மிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன. இதில் 24 மாவட்டங்களைச் சேர்ந்த 33 பேரை தனது தலைமையிலான அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். செங்கல்பட்டு, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, சேலம், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், தேனி, திருநெல்வேலி, தென்காசி என 14 மாவட் டங்களைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் பட்டியலில் இடம்பெறவில்லை.

அமைச்சரவையில் யாரைச் சேர்ப்பது என்பது முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பம் என்கிறது அரசியலமைப்புச் சட்டம். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மீது சாதி, மத பிரதிநிதித்துவப் பிரச்சனை எழவில்லை. ஆனால் மாவட்டங்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

mm

இதுகுறித்து முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் உத்தரவு, அரசியல் சட்ட திருத்தத்தின்படி, மொத்த உறுப்பினர்களில் 15 சதவிதம் வரை அமைச்சர்களை நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தில் 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், 15 சதவித கணக்குப்படி 36 பேர் அமைச்சர்களாக இருக்கலாம். தற்போது முதல்வருடன் சேர்த்து 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.

Advertisment

தருமபுரி மாவட்டத்தில் ஒரு இடத் தில்கூட தி.மு.க. வெற்றி பெறவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர், ஒசூர் தொகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெற்றது, ஆனால் அமைச்சர் பதவிக்கான தகுதி இன்னும் அவர்களுக்கு வரவில்லை. சேலம் மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளில் சேலம் வடக்கில் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் மட்டுமே வெற்றிபெற்றார். கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் தோல்வி. அதனால் இந்த இரண்டு மாவட்டங்களையும் பட்டியலில் சேர்க்கவில்லை.

தென்காசியின் 5 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே தி.மு.க. வெற்றி. பூங்கோதை ஆலடி அருணா போன்றவர்களும் வெற்றி பெறவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கி, அந்த மாவட்டத்தைச் சமாதானப் படுத்தியிருக்கிறார் ஸ்டாலின். திண்டுக்கல் மாவட்டத்தில் ஐ.பி., சக்கரபாணி என இருவருக்கு அமைச்சரவையில் இடம் தந்ததால் 4 தொகுதிகளைக் கொண்ட தேனி மாவட்டத்துக்கு வழங்கவில்லை.

அதேபோல் பெரம்பலூரில் இருந்து பிரிக்கப்பட்ட அரியலூர் மாவட்டம் மிகச்சிறியது. இரண்டு தொகுதிகளை மட்டுமே கொண்டது. பெரம்பலூர் -அரியலூர் என இரண்டு மாவட்டத்திலும் குன்னம் தொகுதி வருகிறது. அதனால் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வான அரியலூர் மா.செ. சிவசங்கர் அமைச்சராக்கப்பட்டார்.

Advertisment

mm

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தி.மு.க. பெருவாரியாக வெற்றிபெற்றிருந்தும் அமைச்சர் பதவி வழங்கப்படாதது குறித்து கடந்த இதழிலேயே விவரித்திருந்தோம். அமைச்சர் பதவிக்கு ஈடாக கோ.வி.செழியனுக்கு கொறடா பதவி வழங்கி சமாதான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஓட்டு வங்கியாக இருந்த முத்தரையர்கள், இந்தமுறை தி.மு.க.வை பெருவாரியாக வெற்றிபெற வைத்தனர். அதனால் அந்த சாதிக்கான பிரதிநிதித்துவப்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வெற்றிபெற்ற மெய்யநாதனுக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதனை அறிந்த மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான ரகுபதி, "நான் கட்சியில் சீனியர். எனக்கு அமைச்சர் இல்லன்னா என்னைய யார் மதிப்பாங்க'' என முதல்வரிடம் கண்ணீர்விட்டதால்... கடைசி நேரத்தில் ரகுபதி பெயர் சேர்க்கப்பட, அந்த மாவட்டத்துக்கு இரண்டானது. தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்திலும் இதே நிலைதான்.

விழுப்புரத்துக்கு ஏன் இரண்டு அமைச்சர் பதவி எனக் கேட்கிறார்கள். விழுப்புரம் மாவட்ட பிரதிநிதியாக செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான் அமைச்சராக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெற்றிபெற்றுள்ள திருக்கோவிலூர் தொகுதி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிறது, அந்த மாவட்ட பிரதிநிதியாகவே அவர் அமைச்சராக்கப்பட்டுள்ளார். "காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்றவை தனி மாவட்டங்களானாலும் சென்னை யோடு இணைத்தே பார்க்கப்படுகின்றன. அதனால் சென்னை அமைச்சர்களே அதற்கும் சேர்த்து கணக்கில் கொள்ளப்பட்டனர்' என்கிறார்கள்.

அமைச்சரவை மாற்றம் நடக்கும்போது, செங்கல்பட்டு, திருப்பத்தூர், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி மாவட்டங்களில் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள் தி.மு.க.வின் மேல்மட்டத்தில்.