கள்ளக்குறிச்சி தனித்தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக. இருப்பவர் பிரபு இவரது தந்தை தியாகதுருகம் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளராக பல ஆண்டுகளாக பதவிவகித்து வருகிறார்.
ஜெ. மறைவுக்குப்பின் உளுந்தூர் பேட்டை எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு மாவட்டச் செயலாளர் பதவி தரப்பட்டது. பிரபுவின் தொகுதியில் அமைச்சர்களை அழைத்துவந்து நடத்தப்படும் அரசு விழாக்களுக்குக் கூட தகவல் தருவதில்லை என்ற குமுறலில் இருந்த பிரபு, டி.டி.வி. தினகரனுடன் இணைந்தார்.
மீண்டும் முதல்வரைச் சந்தித்து அ.தி.மு.க.வில் சங்கமித்ததோடு முதல
கள்ளக்குறிச்சி தனித்தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக. இருப்பவர் பிரபு இவரது தந்தை தியாகதுருகம் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளராக பல ஆண்டுகளாக பதவிவகித்து வருகிறார்.
ஜெ. மறைவுக்குப்பின் உளுந்தூர் பேட்டை எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு மாவட்டச் செயலாளர் பதவி தரப்பட்டது. பிரபுவின் தொகுதியில் அமைச்சர்களை அழைத்துவந்து நடத்தப்படும் அரசு விழாக்களுக்குக் கூட தகவல் தருவதில்லை என்ற குமுறலில் இருந்த பிரபு, டி.டி.வி. தினகரனுடன் இணைந்தார்.
மீண்டும் முதல்வரைச் சந்தித்து அ.தி.மு.க.வில் சங்கமித்ததோடு முதல்வரிடமும் துணைமுதல்வரிடமும் நிலைமைகளை எடுத்துச் சொன்னார் பிரபு. சமீபத்தில் மாவட்டத்தில் காலியாக இருந்த கட்சிப் பதவிகளை நிரப்பும் போதும், பிரபுவை ஓரங்கட்டியே வைத்தார் குமரகுரு.
எனினும் ஓ.பி.எஸ். இ.பி.எஸ். இருவரும் சட்டஅமைச்சர் சண்முகத்தின் பரிந்துரையின் பேரில் பிரபுவுக்கு மாநில பேரவை இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளனர். கள்ளக் குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க குரல்கொடுத்தது, நெருக்கடியான கள்ளக்குறிச்சி நகர பஸ் நிலைய விரிவாக்கத்தில் அக்கறைகாட்டியது, கட்சி பேதமின்றி தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகி உதவுவது இவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.
வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க பிரசாந்த் கிஷோர் ஆலோசனையின்படி தி.மு.க.வில் வேட்பாளர் தேர்வு உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதுபோல, அ.தி.மு.க.வில் சுனில் ஆலோசனையின்படி வேட்பாளர் தேர்வு, பிரச்சாரப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் அ.தி.மு.க.வில் யாருக்கு வாய்ப்பு கொடுத் தால் தொகுதியில் வெற்றிபெற முடியும் என்று ஆய்வுசெய்த சுனில் குழுவினர் கள்ளக் குறிச்சியில் பிரபு பெயரை டிக் செய்துள்ளனராம்.
விழுப்புரம் மாவட்டச் செயலாளரும் சட்டம்- கனிம வளத்துறை அமைச்சருமான சி.வி. சண்முகத்திற்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெற வைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள் ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் யார் யாருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதை ஆய்வுசெய்து அவரும் பிரபுவுக்கே முன்னுரிமை தந்துள்ளார்.
மாவட்டச் செயலாளர் மீதான பயத்தால், முன்பு பிரபுவைச் சந்தித்துப் பேசவும், வாழ்த்தவும் தயங்கிய கட்சிப் பொறுப்பிலுள்ளவர்கள் இந்நிகழ்வுக்குப் பின் பிரபுவை நேரில்சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
""நான் முதல்வராக வேண்டுமென்றால் ஒவ்வொரு தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். அதற்குத் தகுதியானவர்களை தேர்வு செய்து நிறுத்தவேண்டும். மா.செக்களின் விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வுசெய்தால் நான் முதலமைச்சராக முடியாது'' என்று எடப்பாடி கறாராகக் கூறியுள்ளதால், பிரபுவுக்கு முக்கியத்துவமளித்து கட்சிப்பணியை மேலும் தீவிரப்படுத்துமாறு கூறி அனுப்பிவைத்துள்ளனர்