கலங்கும் கமாண்டோ படை! கமிஷனர் அளித்த உறுதி!

ff

யரதிகாரிகளின் கண் பார்வை படாமலேயே இருப்பதால் கொரோனா தொற்றின் அச்சத்தினால் புலம்பித்தவிக்கிறார்கள் கமாண்டோ படை வீரர்கள்.

புதுப்பேட்டை ஆயுதப் படையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கமாண்டோ படை, சென்னை கமிஷனரின் கீழும், ஆயுதப்படை துணை ஆணையரின் மேற்பார்வையிலும் இயங்கி வருகிறது. இங்கு இருநூறு கமாண்டோ படை வீரர்கள் பணிபுரிகின்றனர். சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையிலும், அவர்களை பரிசோதனைக்கு அனுப்புவதில்லை. இப்படி பரிசோதனைக்கு அனுப்பாமலேயே, ’ஆயுதப்படை காவ

யரதிகாரிகளின் கண் பார்வை படாமலேயே இருப்பதால் கொரோனா தொற்றின் அச்சத்தினால் புலம்பித்தவிக்கிறார்கள் கமாண்டோ படை வீரர்கள்.

புதுப்பேட்டை ஆயுதப் படையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கமாண்டோ படை, சென்னை கமிஷனரின் கீழும், ஆயுதப்படை துணை ஆணையரின் மேற்பார்வையிலும் இயங்கி வருகிறது. இங்கு இருநூறு கமாண்டோ படை வீரர்கள் பணிபுரிகின்றனர். சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையிலும், அவர்களை பரிசோதனைக்கு அனுப்புவதில்லை. இப்படி பரிசோதனைக்கு அனுப்பாமலேயே, ’ஆயுதப்படை காவலர்கள் அனைவரும் சுழற்சி முறையில் தினமும் கொரோனா சோதனை செய்துவிட்டனர் என்று மேலதிகாரிகள் பூசி மறைக்கின்ற னர். சோதனை செய்யாததால், யார் யாருக்கு தொற்று இருக்குதோ என்ற அச்சத்தில் கமாண்டோ காவலர்கள் தினந்தோறும் பணிக்கு சென்று திரும்புகிறார்கள்.

vv

இந்நிலையில், இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஆறு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் மற்ற காவலருடன் இணைந்து பணி செய்து வந்துள்ளனர். அவர்கள் ஒரே வாகனங்களில் பயணம் செய்து பணியாற்றி வருகின்றனர். இதனால் தொற்று மற்ற காவலர்களுக்கும் பரவியிருக்குமோ என்ற அச்சம் மனதில் இருக்க, அதை உயரதிகாரிகளிடம் கேட்க அஞ்சி, குடும்ப சூழ்நிலை கருதி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதேபோல கமிஷனரின் உத்தரவுப்படி காவலர்களுக்கு சுழற்சி முறையில் 7 நாட்கள் விடுமுறை வழங்கப் படவேண்டும். இந்த விடுமுறையும் அவர்களுக்கு வழங்கப்படுவ தில்லை. இதற்கு காரணம் ஊதியத்துடன் இடர்ப்படி அவர்களுக்கு வழங்கப்படுவதை காரணம் காட்டுவதாக தெரிகிறது.

இது தொடர்பாக பணிபுரியும் காவலர்கள் நம்மிடம் பேசிய போது, ""கமாண்டோ படையை விஜயகுமார் ஐ.பி.எஸ். ஆரம்பித்தார். ஆரம்பத்தில் தெற்கு கூடுதல் ஆணையர் பொறுப்பு வகித்தார். தற்போதுள்ள அதிகாரிகளோ இந்த அணியினை கவனிப்பதில்லை. ஆயுதப்படை துணைஆணையரே கவனித்து வருகிறார். அவரால் ஆயுதப்படை காவலர்கள் போல் கமாண்டோ படை வீரர்கள் நடத்தப்படுகின்றனர். இவர்களுக்கான சிறப்பு உபகரணங்கள் மற்றும் ஊர்திகள் உடை பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இதுவரையிலும் கொரோனா மருத்துவ பரிசோதனை ஏதும் செய்யப்படவில்லை. எங்கள் உயிரில் அக்கறையோ பொறுப் போ இன்றி இருக்கும் சென்னை கமிஷனர் எப்போதுதான் கவனிப்பாரோ?'' என்று புலம்பித் தள்ளினர்.

இது தொடர்பாக சென்னை கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதனிடம் நாம் கேட்ட போது, ""ஆரம்பகட்டத்தில் இருந்தே கொரோனா பற்றியான விழிப்புணர்வை சரியான முறையில் கடை பிடித்து வருகிறோம். தற்போது நீங்கள் சொல்வது போன்று ஏதாவது தவறு நடந்திருந்தால் நிச்சயம் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கமாண்டோ படை வீரர்களுக்கு நிச்சயம் பரிசோதனை செய்யப்பட்டு அவர் களுக்கான தேவைகள் முழுமையாக சரி செய்து தரப்படும்'' என்றார் உறுதியாக.

-அ.அருண்பாண்டியன்

nkn130620
இதையும் படியுங்கள்
Subscribe