கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களுக்கான ஒருங்கிணைந்த பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் கடலூரில் செயல்பட்டுவருகிறது. இந்த அலு வலகத்திலுள்ள ஊழியர் கள், பேரூராட்சிகளுக்கு அத்தியாவாசியப் பொருட் களை விநியோகம் செய் பவர்களிடமும், 3 மாவட் டங்களிலுள்ள பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களிடம் தீபாவளிக்கு பணத்தை வசூல் செய்து வைத்துள்ளதாகவும், பின்னர் பிரித்துக் கொள்ள உள்ளதாகவும் தகவல் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்துள்ளது. அதனடிப் படையில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான போலீசார், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்து திடீரென சோதனையில் ஈடுபட்டனர். முதல் தளத்திலுள்ள கூட்ட அரங்கில் மேஜை ட்ராவில் கட்டுக்கட்டாக ஒவ்வொரு பேரூராட்சியின் பெயரையும் எழுதி, கவர் போடப்பட்டு ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்து 960 இருந்துள்ளது. இது தீபாவளிக்கு வசூலித்த பணமென்பது தெரியவரவும், கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கணக்கில் வராத பணம் வைத்திருந்தது தொடர்பாக பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலக செயலாளர் உஷா, தகவல் மேலாண் மை வல்லுனர் வெங்கடேசன், பெண்ணாடம் பேரூராட்சி செயல்அலுவலர் பாஸ்கரன், கிள்ளை பேரூராட்சி பணி ஆய்வாளர் எழில்வாசன் (தற்போது உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்) ஆகிய 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து பேரூராட்சி ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். "ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நேரத்தில் வசூல் செய்து அனை வரும் பிரித்துக்கொள்வது வழக்கம்தான். இந்த வருடம் உதவி இயக்குனர் கூறியதன் பேரில் முன்கூட்டியே அலுவலக ஊழியர்கள் வெங்கடே சன் உள்ளிட்டவர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர். இதனை பிடிக்காத ஊழியர்கள் சிலர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் அளித் துள்ளனர். திடீரென வந்து பணத் தை கைப்பற்றியது எங்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் உயரதிகாரிகள் யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை. அவர்கள் கூறாமல் நாங்கள் யாரிடமும் இதுபோன்று பணம் வசூலிக்க முடியாது'' என்றனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சாந்தியிடம் பேசி னோம். "அலுவலகத்திலிருந்த பணத்தை கைப்பற்றினோம். இதில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு முழுப்பொறுப்பு உதவி இயக் குநர் தான். அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். இதில் இன்னும் யார் தொடர்பில் உள்ளார்கள் என விசா ரணை நடைபெறுகிறது'' என்று கூறினார். கட லூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்கு நர் அப்துல் ரிஜ்வானை தொடர்புகொள்ள முயற் சித்தபோது அவரது தொலைபேசி சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது.
-காளிதாஸ்