மீனவர்களின் வாழ்வை சூறையாடும் "டீசல்' பார்ட்டிகள்! -ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை!

dgd

மிழக அரசு தனது பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் மானியம் கொடுத்து புதிதாக அறிவித்துள்ளது. ஆனால் காலம்காலமாக மீனவர்களுக்கு அவர்களது படகுகளுக்கு டீசல் வாங்க மானியம் அளித்து வருகிறது. அந்த மானியத்தை அ.தி.மு.க.வின் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆட்கள் கொள்ளையடித்து மீனவர்களை ஏமாற்றி வந்தனர். அந்தக் கொள்ளை தற்பொழுதும் தொடருகிறது என வேதனைப்படுகிறார்கள் சென்னை காசிமேடு பகுதி மீனவர்கள்.

dad

தற்பொழுது டீசல் விலை 91 ரூபாய் என்றால் மீனவர்கள் மீன் பிடிக்கும் படகுகளுக்கு 75 ரூபாய்க்கு தமிழக அரசு வழங்குகிறது. இதற்காக மீனவர்களுக்கு ஒரு மானிய அட்டையை தமிழக அரசு வழங்குகிறது.

ஜெயக்குமார், மீன்வளத்துறை அமைச்சராக இருந்தபொழுது "டீசல்' என்கிற பெயரை அடைமொழியாக சூட்டிக்கொண்டு காசிமேடு பகுதியில் பலராமன்,

மிழக அரசு தனது பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் மானியம் கொடுத்து புதிதாக அறிவித்துள்ளது. ஆனால் காலம்காலமாக மீனவர்களுக்கு அவர்களது படகுகளுக்கு டீசல் வாங்க மானியம் அளித்து வருகிறது. அந்த மானியத்தை அ.தி.மு.க.வின் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆட்கள் கொள்ளையடித்து மீனவர்களை ஏமாற்றி வந்தனர். அந்தக் கொள்ளை தற்பொழுதும் தொடருகிறது என வேதனைப்படுகிறார்கள் சென்னை காசிமேடு பகுதி மீனவர்கள்.

dad

தற்பொழுது டீசல் விலை 91 ரூபாய் என்றால் மீனவர்கள் மீன் பிடிக்கும் படகுகளுக்கு 75 ரூபாய்க்கு தமிழக அரசு வழங்குகிறது. இதற்காக மீனவர்களுக்கு ஒரு மானிய அட்டையை தமிழக அரசு வழங்குகிறது.

ஜெயக்குமார், மீன்வளத்துறை அமைச்சராக இருந்தபொழுது "டீசல்' என்கிற பெயரை அடைமொழியாக சூட்டிக்கொண்டு காசிமேடு பகுதியில் பலராமன், வேல், மாறன், முத்து, விஜி, கந்தன், டில்லி, சதீஷ் ஆகிய எட்டுபேரும் சுற்றி வந்தார்கள்.

மீனவர்களிடம் சென்று, "டீசல் மானிய கார்டுகளை எங்களுக்கு கொடுத்துவிடுங்கள்' என பேரம் பேசுவார்கள். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதர வாளர்களான இவர்களு டன் மீன்வள ஆய் வாளர் வேல்முருகன் மற்றும் மீனவர்களுக்கு டீசலை மானிய விலை யில் தரும், அரசுக்கு சொந்தமான டீசல் பங்க் கண்காணிப்பாளர் பிரபா பாஸ்கர் ஆகியோரும் இணைந்து மீனவர்களை மூளைச்சலவை செய்வார்கள்.

அடையாள அட்டையையும் டீசல் மானிய அட்டையையும் டீசல் அடைமொழி கொண்டவர்களிடம் கொடுக்காவிட்டால் ரௌடிகள், காவல்துறையினர் என சகலமும் மீனவர்களின் வீட்டு வாசலுக்கே வந்துவிடும் என பயத்துடன் இந்த டீசல் அடைமொழி பிரமுகர்களின் மிரட்டலை பயத்துடன் வர்ணிக்கிறார்கள் காசிமேடு பகுதி மீனவர்கள்.

இன்றளவிலும் காசிமேடு ச4 காவல் நிலைய பகுதிகளில் 24 மணிநேரமும் சாராயம் கிடைக்கிறது. கஞ்சா, பிரவுன்சுகர், போதை மாத்திரைகள் ஏராளமாக புழங்கிவரும் காசிமேடு பகுதியில் இந்த டீசல் பிரமுகர்கள் வைத்ததுதான் சட்டம். தங்களுக்கு கீழ்ப்படி யாதவர்களை அந்தப் பகுதியில் சுற்றித்திரியும் வாண்டுகளுக்கு போதை மாத்திரை கொடுத்து வெட்டிச் சாய்ப்பது இவர்கள் தொழில். இதற்காக மீன்வளத் துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் அனைத்து வசதிகளையும் இவர்கள் செய்து தருகிறார்களாம்.

ddd

தமிழகத்தில் பிடிக்கப்படும் மீன்கள் கேரளாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அனுப்பப்படும். அங்குதான் மீன்களை சுமந்து செல்லும் தாய் கப்பல் இருக்கும். அந்த தாய் கப்ப லில் மீன்கள் ஏறி னால்தான் அது சர்வதேச சந்தைக்குச் சென்று காசாக திரும்பிவரும்.

கொரோனா காலத்தில் சர்வதேச சந்தை படுத்துவிட்டது. இங்குள்ள ஏற்றுமதி வியாபாரி களுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம். அதனால் இந்த டீசல் அடைமொழிக்காரர்களிடம் இரண்டு லட்சம், மூன்று லட்சம் ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்ட இந்த அட்டைகளை மீன்வளத்துறை அதி காரியான வேல்முருக னும் டீசல் பங்க் பிரபா பாஸ்கரும் மானிய விலையில் போடாத படகுகளுக்கெல்லாம் டீசல் போட்டதாக கூறி டீசலை வெளி மார்க்கெட்டில் இந்த ஆட்கள் மூலம் விற்கிறார்கள்.

dd

படகுகள் ஓடும்பொழுது ஒரு லிட்டர் டீசலுக்கு 16 ரூபாய் என அரசு தரும் மானியத்தில் பத்து ரூபாயை வட்டியாக எடுத்துக்கொண்டு மீனவர்களுக்கு வெறும் ஆறு ரூபாய் கொடுக்கிறார்கள்.

இந்த டீசல் அடைமொழி பிரமுகர்கள் அரசு தரும் டீசல் மானியத்தை சுரண்டிக் கொள்ளையடித்து ஒரு நிழல் அரசையே சென்னை மீனவர்களின் இதயப் பகுதியான காசிமேடு பகுதியில் நடத்தி ரணகளப்படுத்து வார்கள். முன்பு ஜெயக்குமார், இப்போது திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கரின் மேற்பார்வையில் தொடருகிறது என்கிறார்கள் மீனவர்கள்.

நாம் இதுபற்றி மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மீனவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி 1100 கோடி ரூபாய் என பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் ஐம்பது சதவிகிதம் டீசல் மானியமாகத்தான் செல்கிறது. சுமார் 500 கோடி ரூபாயை மீன்வளத்துறை அதிகாரிகள் உதவி யுடன் மீனவர்களின் பெயரை பயன் படுத்தி ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் மீள்வளத் துறையில் ஒரு கும்பல் கொள்ளை யடிப்பதை யாரும் தடுக்க முடியாது என சவால்விடுகிறார்கள் டீசல் அடைமொழி பிரமுகர்கள்.

nkn210821
இதையும் படியுங்கள்
Subscribe