"நான் செங்கல்பட்டு மாவட் டம், கிழக்கு தாம்பரத்தை அடுத்த சேலையூர், மணிமேகலை 2-வது குறுக்குத் தெருவில் வசித்துவருகிறேன். என் பெயர் நாகரத்தினம்மாள் (68). என் கணவர் பெயர் லட்சுமணன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார், முதல் மகன் முத்து, இரண்டாவது மகன் முரளி, மகள் ரேவதி, அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வாழ்ந்துவருகின்ற னர். கடந்த நாற்பதாண்டு காலம் பால் வியாபாரம் செய்து சுயமாகச் சம்பாதித்து அதே பகுதியில் 2,555 சதுர அடி நிலத்தை வாங்கி, கடன் வாங்கி வீடுகள் கட்டினேன்
"நான் செங்கல்பட்டு மாவட் டம், கிழக்கு தாம்பரத்தை அடுத்த சேலையூர், மணிமேகலை 2-வது குறுக்குத் தெருவில் வசித்துவருகிறேன். என் பெயர் நாகரத்தினம்மாள் (68). என் கணவர் பெயர் லட்சுமணன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார், முதல் மகன் முத்து, இரண்டாவது மகன் முரளி, மகள் ரேவதி, அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வாழ்ந்துவருகின்ற னர். கடந்த நாற்பதாண்டு காலம் பால் வியாபாரம் செய்து சுயமாகச் சம்பாதித்து அதே பகுதியில் 2,555 சதுர அடி நிலத்தை வாங்கி, கடன் வாங்கி வீடுகள் கட்டினேன்.
இளைய மகன் என்னோடு வாழ்ந்து வந்தான். முதுமைக் காலத்தில் கவனித்துக்கொள்வான் எனக் கருதி, என் பெயரில் இருந்த சொத்தான வீட்டை, மூன்று வருடம் முன் எனது இளைய மகன் முரளிக்கு எழுதி வைத்து விட்டேன். சொத்து கை மாறிய தும் மகனின் மனமும் மாறிவிட் டது. மனைவியுடன் சேர்ந்து கொண்டு கொடுமைப்படுத்தத் துவங்கினான். கடைசியில் வீட்டைவிட்டு துரத்திவிட்டனர்.
இதுதொடர்பாக செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியரிடம், "மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான சட்டம் 2007-ன் கீழ் புகாரளித்திருந் தேன். புகாரைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், தாம்பரம் வருவாய் கோட் டாட்சியருக்கு புகாரின் மீது தக்க விசாரணை செய்ய உத்தரவிட் டார். மூன்று வருடங் களுக்குப் பின்னர் அந்த சொத்தை நாகரத்தினம்மாள் பேரில் மாற்றம்செய்து மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்தார்.
முதியவர்கள், தங்களை பிள்ளைகள் பராமரிக்கவில்லை என மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான சட்டம் 2007-ன் கீழ் புகார் கொடுத்தால் அவர்களுக்காக இயற்றப்பட்ட சிறப்பு சட்டத் தின்கீழ் அவர்களின் சொத்தை மீட்க முடியும். தாம்பரம் ஆர்.டி.ஓ. அறிவுடைநம்பி செய்த விசாரணையில் மகன் முரளி தாயைத் தாக்கியது, சரிவர உணவளித்துக் கவனிக்காதது தெளிவாக தெரியவந்தது'' என்கிறார்.
மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி, மகனிடமிருந்து அந்த வீட்டை மீட்டு, உடனடியாக தாய் நாகரத்தினம் மாளிடம் ஒப்படைக்க வேண்டிய தாம்பரம் வட்டாட்சியர் கவிதா, கடந்த மூன்று மாதமாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல், மெத்தனப்போக்கில் செயல்பட்டுவரு கிறார். ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணம் கூறி, தான் திருப்பியனுப்பப்படுவதாகக் கூறி கண்ணீர்விடுகிறார் நாகரத்தினம்மாள்.
"26-08-22-ஆம் தேதி காலை 10 மணிக்குள் முரளி வீட்டைக் காலிசெய்து தாய் நாகரத்தினம்மாளிடம் ஒப்படைக்கவேண்டும். இல்லையெனில் அன்று பிற்பகல் 2 மணியள வில் வீட்டின் பூட்டை உடைத்து மனுதாரரிடம் ஒப்படைக்கப்படும்' என வருவாய்த்துறையினர் நோட்டீஸ் ஒன்றினை வீட்டின் வாயிலில் ஒட்டிச் சென்றனர். பிறகு அவர்கள் வரவேயில்லை' என்கிறார் நாக ரத்தினம்மாள்.
இதுதொடர்பாக தாம்பரம் தாசில்தார் கவிதாவை சந்திக்கவும், தொடர்புகொள்ளவும் முயன்றோம் நடக்கவில்லை. சாமி வரம் கொடுத்தாலும், பூஜாரி அனு மதிக்காத கதையாக நாகரத்தி னம்மாள் தவிக்கிறார்.