"ஹலோ தலைவரே, தேர் தல் நெருங்குவதால் தமிழக அரசிடமிருந்து புதிய புதிய திட்டங்களும், அரசியல் களத்தில் புதிய, புதிய பாய்ச்சல்களும் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.''”
"ஆமாம்பா, மகளிர் உதவித் தொகையைக் கூட உயர்த்திக் கொடுக்கும் எண்ணத்தில் தி.மு.க. அரசு இருக்கிறதாமே?''”
"2021-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க, மகளிருக் கான கட்டணமில்லா பேருந்துப் பயணத்தை அறிவித்தது. அதற்கு மாறாக, திருமண உதவித்தொகையை நிறுத்தியது. இதனால் பொதுமக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், அதை மாற்றும் வகையில், 2023 செப்டம்பர் 15 முதல், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிவித் தது. இதற்காக ஆன் லைன் மூலம் ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப் பட்டது. இதில் முதல் கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயி ரம் பயனாளி கள் தேர்வு செய்யப்பட்டு, செப்டம்பர் 14ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்ற குமுறல் போராட்டங்களாக வெடித்ததால், தள்ளுபடி செய்யப்பட்டிருந்த பயனாளிகளையும் இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொண்டனர். அப்போதும் தங்களுக்கும் கிடைக்கவில்லை என்கிற முணுமுணுப்பு அடங்கவில்லை. இதனால், மீண்டும் இதற்கான விண்ணப்பங்களைப் பெற முடிவெடுத்த அரசு, ’உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்காக வீடு தேடிச் செல்லும் டீம்கள் மூலம், இதை பரவலாகப் பெற்றுவருகிறது.''”
"உண்மைதாம்பா, இந்த முகாம்களிலும் உரிமைத்தொகை விண்ணப்பங்கள்தானே அதிகம் கொடுக்கப்படுகின்றன.''”
"ஆமாங்க தலைவரே, தற்போதுவரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வரப்பெற்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நிலையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. போன்ற பல முனைத் தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கும் தி.மு.க. அரசு, பெண்களை முழுதாகக் கவரத் திட்டம் தீட்டிவருகிறது. ’மகளிர் உரிமைத் தொகையை முழுதாவா கொடுக்கறாங்க? பேருக்குக் கொஞ்சமும் ஊருக்குக் கொஞ்சமும் கொடுக்கு றாங்க. அதற்காக, தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை ஆகியவை நிறுத்தப்பட்டுவிட்டன. தீபாவளிக்கும் பணம் தரவில்லை, பொங்கல் பரிசும் கொடுக்கவில்லை’ என்கிற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரக் குரல் அதிகம் கேட்கின்றன. இதனால், விடுபட்ட மகளிருக்கும் உரிமைத் தொகையை வழங்குவதோடு, அதை மாதம் ரூ. 1500 ஆக உயர்த்தி வழங்குவது என்கிற முடிவிற்கு முதல்வர் ஸ்டாலின் வந்திருக்கிறாராம். இதை இந்த செப்டம்பர் மாதத்திலிருந்தே வழங்கவும் முடிவு செய்யப்பட்டி ருக்கிறதாம். இதேபோல் மேலும் பெண்களைக் கவரும் சில திட்டங்களும், மாணவர்களைக் கவரும் சில திட்டங்களூம் அறிவிக்கப்படலாம் என்கிறது கோட்டைத் தரப்பு.''”
"சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க, தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று முதல்வரை சந்தித்து, தி.மு.க.வின் கூட்டணிக் கட்சித் தலை வர்கள் வலியுறுத்தியிருக்கிறார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழகத் தில் சாதி ரீதியிலான ஆணவப் படுகொலை கள் அடிக்கடி நடந்துவருகிறது. இதனால், அங்கங்கே பதட்டமும் உருவாகிவருகிறது. அதனால், தி.மு.க. கூட்டணியில் உள்ள வி.சி.க. தலைவர் திருமா, சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன். சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் 6ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தனர். அப்போது, சாதி ஆணவப் படுகொலைக் குத் தனிச் சட்டம் கொண்டு வரவேண்டிய அவசியம் குறித்து விவரித்தனர். இதையே உச்ச நீதிமன்றமும், தேசியப் பெண்கள் ஆணையமும் வலியுறுத்தியிருக்கின்றன. இவற்றைப் பின்பற்றி, இதற்கான தனிச் சட்டத்தை ராஜஸ்தான் மாநிலம் கொண்டுவந்துள்ளது. இது குறித்தும் விவாதித்துள்ளனர். மேலும், இப்போதைய சட்டங்கள், ஆணவக் கொலையைத் தடுப்பதற்குரிய வகையில் வலிமையாக இல்லை என்பதையும் சுட்டிக் காட்டி யுள்ளனர். முதல்வரும் இதை கவனிப்ப தாகச் சொல்லியிருக்கிறார். எனவே அமைச்சரவையின் ஒப்புதலோடு, அடுத்து கூடும் சட்டமன்றத்தில் இதற்கான புதிய சட்ட மசோதா நிறைவேற்றப் படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.''”
"முதல்வர் ஸ்டாலின் பெயரில் அரசின் திட்டங்கள் கூடாது என்று நீதி மன்றம் முதலில் கறார் காட்டியதே?''”
"மக்கள் நலன் சார்ந்து தமிழக அரசு நடைமுறைப்படுத்திவரும் சில திட்டங்களுக்கு ’"உங்களுடன் ஸ்டாலின்',’"நலம் காக்கும் ஸ்டா லின்'’என்கிற பெயர்கள் சூட்டப்பட்டன. இது எடப்பாடியை உறுத்தியதால், அ.தி.மு.க. மாஜி அமைச்சரும் தற்போதைய எம்.பி.யுமான சி.வி. சண்முகத்துக்கு கீ கொடுக்க... அவரும், இதற்குத் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உயர்நீதிமன் றம், இந்த நடைமுறைக்குத் தடை விதித்தது. இந்த உத்தரவு, தமிழக அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும், தி.மு.க. தரப்பில் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ஆனாலும், இது குறித்தெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை அரசு. தொடர்ச்சியாக, "நலன் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை விளம்பரப் படுத்தியது. இதனால் டென்ஷனான சி.வி. சண் முகம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந் தார். அதேசமயம், உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து தி.மு.க. தரப்பிலும், அரசு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை 6ஆம் தேதி விசாரித்தது உச்ச நீதிமன்றம். வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞரும் தி.மு.க. எம்.பி.யுமான வில்சன் ஆஜராகி, அரசுத் தரப்பு வாதங்களை திற
மையாக எடுத்து வைத்தார். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தடையை ரத்து செய்ததுடன், வழக்கை தொடர்ந்த சண்முகத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரவைத்திருக்கிறது மேலும் வழக்கு விசாரணையின்போது சி.வி.சண்முகம் தரப்பைப் பார்த்து நீதியரசர் 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக் கவா அல்லது 20 லட்சம் அபராதம் விதிக்கவா? என கோபத்துடன் கேட்டதைப் பார்த்து... அ.தி. மு.க. வழக்கறிஞர் தரப்பு அதிர்ச்சியடைந்தது.''”
"முதல்வரை, பிரேமலதா சந்தித்ததைத் தொடர்ந்து அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு உருவானதே?''”
"முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சமீபத்தில் உடல்நலம் விசாரித்தார் தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தி.மு.க. கூட்டணிக்குள் தே.மு.தி.க. இடம்பெறுவது உறுதி யானதாக செய்திகள் வெளியாயின. இரட்டை இலக்கத்தில் சீட்டும், ஒரு ராஜ்யசபா சீட்டும், தேர்தல் செலவுக்கு கணிசமான தொகையும் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் பரவின. சோசியல் மீடியாக்களில் பரவிய செய்தியை வைத்து, சில ஊடகங்களும் அதே பாணியில் எழுதின. ஆனால், உண்மையில், கூட்டணி குறித்த முடிவு எதுவும் அந்த சந்திப்பில் எடுக்கப்பட வில்லையாம். தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க பிரேமலதா விரும்பியது மட்டும் சந்திப்பின்போது சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு தி.மு.க. தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஆகட்டும் பார்க்கலாம் என்கிற பாணியில் சந்திப்பை கையாண்டுள்ளார் ஸ்டாலின். இதற்கிடையே, சந்திப்பில் என்ன நடந்தது என அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகள் சீரியஸாக விசாரித்துள்ளன. எதுவும் முடிவாகவில்லை என்று தெரிந்ததும் பெருமூச்சுவிட்டாராம் எடப்பாடி.''”
