டிஜிட்டல் வில்லன்! சிறுமியை சிதைத்த மாணவர்கள்! மெத்தன காவல்துறை?

ss

முதல்நாள் வீட்டி லிருந்து வெளியேறி, மறுநாள் வீட்டிற்குத் தானாகவே வந்திருக்கின்றார் சிறுமி ஒருவர். வழக்கை முடிப்பதற்காக வந்த காவல் துறை சிறுமியிடம் வாக்கு மூலம் வாங்க, 7 கல்லூரி மாணவர்களால் அச்சிறுமி கூட்டுப்பாலியல் பலாத் காரம் செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் தெரிய வந்திருக் கின்றது. 7 மாண வர்கள் மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டாலும், புகார் வந்தவுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பாவது குறைந் திருக்கும்தானே? என காவல்துறையின் மெத்த னத்தை சமூக வலைத்தளத்தில் விளாசிவருகின்றனர் பொது மக்கள்.

கோவை மாநகரம் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் நதியா (பெயர் மாற்றப் பட்டுள்ளது). +2 வரை படித்த இவர், மேற்கொண்டு உயர்கல்வி பயிலாமல் பெற்றோருடன் வசித்து வந்திருக்கின்றார். சமீபத்தில் இவரது தாத்தா இறந்த நிலையில் பாட்டிக்குத் துணையாக இருக்கும் பொருட்டு அவருடன் தங்கிவந்திருக்கிறார். பெரும்பாலும் கையில் இருந்த செல் போனுடன் பொழுதைத் தொலைத்த இவருக்கு நய்ஹல்ஈட்ஹற் செயலி அறிமுகமாகியிருக்கின்றது. அதன்மூலம் ஆண் நண்பர்கள் அறிமுக மாகியிருக்கின்றனர்.

ss

இதில் வெளியூரிலிருந்து கோவைப் பகுதியிலுள்ள கல்லூரியில் படிக்கும் மாணாக்கர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கோவைப்புதூர், குனியமுத்தூர், உக்கடம் பகுதியில் வீடெடுத்து தங்கி கல்வி பயி

முதல்நாள் வீட்டி லிருந்து வெளியேறி, மறுநாள் வீட்டிற்குத் தானாகவே வந்திருக்கின்றார் சிறுமி ஒருவர். வழக்கை முடிப்பதற்காக வந்த காவல் துறை சிறுமியிடம் வாக்கு மூலம் வாங்க, 7 கல்லூரி மாணவர்களால் அச்சிறுமி கூட்டுப்பாலியல் பலாத் காரம் செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் தெரிய வந்திருக் கின்றது. 7 மாண வர்கள் மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டாலும், புகார் வந்தவுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பாவது குறைந் திருக்கும்தானே? என காவல்துறையின் மெத்த னத்தை சமூக வலைத்தளத்தில் விளாசிவருகின்றனர் பொது மக்கள்.

கோவை மாநகரம் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் நதியா (பெயர் மாற்றப் பட்டுள்ளது). +2 வரை படித்த இவர், மேற்கொண்டு உயர்கல்வி பயிலாமல் பெற்றோருடன் வசித்து வந்திருக்கின்றார். சமீபத்தில் இவரது தாத்தா இறந்த நிலையில் பாட்டிக்குத் துணையாக இருக்கும் பொருட்டு அவருடன் தங்கிவந்திருக்கிறார். பெரும்பாலும் கையில் இருந்த செல் போனுடன் பொழுதைத் தொலைத்த இவருக்கு நய்ஹல்ஈட்ஹற் செயலி அறிமுகமாகியிருக்கின்றது. அதன்மூலம் ஆண் நண்பர்கள் அறிமுக மாகியிருக்கின்றனர்.

ss

இதில் வெளியூரிலிருந்து கோவைப் பகுதியிலுள்ள கல்லூரியில் படிக்கும் மாணாக்கர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கோவைப்புதூர், குனியமுத்தூர், உக்கடம் பகுதியில் வீடெடுத்து தங்கி கல்வி பயிலும் ஜெபினின் பழக்கம் முதலில் ஏற்பட்ட நிலையில், அவர் ரக்சித் எனும் வேறொரு கல்லூரியில் படிக்கும் மாணவனை அறிமுகப்படுத்தியிருக்கின்றார். இது இப்படியே தொடர்ந்த நிலையில், மேலும் பல மாணவர்களுடன் நய்ஹல்ஈட்ஹற் செயலி மூலம் பேசிவந்திருக்கின்றார். இந்த நிலையில் 16-ஆம் தேதி மாலை வேளையில் பாட்டி வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார் அச்சிறுமி.

