Advertisment

காலை உணவுத்திட்ட செய்திக்கு தினமலர் ஆசிரியர் விளக்கம்!

dd

கஸ்ட் 31 வியாழனன்று வெளியான தினமலர் சேலம் பதிப்பில் தலைப்புச் செய்தி யாக, "காலை உணவு திட்டம் -மாணவர் களுக்கு டபுள் சாப்பாடு -ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது' என்று எழுதப்பட்ட தலை யங்கத்துக்கு தமிழ் நாடு முழுக்க கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் அச்செய்திக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர், சேலத்திலுள்ள தினமலர் அ

கஸ்ட் 31 வியாழனன்று வெளியான தினமலர் சேலம் பதிப்பில் தலைப்புச் செய்தி யாக, "காலை உணவு திட்டம் -மாணவர் களுக்கு டபுள் சாப்பாடு -ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது' என்று எழுதப்பட்ட தலை யங்கத்துக்கு தமிழ் நாடு முழுக்க கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் அச்செய்திக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர், சேலத்திலுள்ள தினமலர் அலுவலகத்தின் முன்பாக தினமலர் இதழைத் தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் செய்தனர்.

Advertisment

இந்நிலையில், சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, நெல்லை, நாகர்கோவில் பதிப்பு உரிமையுள்ள தினமலர் நாளிதழின் ஆசிரியர், அவ்விவகாரம் குறித்து விளக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisment

dd

அதில், 'நேற்று தினமலர் நாளிதழின் சேலம் மற்றும் ஈரோடு பதிப்பின் முதல் பக்கத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தரக்குறைவாக சித்தரித்து ஒரு செய்தி வெளி யிடப்பட்டு இருந்தது. அந்த செய்தியையும், கீழ்த்தரமான சித்தரிப்பையும், தினமலர் சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி, நெல்லை, நாகர்கோவில் பதிப்புகளின் நிர்வாகம் சார்பில் நான் கண்டிக்கிறேன்.

அந்த செய்தி, தினமலர் நிறுவனர் காலஞ்சென்ற டி.வி.ராமசுப்பையர் ஏற்படுத்திக் கொடுத் துள்ள சமத்துவம், சமூக நீதி, தேசிய வாதம் என்ற கோட் பாடுகளில் இருந்து முற்றிலும் விலகி நிற்கிறது.

அதே நேரம், தினமலர் நாளிதழ் முன்னாள் ஆசிரியர் காலஞ்சென்ற இரா.கிருஷ்ணமூர்த்தி மதிய உணவு திட்டத்தை விரிவாக்க எடுத்த முயற்சிகளை கொச்சைப் படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. முதல்வரின் காலை உணவுத் திட்டம் அறிமுக மான போது செய்திகள் வாயிலாக முழு ஆதரவு தெரிவித்தோம். அரசுப் பள்ளி மாணவர்களுக் கான அனைத்து நலத் திட்டங்களையும் தினமலர் வரவேற்கும்.

தினமலர் சேலம் மற்றும் ஈரோடு பதிப்புகளை, கடந்த 23 ஆண்டுகளாக இரா.சத்தியமூர்த்தி என்பவர் நடத்தி வரு கிறார். அந்த பதிப்புகளுக்கு ஆசிரியராக வும் வெளியீட்டாளராகவும் அவரே இருக் கிறார். அவருக்கும், எங்களுக்கும் எந்த நிர்வாக / செய்தித் தொடர்பும் இல்லை.

இருப்பினும், 'தினமலர்' பெயரில் இப்படி ஒரு அருவருக்கத்தக்க, வெட்கி தலை குனியக்கூடிய செய்தி வெளியாகி இருப்பது, மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

-கீரன்

nkn060923
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe