"ஹலோ தலைவரே, எடப்பாடி தயவில் இடைத்தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் உள்ள அ.தி.மு.க.வினர் பலருக்கும் இது அமோகமான சரவெடித் தீபாவளியா இருந்துச்சு''’
""தீபாவளி பம்பர் பரிசா?''’
""ஆமாங்க தலைவரே, ஆளுங் கட்சியில் சேகுவேராவும் பிடல் காஸ்ட்ரோவும் ஒண்ணா இருப்பது மாதிரி காட்டிக்கிட்டாலும், அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் ஒத்துமை இல்லை. இங்கே பொறுப்பு கவர்னரா இருந்த வித்யாசாகர் ராவ், நம்ம எடப்பாடியையும் ஓ.பி.எஸ்.சையும் ஒண்ணா உட்காரவச்சி, அவங்க கைகளைச் சேர்த்து வச்ச பிறகும் கூட, அவங்க இதயமும் மனசும் இன்னும் முழுமையா ஒண்ணு சேரலை. அதனால், மேலே இருந்து கீழே வரையில் அவங்க ஆதரவாளர்களும் தனித்தனி கோஷ்டியாத் தான், ஏறுக்கு மாறா செயல் பட்டுக்கிட்டு இருக்காங்க. ஜெ.’ காலத்தில் கட்சியின் மேலிட உத்தரவை, ராணுவ உத்தரவு போலத் தொண்டர்கள் கடைப் பிடிச்சாங்க. ஆனா இப்ப யார் சொல்றதையும் யாரும் கேட்கறது இல்லை. தேர்தல் நேரத்தில் இது பெரிய ஆப்பு அடிச்சிடும். இதையெல்லாம் புரிஞ்சிக்கிட்ட எடப்பாடி, முரண்பட்டு நிக்கிற எல்லோரையும் கரன்ஸிப் பசை போட்டுத்தான் ஒட்டவைக்க முடியும்ங்கிற முடிவோடு, தீபாவளிக்கு கட்சிக்காரங்க அத்தனை பேருக்கும் போனஸ் கொடுக்கும் அசைன்மெண்ட்டை அமைச்சர்களிடம் ஒப்படைச்சார்''’
""அசைன்மெண்ட்டை சரியா நிறைவேத்தினாங்களா?''
""கட்சித் தலைமை போட்டுக் கொடுத்த பட்டியலின் படி, இடைத்தேர்தலை சந்திக்கும் தொகுதிகளின் பூத் கமிட்டிகள் விமரிசையாவும் கவனமாவும் கவனிக்கப்பட்டிருக்கு. 20 பேர் கொண்ட பூத் கமிட்டியில் இருக்கும் ஒவ்வொரு கட்சிக்காரருக்கும் தலைக்கு தலா 10 ஆயிரம் முதல் கொடுக்கப்பட்டிருக்கு.
"ஹலோ தலைவரே, எடப்பாடி தயவில் இடைத்தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் உள்ள அ.தி.மு.க.வினர் பலருக்கும் இது அமோகமான சரவெடித் தீபாவளியா இருந்துச்சு''’
""தீபாவளி பம்பர் பரிசா?''’
