சென்னை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள்மீது அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன. முன்னாள் தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர் லஞ்ச ஒழிப்புத் துறையின் வளையத்தில் சிக்கியிருக்கும் நிலையில், பதிவாளர் கணேசன் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2017-ஆம் ஆண்டு விடைத்தாள் மறுமதிப்பீட்டு விவகாரத்தில் உமா உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்து விசாரணை செய்துவருகிறது. இந்நிலையில், இந்த
சென்னை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள்மீது அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன. முன்னாள் தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர் லஞ்ச ஒழிப்புத் துறையின் வளையத்தில் சிக்கியிருக்கும் நிலையில், பதிவாளர் கணேசன் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2017-ஆம் ஆண்டு விடைத்தாள் மறுமதிப்பீட்டு விவகாரத்தில் உமா உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்து விசாரணை செய்துவருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் முக்கிய பங்குவகித்த அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கணேசன், பல்வேறு காலகட்டங்களில் பல முறைகேடு மோசடிகளில் ஈடுபட்டிருந்ததாக தொடர்குற்றச்சாட்டு எழுந்துவந்தது.
அமைச்சர் மற்றும் உயர் கல்வித்துறை செயலர் ஆகியோரின் பாதுகாப்பில் தன்மீது எவ்விதமான நடவடிக்கையும் வராதபடி கணேசன் பார்த்துக்கொண்டார். ஆனால் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா சிக்கியதைத் தொடர்ந்து, அனைத்து தரப்பிலிருந்தும் கணேசன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சங்கம் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றி பல்கலைக்கழகத்தின் வேந்தரான கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து 10-ந் தேதி கணேசன் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பதிவாளர் (பொறுப்பு) குமார் என்பவரை நியமித்திருக்கிறார்கள்.
வெளிப்பட்டவை ஒருபுறமிருக்க இன்னும் பல மோசடிப் புகார்களை பேராசிரியர்கள் சொல்கிறார்கள். ""அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள எர்ன்ய்க்ங்ழ் ணன்ர்ற்ஹ-வில் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு இடம் ஒதுக்காமல், பணம் வாங்கிக்கொண்டு அந்த இடங்களை பதிவாளர் வழங்கியிருக்கிறார். மறுமதிப்பீட்டு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜயகுமார் மற்றும் சிவகுமார் ஆகியோரை பதிவாளர் கணேசன்தான் மண்டல பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறார். பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு ஊழல்களில் தொடர்புடைய வீர விசுவாமித்திரன் என்பவருடன் நேரடியாக கணேசன் தொடர்பில் இருந்துள்ளார்.
சான்றிதழ்கள் முறைகேடு, துணைவேந்தர், பேராசிரியர் நியமனம், புதிய கட்டடங்கள் கட்டுவது தொடர்பான காண்ட்ராக்ட் என 250 கோடிக்கு மேலான ஊழல் புகார்கள் விசுவாமித்திரன்மீது இருக்கிறது. இவர்கள் இருவருக்குமான நேரடித் தொடர்பு உறுதியாகியுள்ளது.
துணைவேந்தர் சூரப்பா எடுக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஊழலில் ஈடுபட்டோரை கைது செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டால் பல்கலைக்கழகம் காப்பாற்றப்படும்'' என்கிறார்கள்.
-சி.ஜீவாபாரதி