Advertisment

ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை! -தி.மு.க. எம்.எல்.ஏ. செய்த நெகிழ்ச்சி செயல்!

ss

டந்த 7 ஆண்டு களாக ஒரு நல்ல காரியத்தைத் தொடர்ந்து செய்துவருகிறார், ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன். தனது எம்.எல்.ஏ. மாத ஊதியத்தை பொதுக் காரியங்களுக்கு மட்டுமே செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர், தனது 90, 91, 92, 93, 94வது மாத ஊதியத் தொகை ரூ.5,25,000/-ஐ ஆதரவற்ற குழந்தைகளின் தேவையை அறிந்து செலவழித்து, அவர்களை மகிழ்ச்சி வெள்ளத் தில் ஆழ்த்தியிருக்கிறார்.

Advertisment

c

அது என்ன நல்ல காரிய

டந்த 7 ஆண்டு களாக ஒரு நல்ல காரியத்தைத் தொடர்ந்து செய்துவருகிறார், ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன். தனது எம்.எல்.ஏ. மாத ஊதியத்தை பொதுக் காரியங்களுக்கு மட்டுமே செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர், தனது 90, 91, 92, 93, 94வது மாத ஊதியத் தொகை ரூ.5,25,000/-ஐ ஆதரவற்ற குழந்தைகளின் தேவையை அறிந்து செலவழித்து, அவர்களை மகிழ்ச்சி வெள்ளத் தில் ஆழ்த்தியிருக்கிறார்.

Advertisment

c

அது என்ன நல்ல காரியம்?

பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் இயங்கும் கண்ஞ்ட்ற் ர்ச் கண்ச்ங் குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் செயல்படும் அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஆகிய மூன்று காப்பகங்களில் உள்ள 235 ஆதரவற்ற குழந்தைகளுக்கு கடந்த 7 வருடங்களாக தீபாவளி கொண்டாடுவதற்கு புத்தாடைகளை வழங்கி வருகிறார். தற்போது 8வது முறையாக, அந்தக் குழந்தைகளை ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்குப் பிடித்த மான புத்தாடைகளை, அவர்களையே பார்த்துப் பார்த்து தேர்வு செய்யவைத்து, எடுத்துத் தந்தார். அப்போது ஜவுளிக்கடை டேபிளில் ஏறி நின்ற ஒரு குழந்தை, புத்தாடை அணிந்த குஷியில் தங்கப்பாண்டியன் கன்னத்தில் முத்தமிட, நெகிழ்ந்துபோனார்.

Advertisment

கொண்டாட்ட மனநிலையில் இருந்த அந்தக் குழந்தைகளிடம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. “"உங்க எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றக்கூடிய சக்தி கல்விக்கு மட்டுமே உள்ளது, அக்கல்வியை அனைத்து குழந்தைகளுக் கும் சிறப்பாகவும் தரமாகவும் வழங்க, நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வி உதவித்தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம் மூலம் மாணவ மாணவியர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவியருக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு திட்டம் போன்ற சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார், மேலும் தமிழ்நாடு அரசு, பள்ளியில் இடைநிற்றலைக் கண் காணித்து, எக்காரணத்திற்காக மாணவ மாணவியர் கல்வியைத் தொடர முடியவில்லை என்பதை ஆராய்ந்து, அதனையும் சரிசெய்து கல்வித்துறையைச் சிறப்பாக வழிநடத்தியும், நிர்வகித்தும் வருகிறது. இந்த நிர்வாகத் திறமைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அதனால், அனைத்துத் துறைகளும் சீராக வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது''’என்று சீரியஸாகப் பேசி காப்பகங்களுக்கு அனுப்பிவைத்தார்.

-அதிதேஜா

nkn191024
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe