மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் ஆதார் உள்ளிட்ட பல்வேறு தேவை களுக்காக பொது இ-சேவை மையங்கள் நடத்தப்பட்டுவந்தன. ஆரம்பகட்டத்தில் இத்திட்டங் களுக்காக படித்த பட்டதாரி இளைஞர்கள்- பெண்கள் இம்மையங்களில் பணிபுரிந்தனர். இப்படி பணியாற்றியவர்களில் திறமையானவர்களுக்கு அங்கீ காரம் தந்து இ-சேவை மையம் நடத்த அனுமதிக்கும்படி மாநில அரசுக்கு மத்திய அரசு ஆலோ சனை தந்தது. கிட்டத்தட்ட 159 பேர் விண்ணப்பித்தனர். அனை வருக்கும் தகுதியடிப்படையில் அனுமதியும் வழங்கப்பட்டது.
பல மாவட்டங்களில் இத்தகைய இ-சேவை மையங்கள் சிறப்பாகச் செயல்பட, விழுப்புரம் மாவட்டத்திலோ அதிகாரிகள் அனுமதி வழங்கிய 100-க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்பட வில்லை. இந்த மையங்களுக்கு வழங்கிய ஐ.டி.யைப் பயன்படுத்தி முறைகேடுகள் நடந்துவருவதாக புகார்சொல்கிறார்கள் இ-சேவை மைய அங்கீகாரம் பெற்ற பலரும்.
சின்னசேலத்தைச் சேர்ந்த விஜயகுமார், “""2017-ஆம் ஆண்டு தமிழக அரசு எனக்கு அங்கீகாரம் வழங்கியது. 90 கிலோமீட்டர் தள்ளியுள்ள செஞ்சியருகேயுள்ள இன்னம் கிராமத்தில் இ-சேவை மையம் ஒதுக்கினார்கள். தூரமாக உள்ளதாலும், வருமானம் கட்டுப் படியாகாது என்பதாலும் சின்னசேலத்திலேயே அனுமதி கேட்டு விண்ணப்பித்தேன். அதி காரி மறுத்துவிட்டார். ஆனால் என் பெயரிலேயே மையம் உள்ளதுபோல் எங்களுடைய ஐ.டி.யைப் பயன்படுத்தி 1400-க் கும் மேற்பட்ட விண்ணப்பங் களுக்கு சான்றிதழ் கொடுக்கப் பட்டுள்ளது. நாளைக்கு போலி ஆவணம் கொடுத்த சிக்கல் வரக்கூடாதென 14 முறை புகார் கொடுத்தும் காவல்துறையும் கலெக்டர் அலுவலகமும் கண்டு கொள்ளவேயில்லை''’என்கிறார் ஆத்திரத்துடன்.
திண்டிவனம் அருகேயுள்ள குணமங்கலத்தில் பொதுசேவை மையம் நடத்திவரும் காயத்ரி யோ, ""என்னுடைய பயனர் அங்கீகார ரகசிய எண்ணைப் பயன்படுத்தி 140-க்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொடுத்துள்ளனர். காவல்துறையில் புகார் கொடுத்தும் பல மாதங்களாக விசாரணையே தொடங்கவில்லை''’என்கிறார்.
கீழ்மலையனூரில் பொதுசேவை மையம் நடத்திவரும் நவநீதகிருஷ்ணன், ""எனக்கு வழங் கப்பட்டுள்ள அங்கீகாரத்தை எனக்குத் தெரியா மலே வேறொரு நபருக்கு மாற்றி முறைகேடு செய்துள்ளனர். முறைகேடு சம்பந்தமாக ஆதாரங்களுடன் மாவட்ட காவல்துறையிடம் புகார் கொடுத்தேன். அவர்களோ நீதிமன்றத்தில் வழக்குப்போட்டு தீர்வு காணுங்கள் என்கின்ற னர். நடந்துள்ளது கிரிமினல் குற்றம்... போலீசோ கைகழுவுகிறது''’என நொந்துபோய் சொல்கிறார்.
"பொது இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பித்த பலரிடமும் ரூ 50,000 வரை லஞ்சம் கேட்டார்கள். கொடுத்தால் நாம் கேட்ட இடத்திலே மையம் செயல்பட அனுமதி கிடைக்கும் என்றனர். பணம் கொடுக்காதவர்களுக்கு தூரமான, வசதியற்ற இடத்தில் மையம் அமைக்க உத்தரவிட்டிருக்கின்றனர். மேலும் அதிகாரிகளே மையம் அமைக்க தகுதியற்றவர்களை தங்களது பினாமிகளாக நியமித்து, எங்கள் கையெழுத்தோ, அனுமதியோ இல்லாமல் சான்றுகள் கொடுக்கின்றனர்' என கோரஸாகக் குற்றம் சுமத்துகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனோ, ""இதுபற்றி எதுவுமே எனக்குத் தெரியாது’’ என்கிறார். மாவட்ட இ-சேவை மைய மேலாளர் பிரசாந்த்தான், இ-சேவை மையங்களுக்கு கலெக்டர் பெயரில் பல சுற்றறிக்கைகளை அனுப்பிவருகிறார். இந்த சுற்றறிக் கைகள் குறித்துத் தெரிந்த கலெக்டருக்கு, நடக்கும் முறைகேடுகள் பற்றி மட்டும் தெரியாதா'' என்கின்றனர் பாதிக்கப்பட்டோர்.
அதிகாரிகள் அனுமதிவழங்கிய இ-சேவை மையம் செயல்படவில்லையென்றால், அதை முறையாக ரத்துசெய்து விட்டு மீண்டும் விளம்பரம் செய்து வரும் விண்ணப்பங்களி லிருந்து பரிசீலித்து தேர்வுசெய்யப்படும் ஒருவருக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும். அதைவிடுத்து அனுமதி பெற்றவர்களின் கவனத்துக்கு வராமலே மையங்கள் மூலம் சான்றுகள் கொடுப்பது முறையா? என்பதே பாதிக்கப்பட்டோரின் முறையீடாக இருக்கிறது.
மாவட்ட இ-சேவை மைய மேலாளர் பிரசாந்திடமே, இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தோம். அவரோ, “""இ-சேவை மையம் செயல்படுவதற்கு அனுமதி பெற்றவர்களில் சிலர் முறை கேடாகச் செயல்பட்டுவிட்டு, எங்கள் மீது புகார் கொடுக்கின்றனர். தற்போது அந்த அனுமதியை ரத்துசெய்துள்ளோம். மாவட்ட ஆட்சியரிடம் இது சம்பந்தமாக உரிய விளக்கம் தரப்பட்டுள்ளது''’என்கிறார். முறைகேடு செய்பவர்கள் யார்?
-எஸ்.பி.சேகர்