த்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கை நதிப்படுகையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைமேடுகளை இடமாற்றுவது தொடர்பாக, தில்லி தமிழ் வழக்கறிஞர் கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்காததையடுத்து உச்சநீதி மன்றம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இந்துக்களின் புனித நதியாக மதிக்கப்படுவது கங்கை. இருந்தபோதும் அந்நதி ஆலைக் கழிவுகளாலும் பல்வேறுவகை மாசுகளாலும் தொடர்ந்து பாதிக்கப் பட்டுவருகிறது. இதுபோதாதென்று உத்தரகாண்ட் மாநில அரசு கங்கை நதிப்படுகையை குப்பைமேடாக மாற்றி அங்கே குப்பைகளைக் குவித்துவந்தது.

Advertisment

gangai

இதையடுத்து, கடந்த 2015-ஆம் ஆண்டில் தில்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளரும் வழக்கறிஞருமான ராம்சங்கர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்தக் குப்பைக் கிடங்கை நேரில் பார்த்து ஆய்வுசெய்ய குழு அமைக் கப்பட்டு, 2018-ல் அந்தக் குழு குப்பைக் கிடங்கைப் பார்த்து, அதனை அங்கிருந்து அகற்றப் பரிந்துரைத் தது. அதையேற்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஐந்து நீதிபதிகள்கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

ஆனால் மாநில அரசோ, அந்தத் தீர்ப்பை அமல்படுத்து வதில் ஆர்வம்காட்டாததையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ராம்சங்கர் மீண்டும் முறையீடு செய்தார். இதனை விசாரித்த தீர்ப்பாயம், ஒரு மாதகாலத்துக் குள் அந்தக் குப்பைக் கிடங்கை அகற்றவேண்டுமெனவும், இல்லையெனில் மாநில தலைமைச் செயலாளர் அதற்குப் பொறுப்பேற்க நேர்வதுடன் அவரது ஒருமாத சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் உத்தரவிட்டது.

Advertisment

இந்த உத்தரவை எதிர்த்து உத்தரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதிசெய்ததுடன், ரிஷிகேஷில் கங்கை நதிப்படுகையில் இருக்கும் குப்பைக் கிடங்கை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டது.

ஆனால் அந்த உத்தரவு வந்தபின்பும், மூன்றாண்டு காலகட்டத்தில் உத்தரகாண்ட் அரசு அந்தக் குப்பைக் கிடங்கை இதுவரை இடமாற்றம் செய்யவில்லை. இடைப்பட்ட காலத்தில் வழக்கறிஞர் ராம்சங்கர் தரப்பிலிருந்து தொடர்ந்து நினைவூட்டல், கோரிக்கைகள் வைத்தபோதும் அவை புறக்கணிக்கப்பட்டன. எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார் ராம்சங்கர். செப்டம்பர் 27-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.கே. மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விவரங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், உத்தரகாண்ட் தலைமைச் செயலாளரும், ரிஷிகேஷ் மாவட்ட ஆட்சியரும் 6 வார காலத்துக்குள் பதிலளிக்க வும், நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.

கங்கை புனித நதி என்பது ஒருபுறமிருக்க, குப்பைமேட்டிலிருந்து வரும் மாசுகள் கங்கை நதியில் கலந்தால் அது மக்களுக்குத்தான் கேடு என்பதுகூட அரசுக்கு உறைக்காதா?

-சூர்யன்