"அங்க இருக்காளா?'’என பாட்டி வீட்டில் போன் வந்த நேரத்திலிருந்து அவளைத் தேடத் தொடங்கினோம். அவளுக்கு நண்பர்கள் யாரும் கிடையாது என்பதால் பக்கத்துல எங்கேயாவது போயிருப்பாள் என்று தேடினோம். அவளுடைய மொபைல் போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகுதான் உக்கடம் காவல்துறையில் புகாரளித்தோம். அவளுடைய புகைப்படம், மொபைல் எண்ணை வாங்கியவர்கள் சிறுமியைத் தேடுவதாகக் கூறினார்கள். அன்றைய இரவு தாண்ட, மறுநாள் அதிகாலை வேளையில் அச்சிறுமி வீட்டிற்கு வந்தார். "என்ன? ஏது?' என பதறிப் போய் விசாரிக் கையில், அவள் சோர்வாக இருப்பது மட்டும் தெரிந்தது. தொடர்ச்சியாக விசாரிக்கையில் "ப்ரெண்ட் வீட்டிற்குப் போனேன்... தூங் கிட்டேன்....' என சமாளிக்கத்தான் செய்தாள். என்ன செய்வதென்று தெரியவில்லை. "காணவில்லை' என உக்கடம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தோம். தானாக வந்துவிட்டாள் என்பதை அவர் களிடம் கூறி புகாரை வாபஸ் வாங்கவேண்டும் என்றுதான் போலீஸிடம் தெரிவித் தோம். போலீஸ் விசாரிக்கையில்தான், இவளுடைய நய்ஹல்ஈட்ஹற் செயலிமூலமாக நண்பர்கள் பழக்கம் இருந்ததையும், அதில் இரண்டு மாணக்கர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தது உட்பட அனைத்தும் தெரிந்தது.

தொடர்ந்து விசாரிக்கையில், காதலர் தின பார்ட்டி தருகின்றோம் என்று கூறி இவளை ஜெபின் எனும் மாணவன் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றிருக்கின்றான். தெரு முனையில் ரக்சித் சேர்ந்துகொள்ள குனியமுத்தூர் பகுதியிலுள்ள தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கூடுதலாக சில கல்லூரி மாணவர்கள் இணைந்துகொள்ள அந்த அசிங்கம் அரங் கேறியிருக்கின்றது. அனைத்திற்கும் காரணம் கையி லிருக்கும் அந்த டிஜிட் டல் வில்லனே'' என் கின்றார் சிறுமியின் உறவினர் ஒருவர்.

சிறுமியின் வயது 18 நிறைவடையாததால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த ஜெபின், ரக்சித், அபினேஸ்வரன், தீபக், யாதவ் ராஜ், முத்து நாகராஜ், நித்திஷ் ஆகிய 7 கல்லூரி மாணவர்கள் மீது போக்ஸோ வழக்கினைப் பதிவு செய்தது உக்கடம் காவல்துறை. இதேவேளையில், சிறுமியின் மொபைல் மற்றும் மாணாக்கர் களின் மொபைல்களை பறிமுதல் செய்த காவல்துறை சிறுமியிடம் வேறு யாராவது அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கின்றனரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றது.

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரோ, "வீட்டிலிருக்கும் குழந்தைகள் என்ன செய்கின்றார்கள்? என்று கண்காணித்திருந்தாலே இதுபோல் பிரச்சனை எழ வாய்ப்பில்லை. ஒரே நேரத்தில் இச்சிறுமி கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கின்றார். அச்சமயம் போதை வஸ்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றதா? என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும்.

புகார் வந்த பிறகு காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன? முதல் நாள் இரவு சிறுமியை கூட்டிச் சென்றவர்கள் அடுத்தநாள் அவர்களாகவே சிறுமியை பாட்டி வீட்டின் அருகில் விட்டுச்சென்றி ருக்கின்றனர். அதன்பிறகும் பாதிக்கப்பட்ட தரப்புதான் காவல்நிலையத்துக்கு சென்றிருக்கிறது. புகார் வந்த உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் காவல்துறை, தானே சிறுமியை மீட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பாவது குறைந்திருக்கும்தானே.? இது முழுமையாக காவல்துறையின் மெத்தனத்தை காட்டுகிறது. சிறுமியின் மொபைல் போன் சிக்னல், மொபைல் அழைப்புகளை ஆராய்ந்திருந்தால் அரை மணி நேரத்தில் சிறுமியை மீட்டிருக்க முடியுமே. ஆனால் அடுத்தநாள் அவர்களாக கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள் எனும்போது, காவல்துறை எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லையா என்ற கேள்வி வருகிறது'' என்கின்றார் அவர்.

காவல்துறை எப்போதுதான் சீரியஸாக செயல்படத் தொடங்குமோ?

___________________________

தஞ்சம் கேட்ட ஒடிசா பெண்ணை கணவன் கண்முன்னே சீரழித்த பீகாரிகள்!

ss

டிசா மாநிலத்திலிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை தேடி திருப்பூருக்கு ரெயிலில் 27 வயதுடைய பெண், தனது கணவர் மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் கடத்த 17-ஆம் தேதி இரவு திருப்பூர் வந்துள்ளனர். இவர்கள் இரவில் எங்கு செல்வது எனத் தெரியாமல் நின்றுள்ளனர். அப்போது அங்கு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது நதிம், முகமது டேனிஸ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் பனியன் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சுமி நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இரவு தங்கள் அறையில் தங்கிக்கொள்ளலாம் என ஆறுபேரும் இரவு உணவு உட்கொண்டுவிட்டு அறையில் தூங்கியுள்ளனர். திடீரென கத்தியைக் காட்டி பெண் மற்றும் கணவரை மிரட்டி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு, இதனை வெளியில் கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டியும் உள்ளனர்.

அங்கிருந்து தப்பித்து வெளியேறிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். சற்றும் தாமதமில்லாமல் வழக்குப் பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் முகமது நதிம், முகமது டேனிஸ் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது உயிர் பயம் ஏற்படுத்துதல் மற்றும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

-ஆதித்யா

nkn220225
இதையும் படியுங்கள்
Subscribe