லைஞர் மறைவுக்குப் பின் ஒரு வருடத் திற்கும் மேலாக சைலண்ட் மோடிலேயே இருக்கிறார் மு.க.அழகிரி. அவரது ஆதர வாளர்களின் எண்ணிக்கையும் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையில்தான் இருக்கிறது. அவர்களிலும் மிக நெருக்கமானவர்களின் வீட்டு விசேஷங்களுக்குப் போவதுடன் சரி, மைக்கில் எதுவும் பேசாமல் திரும்பிவிடுவார்.

Advertisment

aaa

அப்படி இருந்தும் சில மாதங்களாக ரொம்பவே மனவேதனைக்குள்ளாகியிருக்கிறா ராம் மு.க.அழகிரி. அவரின் மனவேதனையின் வெளிப்பாடு, கடந்த 01-ஆம் தேதி திருமண விழாவில் வெளிப்பட்டது. தனது தீவிர ஆதர வாளரான மாலபட்டி முருகனின் இல்லத் திருமண விழாவுக்குச் சென்றார் அழகிரி. எப்போதும் காரிலிருந்து இறங்கும்போதே மிடுக்குடனும் பளீர் சிரிப்புடனும் இறங்கும் அழகிரி, அன்றைய தினம் மெதுவாக இறங்கி, மெதுவாக நடந்து சென்று, திருமண நிகழ்ச்சிக்கு வந்தார்.

Advertisment

அவரைப் பார்த்ததும், கையைப் பிடித் துக்கொண்ட ஒரு தொண்டர், “"அண்ணே மீண்டும் நம்ம கட்சிக்கு வாங்கண்ணே... நாங்கெல்லாம் உங்களுக்காக காத்திருக்கோம்ணே' என கதறி அழுததும், அழகிரியின் கண்களிலும் நீர் தளும்பியது. திருமணத்தை நடத்திவிட்டு, காரில் ஏறும் போது, லேசாக தடுமாறி, பி.எம்.மன்னனின் தோளைப் பிடித்தபடி காரில் ஏறி வீட்டுக்குச் சென்றார் அழகிரி.

aaaஅந்த திருமணத்தில் கலந்து கொண்ட அழகிரி விசுவாசியான பத்மநாதன் நம்மிடம், “""மகன், மருமகள் லண்டன் போய்விட்டனர். இப்போது மதுரை வீட்டில் அண்ணியாரும் பேரன் இதயநிதியும்தான் இருக்கி றார்கள். இப்பவும் அவரைப் பார்க்க கட்சிக்காரங்க போனா, "இங்க வர்றதப் பார்த்தா உங்களையும் கட்சிய விட்டு நீக்கிருவாங்க. போய் பொழப்ப பாருங்கய் யா'ன்னு சொல்றாரு. பழைய மாதிரி சுறுசுறுப்பு அவரிடம் இல்லை. தலைவர் குடும்பத்துல யாருக்குமே சுகர் கிடையாது. ஆனா இப்ப "அ'னாவுக்கு சுகர் இருக்குதாம்; மனவேதனை அவரைப் பாடாய்ப் படுத்துதுங்க'' என்றார்.

Advertisment

மற்றொரு விசுவாசியோ, ""யார், யாரையோ கட்சியில சேர்க்குறாக. வேற கட்சியில இருந்து வர்றவு களையும் சேர்த்துக்குறாக. ஆனா அண்ணனை மட்டும் சேர்க்கமாட்டேங்குறாகளே. அவருக்கு உடம்புக்கு முடியாம இருக்குற இப்பக்கூட உறவுகள் யாரும் வந்து எட்டிக்கூடப் பார்க்கல. அண்ணனோட குடும்ப டாக் டர் பிரபாகரன்தான், தினமும் வந்து வைத்தியம் பார்த் துட்டு, "சுகர் லைட்டாத்தான் இருக்கு, மனசை ரிலாக்சா வச்சுக்கங்க'ன்னு ஆறுதல் சொல்லிட்டுப் போறாரு. பி.ஜே.பி. கட்சியிலருந்துகூட தூதுவிட்டப்ப, "நான் கலைஞர் மகன்யா'ன்னு கம்பீரமா சொன்னாரு'' என்றார்.

அழகிரியின் நிழலான பி.எம்.மன்னனும் முபராக் மந்திரியும், “""மனக்கஷ்டம் இல்லாமலா இருக்கும்? அண் ணன் மீண்டும் உற்சாகத்துடன் களம் இறங்குவார்'' என சுருக்கமாக முடித்துக் கொண்டார்கள்.

-அண்ணல்