மிழகத்தையே பதற வைத்த மதுரை "தினகரன்' பத்திரிகை ஊழியர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் அட்டாக்பாண்டி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கு எதிராக பத்திரிகை ஊடகங்கள் சாட்சி சொல்லாத நிலையில்... ஆசிரியர் நக்கீரன்கோபால், அப்போதைய இணையாசிரியர் காமராஜ் அளித்த சாட்சியங்கள் கொடூரக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்திருப்ப தோடு நீதியரசர்களின் பாராட் டையும் பெற்றிருக்கிறது.

at

கலைஞரின் அரசியல் வாரிசு யார்? என்றக் கருத்துக் கணிப்பை 2007 மே 9-ந் தேதி வெளியிட்டது சன் டி.வி. குழுமத் தின் பத்திரிகையான தினகரன். இதனால், ஆத்திரம் அடைந்த அழகிரி ஆதரவாளரும் தி.மு.க. தொண்டரணி அமைப்பாளரு மான அட்டாக்பாண்டி தலைமை யிலான அடியாட்கள் தினகரன் பத்திரிகை மீது நடத்திய தாக்கு தல் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சினால் கம்ப்யூட்டர் ஆபரேட் டர்களான கோபி, வினோத், காவலாளி முத்துராமலிங்கம் ஆகிய அப்பாவி ஊழியர்கள் தீயில் jகருகி பரிதாபமாக உயிரிழந் தார்கள். தாக்குதல் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்ட பிரத்யேக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நக்கீரனில் முதலில் வெளியானது. தினகரன் பத்திரிகையில் செய்தி வெளி யாகவே நக்கீரன் எடுத்த புகைப்படங்கள்தான் உதவின. அதன்பிறகு, பல்வேறு பத்திரிகை ஊடகங்களிலும் வெளியாகி தமிழகத்தையே பதறவைத்தது. அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் ஜெயா டி.வி. நிறு வனத்தினர் உட்பட அனைத்து ஊடகங்களும் அக்கொடூர கொலைக்குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்த தோடு, பலர் பிறழ் சாட்சிகளாகி விட்டார்கள்.

Advertisment

jj

இந்நிலையில்தான், பத்தி ரிகை ஊழியர்களை எரித்துக் கொன்ற வழக்கின் மேல்முறையீட்டு மனுவில், அட்டாக்பாண்டி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையும் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. ராஜாராமுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோ ரைக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, ‘""தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அலறிய, சம்பவத்தில் இறந்துபோன உடல்களைப் பார்த்து முதலைக்கண்ணீர் வடித்த, மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலம் சென்ற பத்திரிகையாளர்கள், நீதிமன்றம் அழைப்பாணை கொடுத்தும் சாட்சி சொல்ல முன்வராத நிலையில்... அரசுத்தரப்பு சாட்சிகளான நக்கீரன்கோபால், நக்கீரன் (அப்போதைய) இணையாசிரியர் காமராஜ் (தற்போது இவர் பணியில் இல்லை) இருவரும் நீதிமன்றத்துக்கு வந்து "பத்திரிகையில் வெளியான புகைப்படம் வீடியோக் கள் உண்மைதான்' என்று சொன்ன சாட்சியம்தான் அரசுத்தரப்புக்கு வலுவான சான்றாக அமைந் துள்ளது''’என்று குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறது.

இத்தீர்ப்பை வரவேற்று தனது கருத்தை தெரிவித்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சுதந்திரம், “""மற்ற அனைத்துப் பத்திரிகை ஊடக நிருபர்கள், புகைப்படக்காரர்கள், ஜெயா டி.வி. வீடியோகிராபர்கள் உட்பட, சாட்சி சொல்ல முன்வராத நிலையில்... நக்கீரன் மட்டும் சாட்சி சொன்னது வழக்குக்கு வலுவாக அமைந்தது. பாராட்டத்தக்கது. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'’ என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார் கள்''’என்று சுட்டிக்காட்டி பாராட்டி யுள்ளார்.

Advertisment

pp

இதுகுறித்து, நம்மிடம் பேசும் மூத்த வழக்கறிஞர் இளங்கோவன், ""சம்பவத்தை கேமரா மூலமும் பேனா மூலமும் மக்களுக்கு எடுத்துச்சொன்ன மற்ற பத்திரிகையாளர்கள் தாங்கள் கண்டதை நீதிபதி முன் விசாரணையின்போது சொல்லத் தவறியது பத்திரிகைத் துறைக்கே அவமானமாகும். பேனா என்பது கத்தியின் முனையைவிட வலிமையானது என்பது பழமொழி. பேனா பிடித்த கைகள், வாள்பிடித்த கைகளுக்கு அஞ்சி நடுங்கினால் அங்கு ஜனநாயகம் இல்லை என்பது தெளிவு.

