திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இளமதி ஜோதி பிரகாஷும், துணை மேயராக ராஜப்பாவும் இருக்கிறார்கள். கடந்த நான்காண்டுகளாக மாநகராட்சி நிர்வாகமானது பெயரளவில்தான் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்களிடமும், வணிகர்களிடமும் வீட்டு வரி, குடிநீர், பாதாள சாக்கடை, தொழில் வரி, கடை வரி போன்றவற்றை வசூலிப்பதை மாநகராட்சியிலுள்ள 16 வருவாய் உதவியாளர்கள்தான் பார்க்க வேண்டும். ஆனால் இந்த வருவாய் உதவியாளர்களோ, மாநகராட்சிக்கு வசூலித்துக்கொடுப்பதில் ஆர்வங்காட்டாமல், தங்களை வளர்ப்பதில் மட்டும் ஆர்வம்காட்டுவதாகக் குற்றம்சாட்டப் படுகிறது.

Advertisment

dd

புதிதாக வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகம் கட்டுபவர்களிடம் வரியைக் குறைத்துப் போட்டுத் தருகிறேன் எனக்கூறி, பல ஆயிரங்களை வாங்கி, தங்கள் பாக் கெட்டுக்களை நிரப்பி வருகிறார்கள். அதுபோல், வரி கூடுதலாக இருக்கும் வீடு மற்றும் வணிக வளாக உரிமையாளர் களிடம், "நீங்கள் கூடுதலாக வரி கட்ட வேண்டாம். கோர்ட்டுக்கு போங்க'' எனக் கூறி அதன் மூலமும் ஒரு வருமானம் பார்த்து வருகிறார்கள்.

Advertisment

இதனால் மாநகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்பட்டு வருவதால் இன்ஜினியர்கள், நகரமைப்பு, சுகாதாரப்பிரிவு, பொதுப்பிரிவு அலுவலர்களைக் களத்தில் இறக்கி வரி வசூலும் செய்து வருகிறார்கள். தங்களை மட்டுமே வளர்த்து வரும் வருவாய் உதவியாளர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதேபோல் மாநகராட்சியிலுள்ள பல பிரிவுகளில் பணிபுரியும் அலுவலர்கள் பலரும் வருமானம் பார்ப்பதில்தான் ஆர்வங்காட்டி வருகிறார்களே தவிர, நிர்வாகப் பணியில் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்த மாநகராட்சியில் நான்கு உதவி வருவாய் ஆய்வாளர்களுக்கான காலியிடங்கள் கடந்த மூன்று வருடமாகவே நிரப்பாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இருக்கக்கூடிய உதவி ஆய்வாளர்களும் கமிசன் பார்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்களே தவிர கலெக்சன் பார்ப்பதில்லை. அதனால் மற்ற துறைகளில் உள்ளவர்களை வசூலுக்கு அனுப்புவதோடு, பொறுப்பாளர்களாகவும் போடுகிறார்கள். அதனால் தான் சமீபத்தில் மக்களின் வரிப்பணம் நான்கு கோடியை அலுவலர்கள் சிலர் கையாடல் செய்ததின் பேரில் கைது செய்தும் கூட அந்த பணம் இன்னும் மீட்கப்படவில்லை.

Advertisment

ss

அதேபோல் நகரத் திட்டமிடுதல் அலுவலர் ஒருவர், அவருக்கு கீழ் பணிபுரியும் நகரமைப்பு அலுவலர்கள் நான்கு பேர் என ஐந்து பேருக்கான காலியான இடம் கடந்த பத்து மாதமாக இருந்தும் அது நிரப்பப்படவில்லை. அதனால் புதிய ப்ளான்களுக்கு அனுமதி கொடுக்க முடியவில்லை.

