ழை மக்களைக் குறி வைத்து தீபாவளி சிட்பண்ட் நிறுவனங்கள் பல களமிறங்கியுள்ளன. அப்படியொரு நிறுவனம்தான் ஏ.பி.ஆர். சிட்பண்ட் நிறுவனம். இந்த நிறுவனத்தை செய்யாரை தலைமையிடமாகக் கொண்டு காஞ்சிபுரம், வந்தவாசி, ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி, செங்கல்பட்டு, மருவத்தூர், அரக்கோணம், திருத்தணி, திரு வள்ளூர் என வடதமிழகத்தின் பெரும்பாலான சிறுநகரங்களிலும் கிளை அலுவலகத்தைத் தொடங்கிய அல்தாப் என்பவர் பல்லாயிரம் பேரிடம் தீபாவளி சீட்டு பிடித்தார்.

dd

399 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலான விதவிதமான ரேட் கார்டு போட்டு மக்களிடம் சீட்டுப் பிடித்தனர். 12 மாதம் கட்டி முடித்தபின் தீபாவளிக்கு பட்டாசு பாக்ஸ், தங்கக்காசு, வெள்ளிப் பொருள், சில்வர் பாத்திரங்கள், மளிகைப் பொருட்கள், துணி, ஸ்வீட், 25 கிலோ அரிசி சிப்பம், 5 கிலோ பிரியாணி அரிசி, 25 கிலோ பருப்பு என நீண்ட பட்டியலை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் மாதாமாதம் சீட்டுக் கட்டினர். பணம் வசூல் செய்ய ஊருக்கு ஊர் ஏஜென்ட்களை நியமித்து அவர் களுக்கு பல ஆஃபர்களைத் தந்து சீட்டுப் பிடிக்கச் செய்தனர்.

தொடர்ந்து சில ஆண்டுகளாக மக்களுக்கு சரியாகப் பொருட்களைத் தந்த நிறுவனம், கடந்த ஆண்டு முதல் சொதப்பத் துவங்கியது. பாதி பேருக்கு பொருட்கள் தருவது, மற்றவர்களுக்கு தராமல் விடுவது என மாறியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்களிடம் தீபாவளி சீட்டுப் பிடித்து பொருட்கள் தராமல் ஏமாற்றிய இப்பகுதி நிறுவனங்கள் மீது மக்களும், ஏஜென்ட்களும் புகார்கள் தந்து போராட்டங்கள் நடத்திக்கொண்டி ருக்கின்றனர்.

Advertisment

இதனால் 5 நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் ஏ.பி.ஆர். சீட்டு நிறுவனத்திடம் தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே பொருட்கள் வேண்டுமென நெருக்கடி தந்தனர் சீட்டு கட்டிய மக்களும், ஏஜென்ட்களும்.

சரியானபடி பொருட்கள் தராததோடு, தலைமறைவாகிவிட்ட உரிமையாளர் அல்தாப், வாட்ஸ்அப் வழியாக, "உங்களுக்கு கண்டிப்பாக பொருட்கள் கிடைக்கும். தீபாவளிக்கு தரவேண்டிய பொருட்கள் தீபாவளிக்கு பிறகும் தரப்படும்' என வீடியோ வெளியிட்டார். இதனால் நவம்பர் 10-ஆம் தேதி காலை 7 மணிக்கு சுமார் 300 பேர் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் முன்பு குவிந்தனர். செக்யூரிட்டிகள் மக்களின் கோபத்தைப் பார்த்து ஓடிவிட... அலுவலகத்துக்குள் புகுந்த மக்கள் உள்ளிருந்த பொருட்களை சூறையாடினர். சோபா, பீரோ, டி.வி, ஏ.சி., நாற்காலிகள், பேட்டரி, பைக்குகள் போன்றவற்றை தங்களது வண்டிகள் மற்றும் ஆட்டோக்களில் வைத்து எடுத்துச் சென்றனர்.

அருகிலிருந்த அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் இருந்த மளிகைப் பொருட்களை மூட்டை, மூட்டையாகத் தூக்கிச் சென்றனர். அதேபோல் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பைபாஸ் சாலையிலுள்ள ஹோட்டல், செய்யாற்றை வென்றாளில் உள்ள குடோன், பாப்பந்தாங்கல் கிராமத்திலிருந்த மளிகைப்பொருட்கள் வைத்திருந்த குடோன் போன்றவற்றிற்குள்ளும் புகுந்த கும்பல், உள்ளிருந்த சில கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். தகவல் தெரிந்து வந்த போலீஸார் எச்சரிக்கை செய்ததும் கொள்ளையடித்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. பொருட்கள் கிடைக்காத ஒரு கும்பல் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அல்தாப் வீட்டின் முன்பு முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

dd

சூறை யாடலுக்குப் பின்பு வீடியோ வெளியிட்ட அல் தாப், “"காஞ்சிபுரம், சென்னையிலிருந்து புதுப் புது கட்சி பெயர்களைச் சொல்லிக்கிட்டு வந்து கட்டிங் கேட்டு மிரட்டறாங்க. நம் ஊரைச் சேர்ந்த ஆளும்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ, "நீ எனக்கு கட்டிங் குடு, உனக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கறேன்'னு மிரட்டறார். ரவுடிகள் வந்து இப்படி கட்டிங் கேட்டு மிரட்டினால் எப்படி தொழில் செய்யறது? என் குடும்பத்தையே ஒழிச்சிடுவேன்னு மிரட்ட றாங்க. சிலரை ஏவி விட்டு என் நிறுவனம், வீடு எல்லாம் சூறையாடியிருக்காங்க. அதுக்கு புகார் தரப்போறன். தீபாவளிக்கு பிறகு கண்டிப்பா பொருள் தரப்படும்''’என மீண்டும் வீடியோ வெளியிட்டார்.

இந்த வீடியோ வெளிவந்த சிலமணி நேரங்களில் தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு பொருள் தரவில்லை என விழுப்புரம் மாவட்டம் வானூர் அருவாப்பாக்கம் வசந்தாமேரி தந்த புகாரின் அடிப்படையில் நவம்பர் 11-ஆம் தேதி சித்தூரில் பதுங்கியிருந்த அல்தாப், மேலாளர் கமலக்கண்ணன் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக செய்யார், வந்தவாசி, காஞ்சிபுரம், மேல்மருவத்தூர் பகுதி அரசியல் பிரமுகர்கள், கட்டப்பஞ்சாயத்து கும்பல்களை அழைத்துவந்த ஏஜென்ட்கள், நிறுவனத்தில் இருந்தவர்களை மிரட்டி பொருட்களை வாங்கிச் சென்றார்கள். பொருள் கிடைக்காமல் ஏமாந்தவர்களே சூறையாடலில் ஈடுபட்டுள்ளார்கள்,

"இதன்பின்னால் அரசியல், கட்டப் பஞ்சாயத்து பிரமுகர்களின் திட்டமிடல் உள்ளது' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.