""ஆமாங்க தலைவரே, ஆளுங் கட்சியில் சேகுவேராவும் பிடல் காஸ்ட்ரோவும் ஒண்ணா இருப்பது மாதிரி காட்டிக்கிட்டாலும், அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் ஒத்துமை இல்லை. இங்கே பொறுப்பு கவர்னரா இருந்த வித்யாசாகர் ராவ், நம்ம எடப்பாடியையும் ஓ.பி.எஸ்.சையும் ஒண்ணா உட்காரவச்சி, அவங்க கைகளைச் சேர்த்து வச்ச பிறகும் கூட, அவங்க இதயமும் மனசும் இன்னும் முழுமையா ஒண்ணு சேரலை. அதனால், மேலே இருந்து கீழே வரையில் அவங்க ஆதரவாளர்களும் தனித்தனி கோஷ்டியாத் தான், ஏறுக்கு மாறா செயல் பட்டுக்கிட்டு இருக்காங்க. ஜெ.’ காலத்தில் கட்சியின் மேலிட உத்தரவை, ராணுவ உத்தரவு போலத் தொண்டர்கள் கடைப் பிடிச்சாங்க. ஆனா இப்ப யார் சொல்றதையும் யாரும் கேட்கறது இல்லை. தேர்தல் நேரத்தில் இது பெரிய ஆப்பு அடிச்சிடும். இதையெல்லாம் புரிஞ்சிக்கிட்ட எடப்பாடி, முரண்பட்டு நிக்கிற எல்லோரையும் கரன்ஸிப் பசை போட்டுத்தான் ஒட்டவைக்க முடியும்ங்கிற முடிவோடு, தீபாவளிக்கு கட்சிக்காரங்க அத்தனை பேருக்கும் போனஸ் கொடுக்கும் அசைன்மெண்ட்டை அமைச்சர்களிடம் ஒப்படைச்சார்''’
""அசைன்மெண்ட்டை சரியா நிறைவேத்தினாங்களா?''
""கட்சித் தலைமை போட்டுக் கொடுத்த பட்டியலின் படி, இடைத்தேர்தலை சந்திக்கும் தொகுதிகளின் பூத் கமிட்டிகள் விமரிசையாவும் கவனமாவும் கவனிக்கப்பட்டிருக்கு. 20 பேர் கொண்ட பூத் கமிட்டியில் இருக்கும் ஒவ்வொரு கட்சிக்காரருக்கும் தலைக்கு தலா 10 ஆயிரம் முதல் கொடுக்கப்பட்டிருக்கு. அதேபோல், கட்சிப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அவங்கவங்க வகிக்கும் பதவிகளுக்கு ஏற்ப, ரக வாரியா கனமான கவர்கள் ஜரூரா வழங்கப் பட்டிருக்கு. குறிப்பா சொல்லணும்னா சென்னை பூந்தமல்லியில் இருக்கும் சபாபதி கல்யாண மண்டபத்தில் மட்டும், தீபாவளிக்கு 2 நாள் முன்பாக கட்சியினரை எல்லாம் 500 கார்களை வச்சித் திரட்டிக்கிட்டு வந்தாங்க. வந்தவங்களுக்கு எல்லாம் ஸ்வீட் பாக்ஸும் கரன்ஸித் தாள்களும் மானாவாரியா விநியோகிக்கப்பட்டிருக்கு. இதை முன்னின்று வழங்கியவர்கள் அமைச்சர்களான மா.ஃபா.பாண்டியராஜனும், பெஞ்சமினும்தான். இப்படி தீபாவளி சாக்கில் தேர்தலுக்கு முன் பாகவே செலவை ஆரம்பிச்சிட்ட எடப்பாடி, இடைத்தேர்தலுக்காக 500 "சி'வரை புராஜக்ட் போட்டிருக்காரு. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள நமக்கு 8 சீட் வேண்டும். அதில் கவனமா இருங்க. மத்த தொகுதிகளில் தி.மு.க. ஜெயித்தால்கூடப் பரவாயில்லை. எந்த வகையிலும் தினகரன் தரப்பு ஜெயிச்சிடக் கூடாதுங்கிற போதனையே கட்சியினருக்குச் சொல்லப்பட்டிருக்கு''’
""தினகரன் தரப்பு, தீபாவளியை எப்படிக் கொண்டாடுச்சு?''’
