8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

2017 பிப். 17-ஆம் தேதி நடு இரவில் ஓடும் காரில் வைத்து பிரபல நடிகையை கொடூர பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தி அதை வீடியோவாக எடுத்தனர். இந்த வழக்கில் பல்சர் சுனி உட்பட 10 பேர் மீது எர்ணாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையி லடைத்தனர். இதில் 8ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீப், 84 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு ஜாமீ னில் வெளியேவந்தார். 

Advertisment

இந்த நிலையில் எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பை ஒட்டுமொத்த கேரளாவும் எதிர்பார்த்துக்கொண்டி ருந்தது.  விசாரணை முடிந்து கடந்த டிசம்பர் 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹனி எம்.வர்க்கீஸ், நடிகர் திலீப் உட்பட 4 பேரை விடுதலை செய்த தோடு... பல்சர் சுனி, மார்டின் ஆன்டனி, மணிகண் டன், விஜிஷ், சலீம், பிரதீப் ஆகிய 6 பேரை குற்ற வாளிகளாக அறிவித்து, "அவர்களுக்குத் தண்டனை விவரம் டிசம்பர் 12-ம் தேதி அறிவிக்கப்படும்' என்றார்.

deelip1

வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது திலீப்பின் நெருங்கிய நண்பரும் இயக்குன ரான பாலசந்திரகுமார் நவம்பர் 15ஆம் தேதி ஆலு வாயில் உள்ள வீட்டில், திலீப் தனது செல்போனில் நடிகையை கடத்திச் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோக்களைப் பார்த்ததாகவும், அதே வீட்டில் திலீப்பும் பல்சர் சுனியும் பலமுறை சந்தித்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று அவர் பேசியதை போலீசார் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, ஏ.டி.ஜி.பி. பைஜீ கே.பௌலேஸ், பாலசந்திரகுமாரின் ரகசிய வாக்குமூலத்தையும் வாங்கி திலீப் மீது இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்தார். சம்பவத்திற்கு வெளியேயுள்ள நடிகரும் எம்.எல்.ஏ.யுமான முகேஷ், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வி.டி.தாமஸ், இயக்குனர் லால், நடிகை கீர்த்திசுரேஷின் தந்தையும் தயாரிப் பாளருமான சுரேஷ்குமார் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் வாங்கி, திலீப்புக்கு எதிராக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட் டது. இந்த பாலியல் வழக்கு திலீப் என்ற 8ஆம் நபரை மட்டும் சுற்றி நடந்துவந்த நிலையில், திலீப்புக்கு தண்டனை உறுதி என்ற நிலைப்பாட்டில்தான் இருந்துவந்தது. இந்த நிலையில்தான் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹனி எம்.வர்க்கீஸ், திலீப் மீது சாட்டிய குற்றச்சாட்டுகளை போலீசும், அரசு வழக்கறிஞர்களும் நிருபிக்கத் தவறிவிட்டனர் என குறிப்பிட்டார். 

Advertisment

இதுகுறித்து அரசு வழக்கறிஞர் அஜய்குமார் கூறும்போது, “"834 ஆதாரங்கள், 261 சாட்சிகள், 142 அழிக்கப்பட்ட தடயங்கள், 1,512 பக்கமுள்ள  விசாரணை விவரங்களை  கோர்ட்டில் தாக்கல் செய்தோம். இதையெல்லாம் வைத்து 438 நாட்கள் சாட்சி விசாரணை மேற்கொண்டு 8 ஆண்டுகள் வழக்கு நடந்தபின் 9 நிமிடத்தில் தீர்ப்பை கூறி முடித்தார் நீதிபதி. இதில் நடிகர் திலீப் விடுதலை என்பது எங்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது சுரேசன், அனில்குமார் என்ற இரண்டு அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்தனர். அதுபோல 21 சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறினார்கள். நீதிபதி ரகசியமாக இல்லாமல் நடிகையிடம் 30 வழக்கறிஞர்கள் முன்னிலையில்தான் தொடர் விசாரணையை நடத்தினார். மேலும் வழக்கறிஞர்கள் கேட்கக்கூடாத நாக் கூசும் கேள்விகளை கேட்கும்போது அதை நீதிபதி தடுக்கவில்லை. இதனால் நடிகை மனஉளைச்சலுக்குள்ளானார்''’என்றார்.

deelip2

இதுகுறித்து நடிகை தரப்பிலான தனியார் வழக்கறிஞர் மினி கூறும்போது, "நடிகர் திலீப் ஆலப்புழை ரைபானில் ஹோட்டலில் நடிகை காவ்யா மாதவனுடன் தங்கியிருந்ததை, திலீப்பின் மனைவியான மஞ்சுவாரியாரிடம் (தற்போது இருவரும் பிரிந்துவிட்டனர்) கூறினார். அந்த கோபத்தில் நடிகையைப் பழிவாங்க வேண்டுமென்ற திட்டத்தில் குண்டர்களை ஏவி நாசம் செய்திருக்கிறார். இதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே போலீசிடம் உள்ளது. இதையெல்லாம் வைத்துதான் போலீசார் திலீப் மீது வழக்குப் பதிவு செய்தனர். மலையாள நடிகர்கள் சங்கமான "அம்மா'வில் பொருளாளர் பதவியிலிருந்தும், உறுப்பினர் என்பதிலிருந்தும் திலீப்பை  நீக்கினார்கள். திலீப்பை நீக்குவதற்கு  முன்னணி நடிகைகள் பலர் ஆதரவு கொடுத்தனர். நடிகைக்கு நடந்த சம்பவத்திற்கு திலீப்தான் காரணகர்த்தா என்று மலையாள சினிமா உலகத்திற்கே தெரியும்.  இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யாக இருந்த ஏ.டி.ஜி.பி. சந்தியா ஓய்வுபெற்றதும் வழக்கின் விசாரணையே மாறியது. பாதிக்கப் பட்ட நடிகைக்கு எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லை. மலையாளத் திரையுலகில் கிரீடம் வைக்காத ராஜாவாக திலீப் இருக்கிறார். இதற்காக நடிகை மனம் தளரவில்லை. நீதி கிடைக்க போராடுவார்''’என்றார்.

deelip3

திலீப் தரப்பினர் கூறும்போது, “"திலீப்பை இந்த வழக்கில் சேர்த்ததே மஞ்சுவாரியாரின் நெருங்கிய அரசியல் தொடர்புகள்தான். இந்த சம்பவம் நடக்கும்போது டி.ஜி.பி.யாக         இருந்து தற்போது ஓய்வுபெற்ற சென்சாய்குமார், இந்த வழக்கில்      திலீப் சேர்க்கப்பட்டார் என்றே கூறியிருக்கிறார். நீதிபதி ஹனி எம்.வர்க்கீஸ்தான் என்னுடைய வழக்கை விசாரிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் மூலம் கேட்டதே நடிகைதான். நீதித் துறை சரியாக இயங்கியதால் திலீப் விடுதலை பெற்றார்''’என்றனர்.