அதோடு ஆக்கிரமிப்புகளும் அகற்ற முடியவில்லை. அதேபோல் நிர்வாக அலுவலர் மற்றும் கணக்கருக்கான இரண்டு காலியான இடங்கள் ஒரு வருடமாக இருக்கிறது, அதுவும் நிரப்பப்படவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செயற்பொறி யாளரும் மாறிவிட்டார். உதவி பொறி யாளர்கள் எட்டு பேர் இருக்க வேண்டிய இடத்தில் மூன்று பேர் தான் இருக்கிறார்கள். தொழில்நுட்ப உதவியாளர்கள் 16 பேர் இருக்கவேண்டிய இடத்திலும் மூன்று பேர் தான் இருக்கிறார் கள். உதவியாளர்களுக்கான பத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை. இப்படி கடந்த மூன்று வருடமாகக் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பவில்லை.

மாநகராட்சியில் 40க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதால் மாநகராட்சிப் பணிகளனைத்தும் பெயரளவுக்குத்தான் நடக்கிறது. காலிப் பணியிடங்களை நிரப்ப ஆணையர் ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவரும் சரிவர வருவதில்லை. அதுபோல் மாநகராட்சிக்கு சரிவர நிதியும் ஒதுக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இப்படியாக இந்த மாநகராட்சி தொடர்ச்சி யாகப் புறக்கணிக்கப்படுவதைப் பார்க்கும்போது, இது ஆளுங்கட்சி வசமுள்ள மாநகராட்சியா, எதிர்க்கட்சிகள் வசமுள்ள மாநகராட்சியா என்று சந்தேகம் வருவதாகக் கூறுகின்றனர் மாநகராட்சி ஊழியர்களில் சிலர்.

"ஜெயலலிதா ஆட்சியின்போது மாநக ராட்சியாக அறிவிக்கப்பட்டும், விரிவாக்கப் பணிகளை செய்வதில் அதிகாரிகள் மெத்தனமாகவே இருந்தனர். மாநகராட்சி அலுவலர்கள் எண்ணிக்கையில் பாதி அளவுக்குதான் இருக்கிறார்கள். இருக்கும் அலுவலர்களும் அ.தி.மு.க. விசுவாசிகளாக இருப்பதால் மாநகராட்சிப் பணிகளில் ஆர்வங்காட்டவில்லை.

குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை. மின் விளக்குகளும் சரிவர எரிவ தில்லை. குடிநீர் இணைப்பும் முழுமையாகத் தரப்படவில்லை. இதையெல்லாம் மேயர் இளமதியும், துணைமேயர் ராஜப்பாவும் சுட்டிக்காட்டினாலும் அதிகாரிகள் வேலை செய்வதில்லை. அந்த அளவுக்கு நிர்வாகம் சீர்கெட்டுள்ளது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

"ஆளுங்கட்சி, கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் மக்களின் குறைகளை அதிகாரிகளிடம் சொல்லி சரிசெய்யும்படிக் கூறினாலும், அதனை செய்து முடிக்க அதிகாரிகள் ஆர்வங் காட்டவில்லை. அமைச்சர் ஐ.பி. முயற்சியால் பாதாள சாக்கடை, சாலை மற்றும் புது பஸ் ஸ்டாண்டு பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படவுள்ளன. எனினும், அதிகாரிகள் இவற்றிலெல்லாம் ஆர்வங்காட்டவில்லை. மாநகராட்சிக்கு அரசு போதுமான நிதி ஒதுக்கவில்லை. காலிப் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. இவற்றையெல்லாம் சரிசெய்தாக வேண்டும்'' என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலரான கணேசன்.

இது சம்பந்தமாக மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, "தமிழகம் முழுவதுமே கூடிய விரைவில் மாநகராட்சி காலிப் பணியிடங்களை அரசு நிரப்ப இருக்கிறது. அதுபோல் இங்கும் நிரப்பப்படும். மாநகராட்சியை விரிவுபடுத்த அரசாணை வெளியிட்டதன் மூலம் பணிகளும் தொடங்க இருக்கிறது. இனி வருமானமும் அதிகரிக்கும், மாநகராட்சியும் வளர்ச்சியடை யும்'' என்றார்.

-சக்தி