""தினகரன் சைடில் பெருசா பணம் புரளலை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர்களுக்கே, தினகரன் பீஸ் கொடுக்கலையாம். இந்த நிலையில் சமீபத்தில் பரப்பனஹள்ளி அக்ரஹாரா சிறைக்குப் போன தினகரன், சசிகலாவைச் சந்திச்சப்ப, அவரிடம், தான் ரொம்பவே பண நெருக்கடியில் இருப்பதாகப் புலம்பியிருக்கார். கட்சி செலவுகளுக்குத் தான் திண்டாடுவதாவும் சொல்லியிருக்கார். காரணம், சசியின் பெரும்பகுதி கரன்ஸி, திவாகரன் பாதுகாப்பில்தான் இருக்குதாம். பரோலில் வந்த சசிகலாவின் அண்ணி இளவரசி, தன் மகன் விவேக் மூலம் சொத்துக்கள் சிலவற்றை அடமானம் வைத்து, தினகரனிடம் ஒரு பெரும் தொகையைப் புரட்டிக் கொடுத்திருக்கார். இது சசிகலாவின் உத்தரவுப்படிதான் நடந்ததாம். இதையடுத்து வியாழக்கிழமை பெங்களூருக்கு போய் சசிகலாவை சந்தித்த தினகரன், இடைத் தேர்தல் வியூகங்கள் பற்றியும், நாடாளுமன்றத் தேர்தலுக்குள் புதிய கூட்டணி பற்றி வாதிச்சிட்டு வந்திருக்காரு.''’
""இடைத்தேர்தல் பற்றி என்ன வியூகமாம்?''’
""தினகரனுடன் தீபாவளி வாழ்த்தைப் பரிமாறிக்க, தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன், செந்தமிழன் போன்ற பிரமுகர்கள் தினகரனை தீபாவளிக்கு முன்பு, அவரோட அடையாறு வீட்டில் சந்திச்சாங்க. இப்பவும் நம்மையும் எடப்பாடித் தரப்பையும் சேர்த்துவைக்க பா.ஜ.க. முயற்சி பண்ணுதுன்னு தகவல் பரவிக்கிட்டே இருக்குதே. இது உண்மையா?ன்னு கேள்வி எழுப்ப, தினகரனோ, ஆரம்பத்தில் ஒருமுறை பா.ஜ.க. தரப்பு இப்படி நம்மை நிர்பந்தம் செய்தது உண்மைதான். ஆனால், இப்போது அப்படிப்பட்ட எந்த முயற்சியும் நடக்கலை. அதனால் குழப்பம் இல்லாமல் இருங்கள்னு சொல்லியிருக்கார். அதே சமயம், பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, எடப்பாடி, ஓ.பி.எஸ். சசிகலா, தினகரன்னு எல்லாரும் ஒண்ணு சேர்ந்த ஏக அ.தி.மு.க.வா மாறணும்னு ஒருபக்கம் வலியுறுத்துது. எடப்பாடி, ஓ.பி.எஸ். தரப்போ தினகரன் இல்லாத அ.ம.மு.க.வை ஏத்துக்கத் தயார். எங்களைப் பொறுத்தவரை சசிகலா தலைமையை மனப்பூர்வமா ஏத்துக்க ரெடியாவே இருக்கோம்னு சசிகலாவுக்குப் பல விதத்திலும் தூது விட்டுக்கிட்டு இருக்குது.''’
""கூட்டணி பற்றியும் தன் சகாக்களிடம் தினகரன் பேசியிருக்காரா?''’
""ஆமாங்க தலைவரே, அந்த தீபாவளிச் சந்திப்பின் போதே, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இல்லாத ஒரு கூட்டணியை நாம் அமைக்கணும்னு சொல்லியிருக்கார். அப்ப, செந்தமிழனும், செந்தில்பாலாஜியும் நமக்கு இருக்கும் நல்ல சாய்ஸ் பா.ம.க., அதோடு கமலின் மக்கள் நீதி மய்யத்தையும் நம்ம பக்கம் இழுத்துக்கிட்டு வந்துட்டா நல்லதுன்னு சொல்லியிருக்காங்க. அதைப் புன்முறுவலோட ஆமோதிச்ச தினகரன், எல்லாம் நல்லபடியாவே நடக்கும்னு சொல்லியிருக்கார். பா.ம.க.வுக்கு இப்ப டிமாண்ட் அதிகமாவே இருக்கு. பா.ஜ.க., தன் அணியில் பா.ம.க.வை வைத்துக்கொள்ளவே விரும்புது. அதே போல் வட மாவட் டங்களில் பா.ம.க.வுக்கு இருக்கும் செல்வாக்கை இடைத் தேர்தலில் தினகரனும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். இந்த நிலையில்தான் இடைத் தேர்தலில் தாங்கள் போட்டியிடப் போவதில்லைன்னு பா.ம.க. அறிவிச்சிருக்கு. இதைத் தங்களுக்குச் சாதகமான அறிவிப்பாகவே தினகரன் தரப்பு பார்க்குது''’
""வழக்கத்துக்கு மாறா அறிவாலயத்திலும் தீபாவளி களைகட்டுச்சே.''
