சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் அனுமதியின்றி கட்டடங்களை தீட்சி தர்கள் கட்டிவருவதாக சென்னை உயர்நீதிமன்றத் தில் இந்து அறநிலையத்துறை சார்பாகவும், ராதா என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். நீதிமன்ற விசாரணையின்போது தீட்சிதர்கள், கட்டுமானப் பணியில் ஈடுபட மாட்டோம் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், கோவிலில் விதிமுறைகளை மீறிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதா? என இந்து அறநிலையத் துறை 3 பேர், தொல்லியல் துறை 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், கோவில் வளாகத்துக்குள் கட்டுமானப் பணிகளை அனுமதியின்றி தீட்சிதர்கள் மேற்கொள்கின்றனர் எனக்கூறி அதற்கு ஆதாரமாகப் புகைப்படங்களைத் தாக்கல் செய்தனர். இதற்கு நீதிபதிகள், "பாரம் பரியமிக்க புராதனச் சின்னமாகத் திகழும் சிதம் பரம் கோவில்மீது கை வைக்க யாரையும் அனு மதிக்க மாட்டோம். சிதம்பரம் கோவிலென்பது பக்தர்களின் சொத்து. அதன்மீது யாரும் உரிமை கொண்டாட முடியாது" என்றனர்.

sss

இதனைத் தொடர்ந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சங்கர் ஐ.ஏ.எஸ். தலைமையில் அங்கு வந்த 6 பேர் கொண்ட குழுவினர், விதிமீறலாகக் கட்டப்பட்ட கட்டடங்கள்குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளதாக தீட்சிதர்களிடம் கடிதம் அளித்தனர். தீட்சிதர்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்ததை மீறி, ஆய்வு செய்து, விதிமீறல் கட்டடங் களைப் புகைப்பட மெடுத்தனர்.

செய்தி யாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் சங்கர் ஐ.ஏ.எஸ்., "கோவிலில் பிரதான சின்னங்களை அழித்து பூங்கா அமைக்கப் பட்டுள்ளது. புதுப்புது சன்னதிகளைக் கட்டியுள்ளனர். கோவில் உள் பிரகாரத்தில் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளனர். பண்டையகால ஓவியங்களை அழித்து வரலாற்றை மாற்றியுள்ளனர். கல்வெட்டு எழுத்துகளை அழித்துள்ளனர். யானைக்கு மண்டபம், மாட்டுத் தொழுவம், அன்னதானக் கூடம் அமைத்துள்ளனர். இது போன்ற விதிமீறல்களை அரசுக்கும் ,உயர் நீதிமன்றத்திற்கும் புகைப்பட, வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப் பிப்போம்'' என்றார்.

மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜி, "பண்டைய காலத்தில் தீட்சிதர்களே மண் சுமந்து கோவிலைக் கட்டுவதற்கான வேலைகளைச் செய்வது போல் புராதன சின்னங்களை மாற்றிவருகிறார்கள். அதேபோல், கேரளா மாடல் கட்டடமாக பழமையான கட்டடத்தை மாற்றியுள்ளனர். கோவில் பிரகாரத்திலுள்ள பழமைவாய்ந்த கருங்கற்களிலுள்ள பண்டைய கால எழுத்துக்களை அழித்துவிட்டு, அக்கற்களால், குளுகுளு வசதியுடனான அறையைக் கட்டியுள்ளனர். இனி இக்கோவிலுக்கான வரலாற்றையே மாற்றி விடுவார்கள்'' என்றார்.

சிதம்பரம் கோவிலை தீட்சிதர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்!

-காளிதாஸ்