தீபாவளி ஸ்பெஷலாக நவம்பர் 10-ஆம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்களைத் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. 50% பார்வையாளர்களுக்கு அனுமதி, தனி தியேட்டர்களுக்கு சில வழிமுறைகள், கட்டுப்பாடுகள், மல்டி ப்ளக்ஸ் மற்றும் மால் தியேட்டர்களுக்கென சில விதிமுறைகள், வழிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் சின்னப் படங்களின் தயாரிப் பாளர்கள், கலெக்ஷன் க்யாரண்டி உள்ள நடிகர்களை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் அனைவருமே தங்கள் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்யும் ஆர்வத்துடன் உள்ளனர்.

அப்படி ஆர்வம் உள்ள சில தயா ரிப்பாளர்கள் நம்மிடம் பேசினார்கள்.

cinema

எடிட்டிங் ஜாம்பவான் பி.லெனின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி எடிட்டிங் செய்ய ‘"கட்டில்'’என்ற படத்தை தயாரித்து டைரக்ட்பண்ணி ஹீரோவாகவும் நடிக்கிறார் இ.வி.கணேஷ்பாபு. இவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே, கௌரவ தோற்றத்தில் விதார்த், சினிமாவில் முதல்முறையாக டைரக்டர் கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம், பிரபல ஓவியர் ஸ்யாம், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் ‘கட்டில்’ மூலம் அறிமுகமாகிறார்கள்.

Advertisment

நம்மிடம் கணேஷ்பாபு, “‘""நான் ஓ.டி.டி.க்கு எதிரானவன் அல்ல, அதே நேரத்தில் சினிமாக்காரனுக்கு தியேட்டர்கள்தான் உலகம். இன்றைய மெகா நடிகர்களை அடையாளம் காட்டியதே தியேட்டர்கள்தான்.

கடவுள் தரிசனங்களில் பல வகைகள் இருந்தாலும் விஸ்வரூப தரிசனம்தான் மிகச் சிறந்த தரிசனம். அதைப் போல்தான் தியேட்டர்கள் திறப்பது எங்களுக்கு விஸ்வரூப தரிசனம். சரி, நம்ம படத்தோட மேட்டருக்கு வருவோம். நமது மூதாதையர்கள் விட்டுச் சென்ற ஏதாவது ஒரு பொருள் காலம்காலமாக நம்முடனே பயணிக்கும். அப்படி தஞ்சை மாவட்டத்தின் ஒரு குடும்பத்தில் பாரம்பரியமாக ஒரு கட்டில் பயணிக் கும். அதைப் பற்றி உணர்வுப்பூர்வ மாகச் சொல்வதுதான் "கட்டில்'.

அறிவு கொண்டு பார்த்தால் இது அஃறிணைதானே

Advertisment

அன்பு கொண்டு பார்த்தால் இது உயர்திணைதானே

கட்டில் மரங்களுக்குள்ளே எங்கள்

மரபணுக்கூட்டம் இருக்கு’’

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய இந்தப் பாடல் வரிகளே கட்டிலின் கதையைச் சொல்லிவிடும்''’என்றார் மகிழ்ச்சியுடன்.

ஹேப்பிதான்! ஆனாலும்...?

சிபிராஜ்-நந்திதா ஸ்வேதா காம்பினேஷனில் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி டைரக்ஷனில் ‘கபடதாரி’ படத்தைத் தயாரித்து முடித்துள்ளார் போஃப்டா தனஞ்செயன். படத்தின் புரொடக்ஷன் வேலைகளும் முழுவது மாக முடிந்தநிலையில் தனஞ்செயனிடம் பேசினோம்.

dcd

""அரசின் வழி முறைகள், விதிமுறை கள் எதுவாக இருந்தாலும் அதைக் கடைப்பிடிக்க வேண்டியது நமது கடமை. 50% ஆடியன்ஸ் வந்தாலே எங்களுக்கு ஹேப்பிதான். ஆனாலும் வி.பி.எஃப். கட்டணம் தொடர்பாக தியேட்டர் ஓனர்ஸுக்கும் எங்களுக்கும் இடையே சில டிஸ்பியூட் இருக்கு. அது சரியானால் எல்லாம் சரியாகிவிடும்''’என்கிறார்.

"நாகராஜ சோழன்'’ (அமைதிப்படை-2), ‘"மிகமிக அவசரம்'’ போன்ற படங்களைத் தயாரித்தவரும், இப்போது சிம்புவை வைத்து ‘"மாநாடு'’ படத்தை தயாரித்துக் கொண்டி ருப்பவருமான சுரேஷ்காமாட்சி நம்மிடம் பேசும்போது, “""வி.பி.எஃப். சார்ஜ் குறித்து டைரக்டர் பாரதிராஜா ஏற்கனவே திட்டவட்டமாக சொல்லியுள்ளார். இப்போதும் அவரின் முடிவுப்படி நடப்போம்''’என்றார்.

dddd

நட்டி( எ) நட்ராஜை ஹீரோவாக வைத்து ‘"ஹிரோஷிமா'’என்ற படத்தை தயாரித்து டைரக்ட் பண்ணும் கஸாலி, ""தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டாண்டு காலமா நடக்கும் டோல்கேட் கொள்ளை போலதான் வி.பி.எஃப். கட்டணமும். இதேபோல் ஆன்லைன் டிக்கெட் கட்டணத்தில் பங்கு, தியேட்டர்களில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களின் கலெக்ஷனில் பங்கு, இதெல்லாம் எங்களின் நியாயமான எதிர்பார்ப்பு''’என்கிறார்.

dd

""க்யூப் மூலம் படங்கள் திரையிடப்படும் நிலையில், அதற்கான வி.பி.எஃப். கட்டணத்தை தயாரிப்பாளர்கள்மேல் சுமத்தினால் தீபாவளிக்குப் படங்களைத் திரையிடமாட்டோம்'' என அதிரடியாக அறிவித்துள்ளார் பாரதிராஜா. ஆனால், "6 மாதங்களுக்குத் தற்போதைய நிலையே நீடிக்கும்' என தியேட்டர் சங்கத்தின் சுப்பிரமணியன் தெரிவித்ததுடன், "பாரதிராஜாவின் பேச்சு தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும்' கூறியிருக்கிறார்.

சாமி வரம் கொடுத்தும்... பூசாரி முரண்டு பிடிப்பதுபோல, தமிழக அரசு அனுமதித்த பிறகும், திரையுலகினரின் உள் விவகாரங்களால் தீபாவளி படங்கள் உரிய நேரத்தில் ரிலீசாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

சட்டுபுட்டுன்னு பேசி நல்ல முடிவுக்கு வாங்க சினிமா முக்கியஸ்தர்களே!

-பரமு