"காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்கு, சிந்தனையாளர் கூட்டத்தில் மூன்று முக்கிய குழுக்களை, அக்கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ள நிலையில், “விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்து வதற்கு கடந்த 12 வருடங்களாகப் போராடியும் பலனில்லை''’என ஆதங்கப்பட்டார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் அன்னராஜ். அதற்கான காரணங்களை அவரே பட்டியலிட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm_63.jpg)
1937-ல் இருந்து 1967 வரையிலும் 30 ஆண்டு காலம் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அதிலும் குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.எஸ்.குமாரசாமி ராஜாவும், காமராஜரும் சுமார் 13 வருடங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர். மத்தியிலும் சுமார் 54 வருடங்கள் காங்கிரஸ் பிரதமர்களே ஆட்சி நடத்தினர். ஆனா லும், இம்மாவட் டத்தில் விருது நகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் இயங்குவதற்கு சொந்தக் கட்டடம் எதுவும் இல்லை. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த தங்கபாலு சிபாரிசில், விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்காக, கட்சிக்கென்று பெரிய அளவில் கட்டடம் ஒன்றைக் கட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு, 2004-ல் விருதுநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள் ளார் அன்னராஜ்.
அரசு புறம்போக்கு நிலத்தை மார்க்கெட் ரேட்டில் கிரயம் செய்து, அங்கு காமராஜர் பவன் என்ற பெயரில் கட்சி அலுவலகமும், ராஜீவ்காந்தி நினைவு மண்டபமும், பொதுக் கூட்டம் நடத்துவதற்கான மைதானமும் அமைக்கவேண்டும் என முடிவெடுத்து, சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமம், புல எண் 308-ல் உள்ள 17 ஏக்கர் நிலத்தைத் தேர்வுசெய்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலோடு, 2010-ல் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்தார் அன்னராஜ். கடிதம் மூலம் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தெரிவித்து, நிதியுதவியும் கேட்டார். பிரதமர் அலுவலகம், தமிழக அரசின் முதன்மைச் செயலாளருக்கு இதுகுறித்து கடிதம் (எண் 8.3.2010/டஙட3/155589 நாள் 27-4-2010) எழுதியது. தேவை யான நடவடிக்கை எடுக்கும்படி விருதுநகர் மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொண் டுள்ளதாக, தமிழக அரசின் வருவாய்த்துறை சார்பில் பிரதமர் அலுவலகத்துக்கு பதில் (கடித எண் 25438/கஉ5(2)/2010-2 நாள் 28-6-2010) அனுப்பப்பட்டது. இடம்கோரப்பட்டது தமிழக ஆளுநர் வரை சென்றும் நிறைவேறவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm1_16.jpg)
நம்மிடம் அன்னராஜ், “தேசியக் கட்சியான காங்கிரஸ் தமிழகத்தில் வளர்ந்துவிடக்கூடாது என, அன்றைய அ.தி.மு.க. அரசு காங்கிரஸின் கோரிக்கையைக் கிடப்பில் போட்டது. நாங்கள் கேட்ட அந்த 17 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து தனதாக்கிக்கொள்ள, உள்ளூர் அதிரடி அரசியல் பிரமுகர் ஒருவர் காய்நகர்த்தினார். நான், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் 2013-ல், தமிழக அரசு செயலர்கள் மூவர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், சிவகாசி வட்டாட்சியர் ஆகிய ஐவரை பிரதிவாதிகளாக்கி, அபிடவிட் தாக்கல் செய்தேன். இந்த நிலையில், அப்போது அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி, அந்த இடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவர முயற்சித்து, அதற்கான வேலைகளில் இறங்கினார். கல்விக்கண் திறந்த காமராஜருக்கு கெட்ட பெயர் ஏற்படுமென்று, காங்கிரஸ் தரப்பில் தடையுத்தரவு எதுவும் வாங்கவில்லை.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தபோது, ‘அரசு கல்லூரி வருவதற்கு இடையூறு பண்ணும் விதத்தில் தடையுத்தரவு பெறாமல், கல்விக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் தந்துள்ளது. வேறு சர்வே எண்களில் நினைவு மண்டபம் எழுப்புவதற்குத் தகுதியான இடமிருந்து, மனுதாரர் தேர்வுசெய்தால், எதிர் மனுதாரர்களை அணுகி, இடம்கோரலாம் என 12-9-2016-ல் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm2_31.jpg)
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர்தான் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினராகவும், சிவகாசி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளனர். விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஸ்ரீராஜா சொக்கர் இருக்கிறார். இவர்கள், அவரவர் வேலையில் பிசியாக இருக்கிறார்கள். கட்சியின் வளர்ச்சியோ, முன்னேற்றமோ இவர் களது சிந்தனையில் துளியும் இல்லை. ஏனென்றால், இவர்களில் யாரும் கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்து பொறுப்புக்கு வந்தவர்கள் இல்லை. இதே சிவகாசியில், காமராஜர் சாலையில் தொண்டர் துரைச்சாமி நினைவகம் என்ற பெயரில், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சிக்கென்று சொந்தக் கட்டிடம் உள்ளது. சிவகாசி, சாட்சியாபுரத்தில் எந்த உபயோகத்திலும் இல்லாத புறம்போக்கு நிலங்கள், இரண்டு இடத்தில் உள்ளன. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் யாரும், சொந்தக் கட்டட விஷயத்தில் ஒரு துரும்பைக்கூட நகர்த்தவில்லை. இப்படியிருந்தால், தமிழகத்தில் காமராஜரின் பொற்கால ஆட்சி எப்படி சாத்தியமாகும்?''’என கவலையை வெளிப்படுத்தினார்.
‘விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கென்று சொந்தக் கட்டடம் கட்டும் முயற்சியில் ஏன் கைகோர்க்கவில்லை?’ என்ற கேள்விக்கான விளக்கம்பெற, விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்ரீராஜா சொக்கரை, அவரது கைபேசி (99ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்55) எண்ணில் தொடர்புகொண் டோம். குறுந்தகவலும் அனுப்பினோம். பதில் வரவில்லை. அவர் பதிலளிக்க முன்வந்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/cm-t.jpg)