மதுரையில் திருமா வளவன் முதன்முதலில் நட்ட கொடிக்கம்பம் அகற்றப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பி யுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்டபோது முதன்முதலாக மதுரை கே.புதூர் பகுதியில், கட்சியின் கொடிக் கம்பத்தை நட்டு திருமாவளவன் கொடியேற்றியிருந்தார். இந்தக் கம்பம் தற்போது அகற்றப் பட்டிருக்கிறது. சாலையை ஆக்கிரமித்து கம்பம் நடப் பட்டிருப்பதாக கூறி போலீசார் 14-ஆம் தேதி இக்கொடிக் கம்பத்தை அகற்றினர். மதுரை வரும் திருமாவளவனை வைத்து இந்தக் கம்பத்தில் கொடியேற்றத் திட்டமிட்ட நிலையில் கம்பம் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால், 15-ஆம் தேதி நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து காலையில் தி.மு.க. அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த் தைக்குப் பின்பு அவர் கலெக்டர் சங்கீதாவிடம் இதுகுறித்துப் பேசியபோது, "விதிகள்படிதான் மாவட்ட நிர்வாகம் செயல்பட முடியும். நான் என்ன செய்ய?'' என தெரிவித்தவர், "சரிங்க சார், காலையில் வரசொல்லுங்க பார்த்துக்கொள்கிறேன்''’என்று அமைச்சரிடம் பேச, அன்று காலை
மதுரையில் திருமா வளவன் முதன்முதலில் நட்ட கொடிக்கம்பம் அகற்றப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பி யுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்டபோது முதன்முதலாக மதுரை கே.புதூர் பகுதியில், கட்சியின் கொடிக் கம்பத்தை நட்டு திருமாவளவன் கொடியேற்றியிருந்தார். இந்தக் கம்பம் தற்போது அகற்றப் பட்டிருக்கிறது. சாலையை ஆக்கிரமித்து கம்பம் நடப் பட்டிருப்பதாக கூறி போலீசார் 14-ஆம் தேதி இக்கொடிக் கம்பத்தை அகற்றினர். மதுரை வரும் திருமாவளவனை வைத்து இந்தக் கம்பத்தில் கொடியேற்றத் திட்டமிட்ட நிலையில் கம்பம் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால், 15-ஆம் தேதி நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து காலையில் தி.மு.க. அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த் தைக்குப் பின்பு அவர் கலெக்டர் சங்கீதாவிடம் இதுகுறித்துப் பேசியபோது, "விதிகள்படிதான் மாவட்ட நிர்வாகம் செயல்பட முடியும். நான் என்ன செய்ய?'' என தெரிவித்தவர், "சரிங்க சார், காலையில் வரசொல்லுங்க பார்த்துக்கொள்கிறேன்''’என்று அமைச்சரிடம் பேச, அன்று காலை கலெக்டரின் நேர்முக உதவியாளரைச் சந்தித்து, கொடிக் கம்பத்தை ஊன்ற மனு அளித்தனர் விடுதலை சிறுத்தை கட்சியினர். அதன்பின்பும் முறையான அனுமதி கிடைக்க வில்லை.
இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி மதுரை வந்த கட்சித் தலைவர் திருமாவளவன், "மதுரை கலெக்டராக சங்கீதா பொறுப்பேற்ற நாளிலிருந்து, வி.சி.க., எங்கு கொடியேற்றி னாலும் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார்.
உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்றபிறகும், திருமங்கலம் அருகே மேலப்பட்டியில் கொடியேற்ற அனுமதி தரச் சொன்னபிறகும், அனுமதி தர மறுத்தார். பேரையூரில் இதே போன்ற சம்பவம். அப்போதும் இதே ஆட்சியர்தான் வி.சி.க. விற்கு எதிராகச் செயல்பட்டார். தற்போது மதுரை புதூரில் ஏற்கனவே இருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.
சாலையை அகலப்படுத்து கிறோம் என்றதால் ஒதுக்குப் புறமாக இந்த கொடிக்கம்பம் நடப்பட்டிருந்தது. கொடியேற்ற நான் வரவிருந்த நிலையில் வேண்டுமென்றே இரவோடு இரவாக கொடிக்கம்பத்தை அகற்றவேண்டிய அவசிய மென்ன? விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராகத் தொடர்ச்சி யாக தனிப்பட்ட முறையில் கலெக்டர் சங்கீதா செயல்படுவதாகத் தெரிகிறது. இந்நிலை தமிழகமெங்கும் நீடிக்கிறது''’என ஆவேசமாகக் கூறினார்.
