ந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாநிலங்களும் சூழலுக்கேற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கொரோனா தடுப்பு நெறிமுறைகளை வகுத்துச் செயல் படுத்தி வரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இதில் பொதுமக்கள் பலரும் ஆர்வமாக தடுப்பூசிகளைச் செலுத்திவந்தாலும், செலிபிரிட்டிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஃபோட் டோக்கள்தான் சோஷியல் மீடியாக்களில் லேட்டஸ்ட் ட்ரெண்டிங். அந்த வகையில், சில நாட்களுக்கு முன் சோஷியல் மீடியாவில் வெளியான நடிகை நயன்தாராவின் தடுப்பூசி போடும் புகைப்படம் மிகப்பெரிய சர்ச்சையையே ஏற்படுத்தியது.

nayanthara

நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின. ஆனால், அப்படி வைரலான அந்த புகைப்படத்தில் "நயன்தாராவுக்கு ஊசிபோடும் நர்ஸ் கையில் தடுப்பூசியே இல்லை என்றும், அவர் வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவதுபோல் போஸ் கொடுத்துள்ளார்' என்றும் ஒரு செய்தியை கிளப்பிவிட்டனர் இணையவாசிகள்.

இது மிகப்பெரிய சர்ச்சையான சூழலில், "இணையத்தில் கிளம்பிய செய்தியெல்லாம் பொய்'' என்பதைப்போல ஒரு புகைப்பட விளக்கத்தைக் கொடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது நடிகையின் தரப்பு. நயன்தாரா தரப்பு புதிதாக வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படத்தில் நடிகையும் நர்ஸும், நர்ஸின் கைகளில் உள்ள ஊசியும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் நயன்தாரா தடுப்பூசி போட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Advertisment

ந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியபோது, புலம்பெயர் தொழிலாளர்கள் ஊருக்குச் செல்ல உதவியது துவங்கி, இன்று சிகிச்சைக்கு படுக்கை கிடைக்காதவர்களுக்குப் படுக்கை ஏற்பாடு செய்வதுவரை என சாமானியர்களின் சூப்பர் ஹீரோ வாக மாறியுள்ளார் வில்லன் நடிகர் சோனுசூட். சமீபகாலமாக இவர் மேற்கொண்டதாகக் கூறும் உதவிகளின் மீதான நம்பகத்தன்மை கேள்விக் குறியாக்கப்பட்டாலும், சரியான நேரத்தில் இவரது உதவியைப் பெற்ற பலர் இன்றும் அவருக்கு உறு துணையாக நிற்கின்றனர். இப்படி மக்களின் மரி யாதைக்குரிய நாயகனாக மாறியிருக்கும் சோனுசூட், ரெம்டெசிவிர் மருந்து குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் எழுப்பிய கேள்வி அண்மையில் வைரலானது.

செயற்கை சுவாசம் தேவைப்படும் நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் கொடுக்கும்போது இறப்பு விகிதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இப்போது இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக இருப்பதால், ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில் பல மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்து குறித்து நடிகர், சமூக சேவகர் சோனுசூட் தனது சமூகவலைதளத்தில், "ஒரு எளிய கேள்வி: ஒரு குறிப்பிட்ட ஊசி எங்கும் கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந் திருக்கும்பட்சத்தில், ஏன் ஒவ்வொரு மருத்துவரும் அந்த ஊசியை மட்டுமே பரிந்துரைக்கிறார்கள்? மருத்துவமனைகளே அந்த மருந்தைப் பெற முடியாதபோது, ஒரு சாதாரண மனிதர் அதை எப்படிப் பெறுவார்? அந்த மருந்துக்கு மாற்றாக நாம் ஏன் இன்னொரு மருந்தைப் பயன்படுத்தி, ஒரு உயிரைக் காப்பாற்றக் கூடாது?''’எனப் பதிவிட்டிருந்தார். இது ஒரு நடிகருடைய பதிவு என்றாலும், யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

Advertisment

c

கொரோனா எனும் உயிர்க்கொல்லியிடமிருந்து மக்களைக் காக்கும் முயற்சியாகவும், மூன்றாவது அலையைத் தடுக்கவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இதில் பல இடங்களில் மக்கள் ஆர்வமாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், சில இடங்களில் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டாத சூழலும் நிலவிவருகிறது. இந்த நிலையில், மக்களிடையே தடுப்பூசி குறித்து பயத்தைப் போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கவும் அரசாங்கம் மற்றும் மருத்துவர்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் விதத்தை அதிகரிக்க யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. இதுகுறித்து "குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை எப்படி சன்மானம் தந்து வெற்றிகரமாக அன்றைக்கு நிறைவேற்றினார்களோ... அதுபோல கொரோனா தடுப்பூசியிடும் பணியைத் தமிழக அரசு நிறைவேற்றி சகலமக்களும் தடுப்பூசியின் மீது ஆர்வம்கொள்ளச் செய்தல் வேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

-கிருபா