ன்லைன் பரிமாற் றத்தில் பல்வேறு கிரிமினல் நபர்கள் புகுந்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை அபகரிப்பது அதிகரித்துவருகிறது. அதற்காக பல்வேறு நூதன மோசடி வழிகளை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இப்படியான மோசடியில் பணத்தை இழந்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப் பட்டுள்ளன. இதுகுறித்த விழிப்புணர்வு பெற, ஒருசில சம்பவங்களை நாம் பார்க்க வேண்டும்.

Advertisment

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கட்டுமான நிறுவன மேலாளர் டேனியல் சுந்தர். கண்டங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர், வீட்டு கட்டுமானப் பொருட்களை இவரிடம் அவ்வப்போது வாங்கி வந்துள்ளார். இதை பயன் படுத்திக் கொண்ட நவீன திருடர்கள், அந்த கடைக்கு போன் செய்து, 39 ஆயிரம் ரூபாய்க்கு கட்டுமானப் பொருட்களை அனுப்பி வைக்குமாறு முருகனே கேட் பது போன்று அவரது குரலில் பேசி யுள்ளனர். அதை நம்பிய டேனியல், கேட்ட பொருட்களையெல்லாம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அதற்குரிய பணத்தை முருகன் தரவேயில்லை. இதனால் சந்தேகமடைந்த டேனியல், முருகனுக்கு போன் செய்து கேட்டபோது, நான் பொருட்களை அனுப்புமாறு கேட்கவில்லையே எனக் கூறியுள்ளார். அப்போதுதான் நவீன கொள்ளையர்கள் இடையில் புகுந்து விளையாடியது தெரிந்தது. உடனே சம்பந்தப் பட்ட கடை மேலாளர் டேனியல், தேவிகுளம் போலீசில் புகாரளித்தார். போலீசாரின் விசாரணை யில், சென்னை கொரட்டூர் பாலாஜி நகரை சேர்ந்த விக்னேஷ், ரகுமான் ஆகிய இருவரும் நூதன முறையில் கட்டுமானப் பொருட்களைக் களவாடியது கண்டுபிடிக்கப் பட்டது.

Advertisment

ss

இது இப்படியென்றால், சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் அருகேயுள்ள அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர், தனது காதலி மங்கையர்க் கரசியை அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு தனது பைக்கில் அழைத்துச் சென்றுகொண்டி ருந்தபோது, கரம்பை என்ற இடத்தினருகே மங்கையர்க்கரசி வாந்தியெடுக்க, உடனே பைக்கை ஓரங்கட்டினார் தமிழரசன். அப் போது திடீரென்று ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களைச் சுற்றிவளைத்து கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியது. தங்க ளிடம் பணமில்லையெனக் கூறிய போதும், கூகுள் பே மூலம் எங்க ளுக்கு பணம் அனுப்புங்கள் இல்லை யென்றால் கொலை செய்வோமென மிரட்ட, தமிழரசன் தனது சகோ தரிக்கு போன் செய்து 3,000 ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். அந்த பணத்தை அக்கும்பல் தங்கள் வங்கிக்கணக்குக்கு பரிமாற் றம் செய்தபின் பறந்தோடியுள்ளனர். இதுகுறித்து தமிழர சன் கள்ளப்பெரம்பூர் போலீசாரிடம் புகாரளிக்க, போலீ சாரின் தீவிர விசாரணையில் தஞ்சை வடகால் பகுதியை சேர்ந்த பாபு, மணிகண்டன், வல்லரசு, சார்லஸ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். விக்கி என்பவரைத் தேடிவருகின்றனர்.

உளுந்தூர்பேட்டையில் செல்போன் கடை வைத்துள்ள யூசுப்கான் கடைக்கு கடந்த 16ஆம் தேதி மூன்று பேர் வந்துள்ளனர். அவசரமாக 2,000 ரூபாய் தேவைப்படுவதாகவும், போன்பே மூலமாக அத்தொகை யை அனுப்புவதாகவும் கூறி 2000 ரூபாயைப் பெற்று விட்டு, போன்பே மூலம் 2000 ரூபாயை அனுப்பியது போல் காட்டியுள்ளனர். ஆனால் அத்தொகை யூசுப்கான் வங்கிக்கணக்குக்கு வரவேயில்லை. இவர்கள் இதேபோல் பல்வேறு பகுதிகளில் வசூலித்து சுமார் 16 ஆயிரம்வரை சுருட்டியுள்ளனர். யூசுப் கான் அளித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, காத்தவ€ ராயன், அஜய், ஸ்ரீகாந்த் ஆகிய மூவரை கைது செய்தனர்.

Advertisment

ss

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் நடை பெறும் இத்தகைய குற்றச்செயல்கள் குறித்து திண்டிவனம் வழக்கறிஞர் முனியாண்டி நம்மிடம், "இணைய வழி கிரிமினல் பேர்வழிகள் மக்களின் ஆசையை தூண்டுவார் கள். அந்த தூண்டிலில் சிக்குபவர்கள் தங்கள் பணத்தை நிச்சயம் இழப்பார்கள். காவல்துறை பல்வேறு விழிப் புணர்வுகளை ஏற்படுத்தியும் பலர் ஏமாறுகிறார்கள். குலுக் கல் முறையில் கார், இருசக்கர வாகனம் பரிசு விழுந்துள் ளது என்றெல்லாம் ஆசைகாட்டி பணம் பறிக்கிறார்கள். பேராசையால்தான் பலரும் தங்கள் பணத்தை இழக் கிறார்கள். எனது நண்பரின் மகளுக்கு, அவரது புகைப் படத்தை மார்பிங் செய்து நிர்வாணக்கோலத்தில் சமூக வலைத்தளத்தில் ஏற்றப்போவதாக செல்போன் மூலம் மிரட்டி பணம் வசூலிக்க முயற்சி செய்தனர். இந்த விவரம் தெரியவந்ததும் காவல் துறையில் புகாரளித்தோம். காவல் துறையினர் அந்த மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை பிளாக் செய்யும்படியும், இனியும் மிரட்டினால் தகவல் தெரிவிக்குமாறும் கூறினர். இதுபோன்று மிரட்டி பணம் பறிப்பது குறித்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு வந்தபோதும் பெருமளவு பொதுமக்களை சென்று சேரவில்லை. ஒரு சமூக நோக்கோடு டிவி, ஆன்லைன் என அனைத்துவகைகளிலும் விழிப் புணர்வுப் பிரச்சாரத்தை முன் னெடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்'' என்றார்.

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் துரைமணி நம்மிடம், "முகமறியாத வர்கள் நமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பி அதை திருப்பி அனுப்புமாறு கேட்டால் மீண்டும் அதே வகையில் பணத்தை திருப்பி அனுப்பக்கூடாது. சம்பந்தப்பட்ட நபரை அருகிலுள்ள காவல் நிலையத் திற்கு வந்து பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு கூறுங்கள். அப்போது தான் மோசடிப் பேர்வழிகளை அடையாளங்கண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.