சிதம்பரம் நடராஜர் கோவில் என்றதும் தீட்சிதர் களின் அத்துமீறிய செயல் தான் பொது மக்களுக்கும், பக்தர்களுக்கும் நினைவுக்கு வரும். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக நடராஜர் கோவிலின் உள்ளே யுள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தில்லை கோவிந்தராஜா பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பிரம்மோற்சவம் நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில், தெய்வீக பக்தர்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா என்பவர் பிரம்மோற்வசம் நடத்த வேண்டுமென்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் இந்து அறநிலை யத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளார்.

cc

இதுகுறித்து எம்.என்.ராதா கூறுகையில், "கி.பி.726-775 காலகட்டத்தில் நந்திவர்ம பல்லவன் தனி சன்னதியாகத் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலைக் கட்டியுள்ளார். விக்கிரம சோழன் மகன் இரண்டாம் குலோத்துங்கன் கி.பி.1113-1150 காலகட்டத்தில் கோயில் கட்டுமானப் பணியின்போது தில்லை கோவிந்தராஜ பெருமாள் சிலையை அப்புறப் படுத்தியுள்ளார். இதனால் அப்போதே கோயிலில் வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள் ளது. கோவிந்தராஜ பெருமாள் சிலை யை குலோத்துங்க சோழனின் படை வீரர்கள் பிச்சா வரம் ஆழ்கடலில் வீசியெறிய, 1564-1572 காலகட்டத் தில் கிருஷ்ணப்ப நாயக்கர், பெருமாள் சிலையைக் கண்டுபிடித்து மீண்டும் அதே இடத்தில் நிறுவியுள்ளார். அதன்பிறகு பிரம்மோற்சவம் நடைபெற்றுள்ளது. இதனைத்தான் கமலின் "தசாவதாரம்' படத்தில் காட்டி யிருந்தார்கள்.

இதுபோன்ற வரலாறு கொண்ட கோயி லில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தால் 400 ஆண்டுகளுக்கு மேலாக பிரமோற்சவம் நடைபெறவில்லை. நடராஜர் கோயில் சாவி தீட்சிதர்களிடம் உள்ளதால் அவர்களுக்கு கட்டுப்பட்டு குரலெழுப்பப் பயப்படுகிறார்கள். 108 பிரபஞ்ச வைணவ தலங்களில் இதுவும் ஒன்று. எனவே அரசு முயற்சியெடுத்து பிரம்மோற்சவத்தை நடத்த வேண்டும்'' என கூறுகிறார்.

Advertisment

மேலும் கடந்த 1500 ஆண்டுகளுக்கு முன் இருந்த சைவ, வைணவ பிரச்சனையை இன்னும் தீட்சிதர்கள் கடைபிடித்து வருகிறார்கள் இந்த விஞ்ஞான காலத்திலும்'' என்றார்.

தில்லை நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் சிவராமன் கூறுகையில், "இங்கு பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான எந்த வரலாறும் இல்லை. இங்கு நடராஜர் (சிவன்)தான். கோயிலுக்குள்ளே பெருமாள் கோயில் தனி சன்னதிதான். எனவே இங்குப் பிரம்மோற்சவம் நடைபெற வாய்ப்பு இல்லை. மீறி நடத்தினால் எதிர்ப்போம்" என்றார். தீட்சிதர்கள் பிரம் மோற்சவ விஷயத்தில் விட்டுக் கொடுக்க வேண்டுமென்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

-காளிதாஸ்