இந்நிலையில், போலீசாருடன் மாவட்ட நிர்வாகம் ஆலோசித்தது. போலீசார் அகற்றிய கொடிக்கம்பம் கட்சியினரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதூருக்கு வந்த திருமாவளவன், கொடிக்கம்பம் அமைய உள்ள இடத்தை பார்த்துவிட்டு, செப்.20-ல் கொடியேற்றுவதாக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
போராட்டத்திலிருந்த விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாநில பொறுப்பாளர் செல்லப் பாண்டி, "தி.மு.க. அரசுக்கு எப்போதுமே கொள்கை யளவில் உறுதியாகவும் உண்மையாகவுமே இருந்துவருகிறோம். ஆனால் வி.சி.க.வின் கொடிக்கம்பங்களை தமிழகத்தில் கடந்த 3 வருடங் களாக எங்குமே ஊன்றமுடியவில்லை. எந்த கிரா மத்தில் கொடிக்கம்பம் அமைத்தாலும் முதலில் எதிர்ப்பு தெரிவிப்பது பா.ஜ.க.வினர்தான். அந்தந்த பகுதி தி.மு.க.வினர் எங்களுக்கு ஆதரவாகவே இருந்தாலும், அரசின் உயர்பதவிகளிலுள்ள அதிகாரிகள் வி.சி.க. கொடியேற்ற தடைபோடுகின்றனர். வட்டாட்சியரே கொடிக்கம்பம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து புகார்கொடுக்கிறார். ஏப்ரல் 14ல் உசிலம்பட்டி பேரையூரில் கொடிக்கம்பத்தை அகற்றினார்கள். அந்தப் பகுதி வி.சி.க.வைச் சேர்ந்த பெண்கள் பீடத்தின்மீது ஏறிநின்று முழக்கமிட்டதால் அவர்கள்மீது காவல்துறை தடியடி நடத்தியது. அடுத்து திருமாவூரில் தடியடி.
கடந்த 3 வருடங்களில் தமிழகமெங்கும் 21 இடங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கமிஷனர்கள், வருவாய்துறை கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் என அனை வரும் ஒன்றுசேர்ந்து விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக நெருக்கடி தர ஆரம்பித்திருக் கிறார்கள்.
தற்போதுகூட மதுரை புதூர் சம்ப வத்தில் அமைச்சர் கலெக்டரிடம் "நாளை காலை திருமா வந்து கொடியை ஏற்றி வைக்கும் நேரத்தில் பிரச்சினையை ஏன் வளர்க்கிறீர்கள். உடனே சரி செய்யுங்கள்' என்றதற்கு, “"சரிங்க சார் நாளை காலை என்னை வந்து பார்க்கசொல்லுங்கள் சரிசெய்துவிடுகிறேன்'’என்று சொல்லிவிட்டு, நாங்கள் அடுத்த நாள் காலை வருகிறோம் என்று தெரிந்து அலுவலகத்திற்கே வரவில்லை. கலெக்டரிடம் தொடர்புகொள்ள எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. தலைவர் திருமாவிடம் விசயத்தை சொல்லி, அவர் எ.வ.வேலுவிடம் தொடர்புகொண்டு பேசியபிறகு தான் வழிக்கு வந்தார்.
வி.சி.க. கொடியை மட்டும் ஏன் இந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் முழுவீச்சுடன் எதிர்க்கிறார்கள் என்பதற்கு ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கிறது.
மதுரையில் 2021-ல் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கவந்த பா.ஜ.க.வினரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினருக்கும் வி.சி.க.வுக்கும் மோதல் போக்கு தொடர்ந்துவருகிறது.
அப்போது, “இந்துத்துவா கொள்கை அடிப்படையில் இயங்குகிற கட்சி பா.ஜ.க., அம்பேத்கர் கொள்கைகள் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிரானது. எனவே பா.ஜ.க.வினர் அம்பேத்கருக்கு மாலைபோட எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றார்” திருமா. அதுமுதற் கொண்டே ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உயரதிகாரிகளை வைத்து விடுதலை சிறுத்தைகளை தமிழகத்தில் வளர விடாமல் செய்து பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கிருக்கிறார்கள் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸும்.