுன்னு சொல்றாங்க. 2016லேயே தி.மு.க-அ.தி.மு.க. நேரடி போட்டி நடந்த தொகுதிகளில் தி.மு.க.தான் அதிகம் ஜெயிச்சது. அதனால, தனிச் சின்னம் இல்லாத கட்சிகளையும் உதயசூரியன் சின்னத்தில் களமிறக்கினா இந்த முறை லம்ப்பா ஜெயிக்கலாம்ங் கிற ஐடியாவும் தி.மு.க. தலைமையிடம் இருக்குன்னு சொல்றாங்க.''

r

""ம்...''

""தி.மு.க.வின் தற்போதைய கூட்டணி சமச்சீரா இருப்பதால, பா.ம.க-தே.மு.தி.க போன்ற கட்சிகளை புதிதாக சேர்த்து, சீட் ஷேரிங்கில் பிரச்சினை ஏற்படுத்திக்க வேணாம்னும் ஐ-பேக் ரிப்போர்ட் சொல்லியிருப்பதோடு, ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் இருப்பதே தி.முக.வுக்கு பலம்னும் தொகுதிவாரியா காரணங்களை அடுக்கியிருக்குதாம். இந்த ரிப்போர்ட் பற்றிய தகவல்கள் லீக் ஆனதைப் பார்த்த தி.மு.க. கூட்டணிக் கட்சிகள், பதட்டப் பரபரப்பில் மூழ்கியிருக்கு. தங்கள் மன நிலையை அறிய தி.மு.க. தரப்பே இந்த அறிக்கையை லீக் செய் திருக்குமோ என்றும் அவை சந்தேகப்படுதாம்.''

""தி.மு.க.வுக்குள்ளும் பரபரப்பு தெரியு தேப்பா?''

""உண்மைதாங்க தலைவரே, தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் இல்லாட்டியும், கட்சிப் பதவிகளைப் பிடிப்பதில் உடன்பிறப்புக்கள் அதீத ஆர்வம் காட்டுவது வழக்கம். பட்டுக்கோட்டையில் இதற்காக துப்பாக்கிச்சூடு நடந்த பழைய வரலாறும் உண்டு. கட்சிப் பதவியை காசு வாங்கிட்டுப் போடுவதா, கலைஞர் காலத்திலேயே புகார்கள் வந்தது. ஸ்டாலின், தி.மு.க.வின் செயல் தலைவரா இருந்து நடத்திய கட்சி நிர்வாகிகள் கூட்டத் திலேயே, இதுபற்றி பலர் நேரிலும்-கடிதமாகவும் புகார்கள் தெரிவித்தும் பெரியளவில் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்ப ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புள்ள நிலையில், கட்சிப்பதவிக் கான வசூல் வேகமாக நடக்குது. அப்படிப்பட்டவர்களை எதிர்த்து தஞ்சை பூதலூர் மற்றும் திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் முளைத்து, பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு.''’

""கர்நாடக பா.ஜ.க.வில் உள்நாட்டுக் குழப்பம் ஆரம்பிச்சிருக்கேப்பா?''

""ஆமாங்க தலைவரே, கர்நாடக பா.ஜ.க. முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக, அவர் அமைச்சரவையில் உள்ள கலாச்சாரத்துறை அமைச்சர் சி.டி.ரவி போர்க்கொடி தூக்கியிருக் கார். 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், பதவிகளில் அமரக் கூடாது என்பது பா.ஜ.க. கடைபிடித்துவரும் பாலிஸி. இதைச் சுட்டிக் காட்டிய ரவி, 78 வயதைக் கடந்த எடியூரப்பா எப்படி முதல்வர் பதவியில் இருக்கலாம்னு அணுகுண்டை வீசியதோடு, தனது பதவியை ராஜினாமா செய்தும் சூறாவளியைக் கிளப்பி வருகிறார். இதைக்கண்டு திகைத்த பா.ஜ.க. தலைமை, அவரை சமாதானப்படுத்தி வருகிறது. மேலும் ரவியை தமிழக பா.ஜ.க.வுக்குத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கும் எண்ணத் தில் டெல்லி இருக் கிறதாம். அதேபோல் ஆர்.எஸ்.எஸ். சித் தாந்தத்தில் ஊறியவ ரான பூபேந்திர யாதவ் எம்.பி.யை யும், தமிழக மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கும் திட்டத்திலும் பா.ஜ.க. தலைமை மும்முரமாக இருக்குதாம்.''

""கடந்த 6-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திச்சிருக்காரே முதல்வர் எடப்பாடி?''

rr

""தமிழகத்தில் எடுக்கப்பட்டுவரும் கொரோனா நடவடிக்கைகள் பற்றிய ரிப்போர்ட்டை மத்திய அரசு கேட்டதால்தான் கவர்னரை சந்திச் சிருக்கார் எடப்பாடி. அவரோடு, அமைச்சர்கள் சட்டம் ‘சி.வி.சண்முகம், ’சுகாதாரம்’ விஜய பாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரும் போயிருந்தாங்க. அப்ப டெல்லி கேட்ட விபரங்கள் கொடுக்கப் பட்டிருக்கு. இந்த சந்திப்பின் போது, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கு வதற்கான சட்ட மசோதாவை பற்றி ஆலோசித்த கவர்னர், இது மத்திய அரசு ஒதுக்கீட்டிலா? மாநில அரசின் ஒதுக்கீட்டிலா? என்ற தன் சந்தேகத்தையும் கேட்டிருக்கார். மாநில ஒதுக்கீட் டில்தான்னு சொல்லி, அதுக்கு விரைவா ஒப்புதல் கொடுங்கன்னும் கவர்னரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கு. இதன்பிறகு டி.ஜி.பியிடம் தமிழக சட்டம் ஒழுங்கு பற்றி விசாரித்ததோடு, ஈ.பி.எஸ்., ஓ.பி. எஸ்.சுக்கு இடை யிலான உரசல் பத்தியும் ஆர்வ மாகக் கேட்டி ருக்கார்.''

""சட்டம் ஒழுங்கு நிலை மைதான் மோசமா இருக்கேப்பா?''

r

""உண்மை தாங்க தலைவரே, ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி. அலுவலக கட்டுப் பாட்டிலும், மாவட்ட குற்றப் பிரிவு இயங்கி வருது. அங்குதான் ஊழல்கள் அதிகரிச்சி வர்றதா முதல்வர் அலுவலகம் வரை புகார்கள் குவியுது. அதிலும் குறிப்பா, புதுக்கோட்டை மாவட்ட குற்றத் தடுப்பு அலுவலகத்தில் இருக்கும் ஒரு பெண் அதிகாரி, பிரச்சினைக்குரிய பிரமுகர்களிடம், விசாரணங்கிற பேரில் ஒரு ஆண் அதிகாரி மூலம் டீலீங், கட்டிங்ன்னு ஏகத்துக்கும் புகுந்து விளையாடறாராம். இப்போது இவர் கந்து வட்டிப் புள்ளிகளிடமும் கணிசமாக வாங்கிச் செழித்திருக்கிறாராம். இதற் காகவே 2 உதவியாளர்களையும் அம்மணி வைத்திருக்கிறாராம். கோட்டை வரை அம்மணியின் விவகாரம் கொடிகட்டிப் பறக்குது.''

""நானும் ஒரு முக்கியமான தகவலை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். எடப்பாடிக் கும் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையிலான அதிகாரப்போட்டி இப்போதைக்கு முடிவுக்கு வந்திருக்குது. அதேநேரத்தில், கோட்டையில் இருக்கிற அதிகாரம் முடிகிற மிச்ச காலத்துக்குள்ளே அனைத்துத் துறைகளின் டெண்டர்களையும் வரும் 30-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டி ருக்கிறதாம். அதனால் நெடுஞ்சாலை, பொதுப்பணி, தொழில்துறை, உயர்கல்வி, பள்ளிக்கல்வி, போக்குவரத்து, வேளாண்மை, தகவல் தொழில் நுட்பம்னு பல்வேறு முக்கிய துறைகளில் இது தொடர்பான வேகம் அதிகரிச்சிருக்குதாம். 6 மாதத்துக்குள் எல்லாத் துறை சார்ந்த வர்களும் வெயிட் ஆடுவாங்களாம்.''

nkn101020
இதையும் படியுங்கள்
Subscribe