சசிகலா விடுதலை விவகாரம் அவர் தரப்பைவிட அ.தி.மு.க. தரப்பில்தான் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. சீனியர்கள் பலரும் தங்களுக்குத் தெரிந்த மன்னர்குடித் தரப்புகளைத் தொடர்புகொண்டு, நிலவரம் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ttvtodiwakaran.jpg)
நாமும் மன்னார்குடித் தரப்பைச் சேர்ந்த சிலரிடம் விசாரித்த போது, ""எங்களுக்கு சசிகலா விடுதலை பற்றிய ஆர்வம் அதிகம் இருந்தாலும், அவரது விடுதலை என்பது ஏற்கனவே நக்கீரன் தெரிவித்தது போல், ஜனவரி 27 வாக்கில்தான் இருக்கும். அதற்கு முன்பு வருவார் என்பதெல்லாம் நம்பகமற்ற செய்திகள்தான். இப்போது டி.டி.வி. தினகரன், சசிகலா விடுதலை தொடர்பாக டெல்லிக்குப் பறந்ததாக வரும் செய்திகள், அவர் திட்டமிட்டு நடத்திவரும் அரசியல் காட்சிகள்தான்'' என்று மர்மமாய்ச் சிரிக்கிறார்கள்.
சசிகலா விடுதலையில் என்னதான் நடக்கிறது என்று அவர்களிடம் கேட்ட போது நம்மிடம் விரிவாகவே பேச ஆரம்பித்தவர்கள், ’""ஆரம்பத்தில் இருந்தே சில விசயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புறோம். ஜெயலலிதா இருந்தவரை சொத்துக்குவிப்பு வழக்கில் எப்படியும் விடுதலை ஆகிவிடலாம் என்ற நம்பிக்கை சசிகலாவுக்கு இருந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, 2014 செப்டம்பர் 27-ல் வழங்கிய தீர்ப்பில் ஜெ, சசிகலா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டதோடு, ஜெ.வுக்கு 100 கோடி அபராதம் என்றும், மற்றவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதம் என்றும் அறிவித்தார். அப்போது நாங்கள் எல்லாம் பயந்தாலும் சசிகலா, தைரியம் இழக்காமல் அக்கா இருக்கும்வரை பயப் படத் தேவையில்லை. அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக ஜெ. அப்பல்லோவில் அட்மிட் ஆகி... என்னன்னவோ ஆகிவிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ttvtodiwakaran1.jpg)
ஜெ.’ இறந்த நிலையில் ஆட்சியில் அமரக் கூடிய நிலையை உருவாக்கினார் சசிகலா. ஆனால், டெல்லியின் சதியால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. போதாக்குறைக்கு உச்ச நீதிமன்றம், கர்நாடக சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி விட்டது. சசிகலாவுடன் சுதாகரன், இளவரசி ஆகியோரும் பெங்களூர் பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலையில் 2017 பிப்ரவரி 15ல் அடைக்கப்பட்டுவிட்டார்கள். இதில் ரொம்பவே சோர்ந்துபோய்விட்டார் சசிகலா. தான் கட்டிக் காத்த அ.தி.மு.க அரசும், தினகரன் உள்ளிட்டவர் களும் தனக்காக போராடித் தன்னை வெளியே கொண்டு வருவார்கள் என்று பெரிதும் நம்பினார். எல்லோரும் நாசுக்காகக் கழன்றுகொண்டார்கள். இனி யாரையும் நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த சசிகலா, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக் காலம் முழுதையும் சிறையில் கழிப் பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவில் அமைதியாகிவிட்டார். அவர் தினகரனையும்கூட நம்பவில்லை. வெளியே வந்தவுடன் தன் சகோதரர் திவாகரனின் உதவியோடு அவர் தனது பவரைக் காட்டுவார்'' என்றார்கள் அழுத்தமாய்.
அப்போ தினகரன்?... என்ற நம் கேள்விக்கு அவர்கள்...’""தினகரனை அவர் நம்பவில்லை. அதேசமயம் ஜெ. மரணம் தொடர்பாக மக்களிடம் தன்மீது அதிருப்தியும் கோபமும் ஏற்பட்ட சூழலில், தன் பெயரைச் சொல்லி படத்தைப் போட்டு அ.ம.மு.க.வை 
தினகரன் தொடங்கியதும், தான் போகிற இடங்களில் எல்லாம் கூட்டத்தைப் பெரிதாகக் கூட்டிக் காட்டி யதையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தார் சசிகலா. இதனால்தான் ஜெ.’தொடர்பான பழியில் இருந்து தான் முழுதாக மீள முடிந்தது என்றும் அவர் நம்பினார். அதேசமயம் தினகரனின் ஒவ்வொரு அசைவும் அவருக்குத் தெரியும். இவ்வளவு நாள் அமைதியாக இருந்த தினகரன், இப் போது சசிகலா ரிலீஸாகிற நேரத்தில், தானும் அவருக்காகத் தீவிர முயற்சி செய்தது போல் காட்ட நினைக்கிறார். சசிகலா ரிலீசாகும்போது திவாகரன்தான் அவருக்கு அருகில் இருப்பார். அவர், அரசியல் ராஜ தந்திரத்திலும் வியூகத்திலும் கெட்டிக்காரர் என்பது சசிக்கு நன்றாகவே தெரியும்'' என்றும் சொல்கிறார்கள்.
சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை கட்சித் தொண்டர்களிடம் இருந்து வசூலித்ததுபோல் கணக்குக் காட்டிக் கட்டலாமா என்ற ஆலோசனை முதலில் இருந்ததாம். இப்போது சசிகலாவின் கணவர் நடராஜன், தன் தந்தையின் பெயரில் நடத்திவந்த "மருதப்பா அறக்கட்டளை' சார்பில் அந்த அபராதத் தொகை யைக் கட்டலாமா? என்கிற ஆலோசனையும் நடக்கிறதாம். எனவே சசிகலா ஜனவரி வாக்கில் ரிலீசாகவே வாய்ப்பு என்று தெரிகிறது.
இதற்கிடையே, சசிகலா மீது அமலாக்கப் பிரிவு வழக்கும் இருப்பதால், அவர் ரீலீசானாலும் கைது செய்வோம் என்று டெல்லித் தரப்பு சொல்வதால் சில டீலிங்குகளும் நடந்துவருகிறது.
இந்த நிலையில் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த், டெல்டா பகுதியில் இருக்கும் முக்குலத்து இளைஞர்களை ஒருங்கிணைத்து, "போஸ் மக்கள் பணியகம்' என்ற அமைப்பைத் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குவது ஜெய்ஆனந்த்தின் திட்டம். சசிகலா ரிலீசானதும் அ.தி.மு.க.வை பழையபடி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார் என்று முழுதாக நம்பிக்கொண்டிருக்கிறது மன்னார்குடித் தரப்பு.
-தமிழ்நாடன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/ttvtodiwakaran-t.jpg)