லருக்கும் சபல வலை விரித்து, ஏராளமான பணத்தையும் நகைகளையும் சொத்து பத்துக்களையும் சுருட்டியிருக்கிறார், ஒரு தில்லாலங்கடி திருநங்கை. அவரிடம் காவல்துறையினரும், திருநங்கைகளும் ஏமாந்திருப்பதுதான் உச்சபட்சக் கொடுமை,

கடந்த 17-ஆம் தேதி, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அந்தத் திருநங்கையால் பாதிக்கப்பட்ட 16 பேர், ஒரே நேரத்தில் புகார் கொடுக்கத் திரண்டிருந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்த, என்னதான் நடந்தது என்று அவர்களில் சிலரிடம் விசாரித்தபோது...

tt

"கடந்த 2007-ஆம் ஆண்டு தனது குடும்பத்தைப் பிரிந்து உடுமலை பேட்டை வந்த ஹேமா என்கிற 29 வயதுடைய திருநங்கை, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் தஞ்சம் அடைந்தார். அந்த வீட்டில் இருந்த அண்ணன், தம்பி இருவரையும் அவர் திருமணம் செய்து கொண்டார். அவர், நாகலாந்தில்... தான் துணை ஆட்சியராகப் பணியாற்றி வருவதாக கூறியதால், அவசரத் தேவைக்கு அவர் கேட்கும்போதெல்லாம் தங்களிடம் இருந்த நகைகளை சகோதரர்கள் இருவரும் அள்ளிக் கொடுத்தனர். அதோடு ஒரு தென்னந்தோப்பையும் அவர்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். பின்னர், அங்கிருந்து அந்தச் சகோதரர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு சென்ற அவர், மீண்டும் ஹேமா என்ற பெயரை பபிதா ரோஸ் என்று மாற்றிக்கொண்டு தென்காசியில் உள்ள ராமசந்திரப்பட்டினத்தைச் சேர்ந்த ராம் குமார் என்பவரின் குடும்பத்தைச் சந்தித்தார். அங்கு, தான் ஒரு ஜமீன் பரம்பரை என்றும் சொத்துத் தகராறு காரணமாக தன்னை வீட்டில் இருந்து துரத்திவிட்டதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய ராம்குமார் குடும்பம், பபிதாவை வீட்டிற்கு அருகி லேயே தங்க வைத்துள்ளனர். அவர்களிடம் 1 லட்சம், 2 லட்சம் என்று பணம் வாங்கி வட்டியுடன் சரியாகத் திருப்பிச் செலுத்தி வந்திருக்கிறார். இதனால் அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது, இந்த நிலை யில் ஒருநாள், தான் ஒரு இடம் வாங்கி யுள்ளதாகவும் அதைக் கிரயம் செய்ய 60 லட்ச ரூபாய் அவசரத் தேவை என்றும் கேட்டுள்ளார். அதனை நம்பிய ராம்குமார் 60 லட்சம் பணத்தைத் தந்துள்ளார். அங்கி ருந்து பணத்துடன் சென்ற பபிதா, அதன் பின் அந்தப் பக்கம் தலைகாட்டவில்லை.

அங்கிருந்து திருச்சிக்கு வந்த பபிதா, கே.கே.நகரில் உள்ள வெற்றிச்செல்வி என்ற மூதாட்டிக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை 38 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி 28 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு, பத்திரப் பதிவு செய்தபிறகு 10 லட்சம் பணம் தராமல் எஸ்கேப் ஆனார். இப்படி தமிழ்நாடு முழுவதும் வலம் வந்தவர், 10 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள் ளார். 10 கிலோ நகையும் வாங்கி வைத்துள் ளார். எனவே தற்போது அவர் திருச்சியில் இருப்பதாக அறிந்து பல்வேறு மாவட்டங் களில் இருந்து பபிதாவால் ஏமாற்ற பட்டவர்கள் வந்திருக்கிறோம்''’என்றார்கள் பரிதாபமாக, இவர்களுடன் சேர்ந்து பபிதா மீது, தென்னிந் திய திருநங்கைகள் கூட்ட மைப்பைச் சேர்ந்தவர்களும் புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின். ஒருங்கிணைப் பாளரும், தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் உறுப் பினருமான அருணா... "சென்னையில் வசித்துவரும் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரான ’"இப்படிக்கு ரோஸ்'’ என்பவரின் பெயரைப் பயன்படுத்தி பபிதா மோசடியில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய பெயரைத் தவறாக அவர் பயன்படுத்துவதாக, "இப்படிக்கு ரோஸ்' சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தமிழகம் முழுவதும் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த காவலர் கள், நில உரிமையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் என்று 50-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியிருக்கிறார். மேலும் பல பேரிடம் நிலத்துக்கு அட்வான்ஸ் மட்டும் கொடுத்து விட்டு, அதன்பிறகு அதைத் தன்னுடைய பெயருக்கு மாற்றி வைத்துள்ளார். 2011-க்கு பிறகு பபிதா ரோஸாக மாறியவர் பலரை தன்னுடைய சபல வலையில் சிக்க வைத்து, திரு மணம் என்ற பெயரில் நகைகள், பணம் உள்ளிட்ட வற்றையும் சுருட்டியிருக்கிறார்''’என்றார்.

இதற்கிடையில் கடந்த 11-ஆம் தேதி, திருச்சி மாவட் டம் மணப்பாறை, மருங்காபுரி, அரண்மனைதோட்டம், அயன்புதுப்பட்டி என்ற முகவரியில் வசித்து வந்த பபிதா, வளநாடு காவல்நிலையத்திற்கு புகாரோடு சென்றிருக்கிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, தனக்கு கார்த்திக் என்ற காவலருடன் திருமணம் நடந்து முடிந்ததாகவும், வரதட் சணை கேட்டு தன்னை அவர் கொடுமை செய்வதாகவும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக காவலர் கார்த்திக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்கிறார்கள். இந்த தில்லாலங்கடி பபிதா பற்றி மேலும் நாம் விசாரித்தபோது, இதுவரை 19 பேரை அவர் திருமணம் செய்துள்ளதாகவும், அவருக்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்களில் பலரும் புகாரை எழுதிக் கொடுக்கத் தயங்கி, வாய்வழிப் புகாரைக் கொடுத்திருப்பதுதான் இதில் டிராஜடி கலந்த வேடிக்கை,

"ஆடம்பரத்தைக் காட்டியும், தன் அழகை மூலதனமாக வைத்தும் ஏராளமானோரை சபல வலையில் வீழ்த்தி மோசடி ராணியாக வலம்வந்த பபிதாவை, உடனடியாகக் கைது செய்யவேண்டும்' என்பதே, பாதிக்கப்பட்டோரின் கோரிக்கையாக இருக்கிறது.

காவல்துறை அதிரடி ஆக்ஷனில் இறங்குமா?

Advertisment