"த.வெ.க.வின் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடத்துவதாக விஜய் தரப்பு அறிவித்திருந்ததே?''”
"அந்த நாளில் மாநாட்டுக்கு மதுரை காவல் துறை அனுமதி தரவில்லை. 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால், அந்த நேரத்தில் த.வெ.க. மாநாட்டுக்குப் பாதுகாப்பு கொடுப்பது சிரமம் என்று சொல்லிவிட்டார்கள். இதுகுறித்து ‘"மாநாட் டுக்குத் தடை? தடுமாறும் விஜய்!'’ எனும் தலைப் பில், இரண்டு இதழ்களுக்கு முன்பே நம் நக்கீரனில் விரிவாக தனி ஸ்டோரி வெளியானது. அதில் சுட்டிக்காட்டியபடியே, மாநாடு நடத்துவது பற்றி மீண்டும் ஆலோசனை நடத்திய விஜய், மறுபடியும் போலீசிடம் விவாதிக்குமாறு புஸ்ஸி ஆனந்தை அனுப்பினார். அவரும் மதுரை காவல்துறை எஸ்.பி. யைச் சந்தித்தார். அப்போது ஆகஸ்ட் 18 முதல் 22ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒரு தேதியில் நடத்திக் கொள்ளுங்கள் என்று அனுமதி தரப்பட்டுள்ளது. எனவே 21ஆம் தேதி அந்த மாநில மாநாட்டை விஜய் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்.’இந்த மாநாட்டில், புதிய தகவல்களைப் பேச விரும்பு கிறேன். கர்ஜிக்கும் வகையில் பேச்சை எழுதிக் கொடுங்கள்’ என்று, தனக்கான டீமிடம் விஜய் சொல்லியிருக்கிறாராம்.''”
"ரஜினியின் "கூலி' படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது டிக்கட், பாஸ் வாங்கிய பலராலும், விழா அரங்கிற்குள் போகமுடிய வில்லை என்கிற புகார் எழுந்ததே?''”
"ஆமாங்க தலைவரே, டிக்கட் டையும் பாஸையும் அளவுக்கு மீறி வினியோகித்துவிட்டார்கள் போலி ருக்கிறது. நிறைய பேர் டிக்கட் டோடு கூட அரங்க நுழைவு வாயில்களில் தவித்துக்கொண்டிருந் ததைப் பார்க்க முடிந்தது. இது குறித்து கோவை மாவட்டம் மேட் டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரஜினி சௌந்தர் என்கிற ரஜினி ரசிகர், ரஜினிக்கே ஒரு ஆதங்க கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில்,’எங்களுக்கு மிகமிகக் குறைவான பாஸ்களே வழங்கப்பட்டது. உங்கள் முகத்தை பார்க்கும் ஆவலுடன் நெடுந்தூரத்தில் இருந்து வந்தோம். ஆனால் எங்களுக்கு அவமானங்களே மிஞ்சியது. காவல்துறை அதிகாரிகளால் நாங்கள் விரட்டி யடிக்கப்பட்டோம். பாஸ் வைத்திருப்பவர்கள் 70 சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் அரங்கத்தின் வெளியிலேயே இருந்தோம். ஆனால் பாஸே இல்லாதவர்கள்தான் அரங்கின் உள்ளேயிருந் தார்கள். இது எப்படி என்று புரியவில்லை. மன்றத்தின் பெயரால் அவமானப்படுத்துவதை விட, மன்றத்தையே நீங்கள் கலைத்துவிட லாமே’என உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.''”
