Advertisment

உறுப்பினர் சேர்க்கையில் டிஜிட்டல் மோசடி! பா.ஜ.க.வில் பகீர்!

tirupathur-bjp


பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையில் டிஜிட்டலாக பிராடு வேலை செய்து பதவிக்கு வந்துள்ளார்கள் என்று பா.ஜ.க. பிரமுகரே குற்றம்சாட்டியிருப்பது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்சி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. அதில் ஒன்றிய தலைவர் தேர்வில் மோசடி நடந்துள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய முன்னாள் பொதுச்செயலாளர் மிட்டூர் விவாகர், "எங்கள் கட்சியில் கடந்த 2024ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த மாவட்டத்துக்கு கட்சியின் மாநில துணைத்தலைவராக இருந்த சக்கர வர்த்தி, மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டார். திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் 8 பஞ்சாயத்துகளில் 48 பூத்துகள் உள்ளன. பூத் கமிட்டி தலைவர்கள் வாக்களித்து தான் ஒன்றியத்தலைவர் தேர்வு செய்யப்படுவார். ஒரு பூத்துக்கு 50 பேரை உறுப்பினராக்க வேண்டும். கிழக்கு ஒன்றியத்தில் 48 பூத்துகளில் 10 பூத் தவிர மற்றவற்றில் உறுப்பினர்களே இல்ல


பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையில் டிஜிட்டலாக பிராடு வேலை செய்து பதவிக்கு வந்துள்ளார்கள் என்று பா.ஜ.க. பிரமுகரே குற்றம்சாட்டியிருப்பது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்சி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. அதில் ஒன்றிய தலைவர் தேர்வில் மோசடி நடந்துள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய முன்னாள் பொதுச்செயலாளர் மிட்டூர் விவாகர், "எங்கள் கட்சியில் கடந்த 2024ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த மாவட்டத்துக்கு கட்சியின் மாநில துணைத்தலைவராக இருந்த சக்கர வர்த்தி, மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டார். திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் 8 பஞ்சாயத்துகளில் 48 பூத்துகள் உள்ளன. பூத் கமிட்டி தலைவர்கள் வாக்களித்து தான் ஒன்றியத்தலைவர் தேர்வு செய்யப்படுவார். ஒரு பூத்துக்கு 50 பேரை உறுப்பினராக்க வேண்டும். கிழக்கு ஒன்றியத்தில் 48 பூத்துகளில் 10 பூத் தவிர மற்றவற்றில் உறுப்பினர்களே இல்லையென்பதால் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது. எங்கள் கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு ஒரு மொபைல் எண் தந்துள்ளார்கள். அதற்கு மிஸ்டுகால் தந்தால் அடுத்த சில நொடிகளில் "இணைந்தமைக்கு நன்றி' எனச் சொல்லி உறுப்பினர் சேர்க்கை எண் வரும். அந்த எண்ணை உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் குறிப்பிட்டு, அதை மாவட்ட அலுவலகத்தில் தந்தால் உறுப்பினரின் பெயரிலிருக் கும் லாகின், பாஸ்வேர்டை ஓப்பன் செய்து இணைப்பார்கள். பெருமாப்பட்டு கிராமத் தை சேர்ந்த சக்தி கேந் திரா பொறுப்பாளர் ராஜா, மூர்த்தி இருவரும் ஒன்றிய தலைவராக வேண்டுமென 48 பூத்துகளில் பூத் கமிட்டி அமைக்க முயற்சி செய்தார்கள். ஆனாலும் 28 பூத்துகளில் உறுப்பினர் சேர்க்கையே இல்லை. இந்நிலையில் மூர்த்திக்கு கிழக்கு ஒன்றிய தலைவர் பதவி தரப்பட்டுள்ளது. அதோடு கட் சிக்கான உறுப்பினர் சேர்க்கையில் டிஜிட்டல் சீட்டிங் நடந்தி பொறுப்புக்கு வந்துள்ளார்'' என்றார்.

