பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக ஆளுநரை தொடர்பு படுத்தி கட்டுரை வெளியிட்டதாக, ஆளுநரின் இணைச்செயலாளர் செங்கோட்டை யன் அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

nn

2018, அக்டோபர் 9-ஆம் தேதி புனே செல்வதற்காக நக்கீரன் ஆசிரியர் கோபால், மருத்துவர் ராமச்சந்திரன், நக்கீரன் இணையதள ஆசிரியர் வசந்த் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தபோது திடீரென ஏர்போர்ட் ஏ.சி. விஜயகுமாரால் மடக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார். “"உங்க மேல ஒரு புகார் பதிவாயிருக்கு” என்பதைத் தவிர, கைதுக்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. எங்கே கொண்டுசெல்கிறார்கள் என்பதையும் போலீசார் தெரிவிக்கவில்லை.

nn

Advertisment

இதற்கிடையில் ஆசிரியர் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டதும், நிர்மலாதேவி தொடர்பான செய்திகளை வெளியிட்டது தொடர்பாக இந்திய குற்றவியல் சட்டம் 124-ன் கீழ் கைது செய்யப்பட்டதும் பல்வேறு முயற்சி களால் தெரியவந்தது. இந்தச் சட்டம் இந்திய குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநரை பணிசெய்யவிடாமல் தடுப்பவர்கள்மீது பிரயோகிக்கும் சட்டமாகும்.

நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டது தெரிந்து அங்குவந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கைதுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன் உடனடியாக சிந்தாதிரிப்பேட்டை வந்து ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் ஆசிரியரைச் சந்திக்கமுயன்றார். ஆனாலும் போலீஸார் அவரை அனுமதிக்கமறுக்க, “நீதித்துறையையும் காவல்துறையையும் விமர்சித்த எச்.ராஜாவை அழைத்து ஆளுநர் விருந்தளிக்கிறார். பத்திரிகையில் செய்தி வெளியிட்டதற்காக அதன் ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்'’என்று கூறி நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். எனவே அவரையும் கைது செய்தனர்.

nn

அங்கு எதிர்க்கட்சித் தலைவர் (அப்போது) தளபதி ஸ்டாலின் வருகிறார் என்றதும் அவசர அவசரமாக மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில், திருவல்லிக் கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனைக்கு ஆசிரியர் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அங்குவந்த மு.க. ஸ்டாலின், ஆசிரியரை சந்தித்துப் பேச முயல, அவரை அனுமதிக்கவில்லை. உடனே ஸ்டாலின் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் மருத்துவரைப் பார்க்கவேண்டுமென, வலியுறுத்திய பிறகே அனுமதித்தனர். அவ ருடன் முன்னாள் ஒன்றிய, மாநில அமைச்சர்கள் துரைமுருகன், ஜெகத்ரட்சகன், பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராஜா மற்றும் சேகர்பாபு ஆகியோரும் வந்து பார்த்ததுடன், கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வருவது தெரிந்ததும், அங்கிருந்து ஆசிரியரை அல்லிக்குளம் நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றனர்.

நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர் என்ற முறையில் திருமாவளவன் வருகை தர, சி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளரான முத்தரசனும் வர, அவரை அனுமதிக்க வில்லை. அவரோ திருமாவளவனின் நீதிமன்ற உதவியாளர் எனக் கூறிக்கொண்டு உள்ளே நுழைந்தார். இந்து குழுமத்தின் முன்னாள் ஆசிரியரான என்.ராமை அன்று காலையில்தான் தமிழக ஆளுநர் விருந்துக்கு அழைத்திருந்தார். அப்போது நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்ட தகவல் தெரியவந்து, அதுகுறித்து கேட்க, அவர்கள் பதிலெதுவும் தரவில்லை. எனவே உடனடியாக அங்கிருந்து கிளம்பிய என்.ராம், நீதிமன்றத்துக்கு வருகைதந்தார்.

Advertisment

nn

எழும்பூர் 13-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாத் முன் நக்கீரன் கோபால் ஆஜர்படுத்தப் பட்டார். நக்கீரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.டி. பெருமாள் தலைமையில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், வழக்கறிஞர்கள் இளங்கோவன், சிவகுமார், பாவேந்தன், ஆரோக்கியம், வெங்கடாசல பதி வர்கீஸ், டெல்லிராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழு ஆஜராகியது. “"கட்டுரைகள் வெளியான காலத் தில் ஆளுநரின் எந்த சட்டரீதியான பணி தடைப் பட்டது? ஆளுநரும் நக்கீரன் ஆசிரியரும் சந்திக்கவே இல்லை. பிறகெப்படி ஆளுநரின் பணிகளை ஆசிரியர் முடக்கியிருக்க முடியும்' என்ற கேள்விகளை எழுப்பினர். "கட்டுரையில் நிர்மலாதேவி கூறிய கருத்தே வெளியாகியிருக்கிறது. அந்த உண்மையைச் சொல்லவிடாமல் சட்டம்போட்டுத் தடுக்கும் முயற்சியே இது'’என்ற வாதத்தை முன்வைத்தனர்.

நீதிமன்றத்துக்கு வந்த இந்து என்.ராமின் கருத்தை நீதிபதி கோர, அவர், தான் வழக்கறிஞர் இல்லை, ஒரு பத்திரிகையின் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்து குழுமத்தின் தலைவர் என்ற வகையில் ஒரு எக்ஸ்பர்ட்டாக கருத்துத் தெரிவித்தார். "ஒரு படத்தை வெளியிட்டதற்காக இவ்வளவு பெரிய அடக்குமுறைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது தேவையற்றது. இந்த வழக்கில் நக்கீரன் கோபால் அவர்களை சிறையில் அடைத்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதற்கு நீதிமன்றம் காரணமாகிவிடக் கூடாது''’என்றார்.

nn

பின் மாஜிஸ்திரேட் கோபிநாத் அரசுத் தரப்பிடம், "நக்கீரனில் வெளியாகியிருந்த கட்டுரைகள் தொடர்பாக ஆளுநர் புகார் கொடுத்திருந்தாரா?''’என்ற கேள்வியை எழுப்பி னார். சற்றுநேரத்துக்குப் பின் தீர்ப்பளித்த அவர், நக்கீரன் ஆசிரியரை சிறைக்கு அனுப்ப மறுத்துவிட்டார்.

பின் இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் நல்லதொரு தீர்ப்பு அளித்தார். ஏழு வருடத்துக்கு குறைவான சிறைத் தண்டனை பெறுவதற்கான குற்றம் செய்தவர்களை காவல்துறை கைது செய்யக் கூடாது. காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்துவிட்டு அனுப்பிவிடவேண்டும். இதனை தமிழகத்தி லுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்குச் சுற்றறிக்கையாகவும் அனுப்பிவைக்க உத்தரவிட் டார். இந்த லேண்ட்மார்க் ஜட்ஜ்மெண்ட் இந்த வழக்கை முன்னிட்டே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயத்தில் தமிழக பத்திரிகைகள் ஊடகங்கள் மட்டுமின்றி, இந்திய பத்திரிகைகளும் நக்கீரன் ஆசிரியருக்குத் துணைநின்றன. சர்வதேச செய்தி ஊடகமான வாஷிங்டன் போஸ்ட் வரை இந்தச் செய்தி தாக்கம்செலுத்தியது.

nn

உண்மையில் இந்த நிகழ்வின் தொடக்கம் 2018, அக்டோபர் 9 அல்ல. அதற்கும் முன்பே 07-04-2018-ல் நக்கீரன் வலைத்தளத்திலும், 2018, ஏப்ரல் 08-10 நக்கீரன் இதழிலும் நிர்மலாதேவி பற்றிய செய்தி கள் இடம்பெற்ற, "கவர்னர் பெய ரால் கல்லூரி மாணவிகளுக்கு வலை! ஆடியோ ஆதாரம்'’என்ற செய்தியே ஆகும். இவ்விவகாரத் தில் தொடர்ந்து செய்திகளை வெளியிட்ட நிலையில் நிர்மலாதேவி கைதுசெய்யப்பட் டார். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பின், நக்கீரனின் தொடர் செய்திகளின் எதிரொலியாக நக்கீரன் ஆசிரியர் விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவின்கீழ் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நக்கீரன் கோபால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.டி. பெருமாள் அவர்களால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதியரசர் வி.சிவஞானம், இரு தரப்பு வாதங்களையும் கவனமாகப் பரிசீலித்தபின் தனது தீர்ப்பில், “"தமிழக ஆளுநரை அவரது கடமைகளையும் சட்டபூர்வ அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாதபடிக்கு அச்சுறுத்தும் விதத்தில், போலியான, அவதூறான செய்திகளை நக்கீரன் இதழ்களில் வெளியிட்டுள்ள தாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 124, 120-பி, 505 (ண்) (க்ஷ), 506 (ண்) பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

nn

குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.டி.பெருமாள், "அந்தக் கட்டுரைகள், உண்மை நிலவரத்தைப் பற்றிய கட்டுரைகளே தவிர, யாரையும் புண்படுத் தும் நோக்கில், குறிப்பாக மேதகு ஆளுநரை புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவையல்ல. இந்தக் கட்டுரைகள் பொது அமைதிக்கோ, அரசுக்கோ எதிராக யாரையும் தூண்டும் நோக்கில் எழுதப்பட்டவையல்ல. மேலும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவுகள் இந்த வழக்குக்குப் பொருத்தமானவையல்ல' என வாதாடினார்.

வழக்குத் தொடர்ந்தவர்கள் தரப்பில் கூறப்பட்ட 30 சாட்சிகளில் எவ ரும் ஆளுநருக்கு எதிராக நட வடிக்கை கோரி போராடவில்லை என்பதைத் தெரிவித்துள்ள னர். வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என் றும், தவறான செயல்களை பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டுவர பத்திரிகையாளர்களுக்கு உரிமை யுண்டு. அதற்காக அவர்கள் மீது வழக்குத் தொட ரப்படக்கூடாது. அந்தக் கட்டுரை காரணமாக ஆளுநர் தனது அரசியல் சாசன கடமைகளைச் செய்யமுடியவில்லை என்பது நிரூபிக்கப்படவில்லை.

எஃப்.ஐ.ஆரை கவனமாகப் பரிசீலித்த வகையில், மாநிலத்தின் அல்லது பொது அமைதியைப் நேரடியாகப் பாதிக்கும் வகையில் எந்தக் குற்றச்சாட்டும் இடம்பெறவில்லை. குற்றம் கூறப்படும் செய்திகளானது, பேராசிரியர் நிர்மலாதேவியின் தவறான நடத்தையையும், தமிழக ஆளுநரின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவதை யும் பற்றியதாகும். இவை 505 (ண்) (க்ஷ), 506 (ண்) பிரிவுகளின் கீழ் வராது. அதிகாரிகள் தங்கள் புகாரில் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. எனவே புகார்தாரருக்கு எதிராகக் குற்ற நடவடிக்கைகளைத் தொடர்வது நியாயமற்றதாகும்''’என்று கூறி நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

உண்மையே வெல்லும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாயிருக்கிறது.

-தொகுப்பு: க.சுப்பிரமணியன்