""கலைஞர் இருந்தப்ப பொங்கலுக்குத்தான் அறிவாலயம், கோபாலபுரமெல்லாம்களை கட்டிக் காட்சிதரும். காரணம், தன்னைச் சந்திக்க வரும் கட்சிக்காரங்களுக்கு புது 10 ரூபாய் நோட்டைக் கொடுத்து, கலைஞர் வாழ்த்துச் சொல்வார். ஆனால் வழக்கத்துக்கு மாறா, இந்த ஆண்டு சி.பி.எம். மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் முத்தரசன் போன்றோர் அங்கே வந்ததால், அறிவாலயம் உற்சாகத்தில் மூழ்குச்சு. என்ன காரணம்னு விசாரிச்சேன். தி.மு.க. சீனியர்களோ, அண்மையில் தேர்தல் பொறுப்புக்குழு உறுப் பினர்களின் கூட்டம் நடந்தப்ப, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், இப்ப இருக்கும் கூட்டணியே தொடரும். கூடுதலா ம.தி.மு.க.வும் சிறுத்தைகளும் எங்களோட இருக் காங்கன்னு ஸ்டாலின் சொன்னார். அதுக்குக் காரணம், அதிக தொகுதியில் தி.மு.க. நிற்கணும் என்பது கட்சி சீனியர்களின் எண்ணம். அதனால் காங்கிரஸுக்கே சொற்ப சீட்டுகளைத் தரும் முடிவை தி.மு.க. எடுத்திருக்கு.''
""அதனால கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சந்தேகமா?''
""அதைவிட, பா.ஜ.க.வும் தி.மு.க.வும் தவிர மற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்போம்னு தினகரன் அளித்த ஒரு பேட்டியும் அரசியல் களத்தில் விமர்சனம் வந்திருச்சு. அதை சரிப்படுத்தத் தான் இடதுசாரித் தலைவர்களை தீபாவளியன்று அறிவாலயத்துக்கு ஸ்டாலின் அழைத்தார். நாமெல்லாம் ஓரணியாத்தான் இருக்கோம்னு அவங்களுக்கு உணர்த்தினார். தி.மு.க. பக்கம் பலம்கூடுவதைப் பார்த்த ஆளும் அ.தி.மு.க., அடுத்தடுத்த வியூகங்களை நோக்கி நகர்ந்துக்கிட்டு இருக்கு.''
______________
இறுதிச்சுற்று!
இந்து என்.ராமுக்கு விருது!
விருதுகள் உழைப் பிற்கான அங்கீகாரம். தேசிய அளவில் இதழியல் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு விருதுகளை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வழங்கிவருகிறது. இந்த ஆண்டுக்கான ராஜாராம் மோகன்ராய் விருதுக்கு மூத்த பத்திரிகையாளரும் இந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய பத்திரிகை தினமான நவம்பர் 16-ஆம் தேதியன்று அவருக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது. சமீபத்தில் நக்கீரன் ஆசிரியர் கைது விவகாரத்தில், நீதிமன்றத்தில் அவருக்கு ஆதரவாக கருத்துக்கூறி நீதிக்குத் துணைநின்ற அவருக்கு இவ்விருது வழங்கப்படுவது பொருத்தமானதென பொதுமக்களின் வாழ்த்துகளும் குவிகின்றன.
-கீரன்