"உடுமலை அருகே கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி விவகாரத்தில் ஏதேதோ அடிபடுகிறதே?''”
“"மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரனின் தோட்டத்தில், மோத லைத் தடுக்கப்போன காவல்துறை எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் இன்னும் பதட்டம் தணியாமல் இருக்கிறது. இந்த நிலையில், மாஜி மந்திரி வேலுமணிக்கு நெருக்கமான அந்த எம்.எல்.ஏ.வின் தோட்டத்தில், ஏதோ பணம் தொடர்பான விசயங்கள் நடந்ததை, சண்டையை விலக்கப்போன எஸ்.எஸ்.ஐ. பார்த்துவிட்டதால்தான் அவர் கொல்லப்பட்டார் என்கிற சர்ச்சை அங்கே மகேந்திரனை சுற்றிச் சுழன்று வருகிறது. ''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் நிலத்தில் கொன்று புதைக்கப்பட்ட பெண்களின் சடலங்களை, அதை விசாரித்துவரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் தோண்டி எடுத்து வருகின்றனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களின் எலும்புக்கூடுகள், அதிகம் சிதையாமல் கிடைத்துள்ளதாம். அதில் 12 வயது சிறுமி ஒருவரின் எலும்புக்கூடும் இருக்கிறது என்கிறார்கள். மண்ணுக்குள் எங்கெங்கே எலும்புகள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கும் ஒரு அதிநவீன எக்ஸ்ரே எந்திரம், இந்தப் பணியில் பயன்படுத்தப்பட்டு வருகிறதாம்.''’
____________________
எஸ்எஸ்ஐ படுகொலை!
என்கவுன்ட்டர் தீர்ப்பு!
சிக்கனூத்து கிராமத்திலுள்ள தோட்டத்தில் கடமையாற்றச் சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான சண்முகவேல் செவ்வாய்க்கிழமை இரவில் தந்தை, மகன்கள் உள்ளிட்ட குற்றவாளிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கு பின்னர் ரோந்து வாகனத்தை உடைத்தும், வாக்கி டாக்கி கருவிகளின் வயர்களை அறுத்தும் தப்பிச் சென்றனர் குற்றவாளிகளான மூர்த்தி, தங்கபாண்டி மற்றும் மணிகண்டன். இதில் குற்றவாளிகள் மூர்த்தியும்,
தங்கப்பாண்டியும் கைதான நிலையில் மணிகண்டனை தேடிவந்தன டி.எஸ்.பி. தலைமையிலான ஐந்து தனிப்படைகள். இந்த நிலையில் மணிகண்டனும் போலீஸாரிடம் சிக்கிய நிலையில், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை காண்பிக்குமாறு போலீஸார் கேட்க, "உடுமலை அருகே உள்ள உப்பாறு எனுமிடத்தில் வீசியுள்ளேன்... காண்பிக்கின்றேன்'' என போலீஸாருக்கு வழியைக் காட்டியிருக்கின்றான் முக்கிய குற்றவாளியான மணிகண்டன்.
உப்பாறு ஓடைக்கு சென்ற நிலையில் அங்கே மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்துத் தருகின்றேன் எனக்கூறி அரிவாளை எடுத்து அங்கிருந்த எஸ்.ஐ. சரவணக்குமாரின் வலது கையை வெட்டி விட்டு, மீண்டும் அங்குமிங்கும் அரிவாளை வீசி காயத்தை உண்டாக்கி தப்பிக்க முயன்றான். இந்த நிலையில் எச்சரித்தும் அவன் கேட்காததால் பாதுகாப் புப் பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் திருஞானசம்பந்தத்தால் என்கவுண்டர் செய்யப்பட்டான் என்றது விசாரணை டீம். தற்போது மணிகண்டனின் சடலம் உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஐ. படுகொலை விரிவான செய்தி 36-ஆம் பக்கத்தில்!
-நாகேந்திரன்