இந்திய ஜனநாயகத்தில் பத்திரிகையாளர் களே அஞ்சி நடுங்கி பிறழ்சாட்சியாகவோ அல்லது சாட்சிசொல்லவே நீதிமன்றப் படிக்கட்டில் ஏறாமல் தவிர்த்திருந்தாலோ இந்திய ஜனநாய கத்தையே கேள் விக்குறியதாக்கும். அப்படிப்பட்ட, அவமானகரமான சூழலை தவிர்த்து, பத்திரிகைச் சுதந் திரத்தையும் ஜனநாயகத்தையும் நம்பிக்கை ஏற் படுத்தும்விதமாக நக்கீரன்கோபாலும் அப்போதைய நக்கீரன் இணையாசிரியர் காமராஜும் செயல் பட்டுள்ளனர். இவர்களின் தைரியம், நேர்மை, பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. நீதிமன்றம் கண்டு பாராட்டியுள்ள செயல் பெருமையாக உள் ளது. அரசியல் சார்பான ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தை கடைப்பிடிப்பதில்லை என்பதற்கு ஜெயா டி.வி.யின் செயலே சான்று''’என்றார்.

a

a

மூத்த பத்திரிகையாளர் இரா. ஜவஹர், ""தினகரன் இதழின் மதுரை அலுவலகத்தின் மீது நடந்த தாக்கு தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கீழ்க்கோர்ட் விடுதலை செய்தது. ஆனால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நீதி வென்றுள்ளது. குற்றவாளிகளை உயர்நீதிமன்றம் தண்டித்துள்ளது. நக்கீரன் அளித்த முக்கியமான சாட்சியமான புகைப்படம் போலி அல்ல; உண்மையான புகைப்படம்தான் என்று தடயவியல் துறையும் உறுதி செய்துள்ளது’’ என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இது, நக்கீரனின் சாதனை மகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாக இடம் பெற்றுள்ளது. ஆட்டோ சங்கர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நக்கீரன் வழக்குத் தொடர்ந்து 1994-ஆம் ஆண்டில் பெற்ற தீர்ப்புதான் இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் கேடயமாக அமைந்துள்ளது என்பது மகத்தான சாதனை வரலாறு. அன்று முதல் இன்றுவரை மேலும் மேலும் சாதனைகளைக் குவித்து வருகிறது நக்கீரன். சாதனைகள் தொடர எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்'' என்கிறார் பெருமை பொங்க.

a

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச்செயலாளர் பாரதிதமிழன் நம்மிடம், “""கடந்த 25 வருடங்களுக்குமேலாகவே பத்திரிகையாளர்களுக்கான பிரச்சனைகள், உரிமைகள் மறுக்கப்படுகிறபோது களத்திற்கு வந்து குரல் கொடுப்பதிலும் போராட்டங்களில் முன்னிலை வகிப்பதிலும் தொடர்ந்து முன்னணியில் இருப்ப வர் நக்கீரன் ஆசிரியர் அண்ணன் கோபால். மதுரை தினகரன் நாளிதழ் எரிக்கப்பட்டதும் அங்குள்ள ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டதும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியிருந்த காலகட்டத்தில், எந்த அச்சமுமின்றி எந்த சமரசமுமின்றி பாதிக்கப்பட்டோர் மற்றும் உண்மையின் குரலாக நக்கீரன் எதிரொலித்ததன் விளைவாகத்தான் இன்றைக்கு இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கிறது. பத்திரிகையாளர்கள் இந்தத் தீர்ப்பில் நக்கீரன் ஆசிரியரின் பங்களிப்பை பாராட்டுவதுடன் உணர்வுப்பூர்வமான பெருமிதமாகவே கருதுகிறார்கள்'' என்கிறார்.

தமிழ்நாடு புதுச்சேரி பிரஸ் -மீடியா செய்தியாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் சு.காதர் உசேன், “""ஜர்னலிஸம் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்ல… பத்திரிகை ஊடகங்களிலுள்ள இளைய தலைமுறை பத்திரிகையாளர்கள் நக்கீரனின் ஊடகம் சார்ந்த சட்டப்போராட் டங்களை படித்துத் தெரிந்துகொண்டாலே "ஓர் ஊடகம் எப்படி செயல்படவேண்டும்' என்பதை அறிந்துகொள்ள முடியும். கவர்னர் மாளிகை வில்லங்கம், பொள்ளாச்சிக் கொடூரன்கள் என யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே என்று போராடும் நக்கீரனுக்கு நீதிமன்றத் தீர்ப்பு ஒரு மைல் கல்’''’என்கிறார் அவர்.

-மனோசௌந்தர்

படங்கள்: அண்ணல்