Advertisment

tirupathur-bjp1

இதுகுறித்து நம்மிடம் பேசிய ராஜா, "நான் 3 வருடத்துக்கு மேலாக பா.ஜ.க.வில் உள்ளேன். கடந்தாண்டு தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பு மூர்த்தியை கட்சிக்கு அழைத்துவந்தேன். கட்சிக் காக தீவிரமாக உழைத்த என்னாலே 25 பூத்து களில் உறுப்பினர்களை சேர்க்க முடியவில்லை. எங்கள் ஒன்றியம் உட்பட தமிழ்நாடு முழுவதும் 40 சதவீத பொறுப்பு களுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. 2025, மே மாதம், புதிய மாவட்டத் தலைவராக தண்டாயுத பாணி நியமிக்கப்பட்டார். அதன்பின் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒன்றி யங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது. என்னால் கட்சிக்கு கொண்டுவரப்பட்ட மூர்த்தி, புதிய மாவட்ட தலைவரிடம் 26 பூத்துகளில் உறுப்பினர் சேர்க்கையை அவர் நடத்தியதாக பட்டியல் தந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதை 6 மாதமாக ஆய்வு செய்ததில், ஊட்டி, கோவை, ஈரோட்டிலிருந்தெல்லாம் உறுப்பினர் களின் மொபைல் எண்களிலிருப்போர் பேசு கிறார்கள். இப்படி 800 பேரை சோதித்ததில், 150 பேர்தான் ஒன்றியத்திற்கு உள்ளிருக்கும் பூத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் போர்ஜரி. இதில் தாசில்தார், மாற்றுக்கட்சியினரின் மொபைல் எண்களெல்லாம் இருக்கு. அவர்களிடம் பேசி னால், நான் எதுக்கு கட்சியில் சேரப்போறேன் என்றெல்லாம் கேட்கிறார்கள். தீவிரமாக விசாரித்ததில், மூர்த்தி வைத்துள்ள நெட் சென்டரில் ரீசார்ஜ் செய்ய வருபவர்களின் நம்பரிலிருந்து மிஸ்டுகால் மோசடி செய்திருக் கிறார்கள். இதேபோல் வடநாட்டினரின் மொபைலையும் தவறா பயன்படுத்தியிருக்காங்க. இதுகுறித்து தலைமையிடம் சொன்னால், மாவட்ட தலைவரிடம் சொல்லச்சொன்னார் கள். அவரோ, அதெல்லாம் விடு, உனக்கென்ன பதவி வேணும்னு சொல்லு என்கிறார். 

பழைய மாவட்ட தலைவர் வாசுதேவன், என்னை ஒன்றியத்தலைவர் பதவியில் நியமிக் கச் சொல்றேன்னு சொல்லி, என்னிடமிருக்கும் டாகுமென்டுகள், ஒரு லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, ஒன்றியத்தலைவரா நியமிச்சதா ஒரு கடிதம் தந்தார். அதேநாள் மாலையில், மூர்த்தியிடம் 2 லட்சத்தை வாங்கிட்டு அவருக்கும் அதே பதவியை தர்றதா கடிதம் கொடுத்திருக்காங்க. மாவட்டத் தலைவரிடம் கேட்டாலோ, டிஜிட்டல் முறை யில் சீட்டிங் செய்து பதவி வாங்கியிருக்கான்னு சொல்லிட்டார். அதுக்கு மாவட்ட தலைவரிலிருந்து பலரும் உடந்தையா இருக்காங்க'' என்றார் குற்றச்சாட்டாக. 

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தண்டாயுதபாணியிடம் கேட்டபோது, "அவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானது. உறுப்பினர் சேர்க்கை முறையாக நடந்துள்ளதா என ஆய்வு நடத்த மாநிலக்குழு வரும், அந்த குழுவிடம் இவர் சொல்லலாம், அதை யாரும் தடுக்கப்போவதில்லை. பணம் வாங்கிக்கொண்டு பதவி போட்டார் கள் எனச்சொல்வது பொய். அவர்தான், தலைமை மூர்த்திக்கு தந்த கடிதத்தில் மூர்த்தி பெயரை எடிட் செய்து தன் பெயரை சேர்த்து பரப்பிக்கொண்டு இருக்கிறார். அதுகுறித்து காவல்துறையில் புகாரும் தரப்பட்டுள்ளது. அவர் இப்போது கட்சியில் எந்த பொறுப் பிலும் இல்லை'' என்கிறார் அதிரடியாக. 

ஓட்டு திருட்டு என பா.ஜ.க. மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், பா.ஜ.க.வில் பதவிக்காக திருட்டு உறுப்பினர் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

nkn041025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe