திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம், தமிழக முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீது கும்பலாக அ.தி.மு.க.வினரே கொடுத்த புகாரில் சற்று ஆடித்தான் போயிருக்கிறார்.
திருப்பூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணகுமார், ""நான் கட்சியில 32 வருஷமா இருக்கேன். 2015-ல இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரா எம்.எஸ்.எம்.ஆனந்தன் இருந்தபோது என்னிடம், "உனக்கு தெரிஞ்சவங்களுக்கு அரசாங்க வேலை வேணுமா? அமைச்சரா இருக்கறதால என்னால ஏற்பாடு செய்ய முடியும்'னு சொன்னாரு.
என்னோட மனைவி நிர்மலாதேவிக்கு லேப் அஸிஸ்டெண்ட் வேலை வேணும்னு கேட்டேன். மூணு லட்சம் கொடுத்தா ஒரே மாசத்துல வேலை வாங்கிக்கொடுத்துர்றேன்னு சொன்னாரு. அவர் சொன்னதை நம்பி பணத்தை ரெடி பண்ணிட்டு ஆனந்தனின் முருங்கப்பாளையம் வீட்டுக்குப் போய் நின்னேன். அவரது உதவியாளர்கிட்ட பணத்தை கொடுக்கச் சொன்னாரு.
ஆனா பல மாதமாகியும் இப்ப வாங

ஆனா பல மாதமாகியும் இப்ப வாங்கித் தர்றேன்… இதோ இப்ப வாங்கித் தர்றேன்னு சொல்லி காலத்தைக் கடத்திட்டாரு. வேலையும் வாங்கித் தரலை. பணத்தையும் திருப்பித்தரலை. நம்பவைத்து பணமோசடி செய்த எக்ஸ் மினிஸ்டரும், மாவட்டச் செயலாளருமான ஆனந்தனையும், அவரது உதவியாளர் ராஜேஷ்கண்ணாவையும் கைதுசெய்ய வேண்டும்னு புகார் கொடுத்திருக்கிறேன்''’என்கிறார் கோபமாய்.
மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவராய் இருக்கும் சுப்பிர மணியனோ, “""25 வருஷமா கட்சியில இருக்கேன். அரசாங்க வேலை யாருக் காவது வேணும்னா என்னைய வந்து பாருன்னு என்கிட்ட சொன்னாரு அமைச்சராய் இருந்த ஆனந்தன். என் மகள் சுகுணாவிற்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துல இளநிலை உதவியாளர் வேலை கேட் டேன். 6 லட்சம் கொண்டு வான்னு சொன்னாரு.
2015, ஜனவரி 13-ல முருங்கப்பாளைய வீட்டுல வச்சு 6 லட்சம் ஆனந்தன்கிட்ட கொடுத்தேன். பி.ஏ ராஜேஷ் கண்ணா பணத்தை வாங்கிட்டாரு. சொன்னபடி ஆனந்தன் வேலை வாங்கித் தரலை''’என்கிறார் பாவமாய்.
அ.தி.மு.க.வின் மாவட்டப் பிரதிநிதியாய் இருக்கும் ரத்தினமோ... ""30 ஆண்டு காலமா கட்சியில இருக்கற எனக்கே அல்வா கொடுத்துட் டாரு ஆனந்தன். எனது நண்பர் செல்வராஜ் தன்னோட மகளுக்கு அரசுப் பள்ளியில லேப் டெக்னீசியன் வேலை வேணும்னு என்கிட்ட கேட்டதால அமைச்சரா இருந்த ஆனந்தன்கிட்ட கூட்டிட்டுப் போனேன். 25 லட்சம் ஆகும்னு சொன்னாரு. 5 லட்சம் முன்பணமா நான்தான் வாங்கிக் கொடுத்தேன். பி.ஏ. தான் வாங்கிக்கிட் டாரு. ஆனா சொன்னபடி வேலை வாங்கித்தரலை. பணத்தை திருப்பியும் தரலை''’என்கிறார்.
""செல்வராஜுங்கிறவர் என்கிட்ட அரசுப்பேருந்து ஓட்டுநர் வேலைகேட்டு வந்தார். நான் அமைச்சர் ஆனந்தன்கிட்ட கூட்டிட்டுப் போனேன். 25 லட்சம் ஆகும்னு சொன்னாரு. அவ்வளவு பணத்தையும் ரொக்கமா வாங்கி ஆனந்தன்கிட்ட கொடுத்தேன். அவ்வளவுதான் வேலையும், பணமும் அப்படியே போயிருச்சு'' என்கிறார் வட்டச்செயலாளர் விவேகானந்தன் கோபம் கொந்தளிக்க.
""ரெண்டு தடவை கவுன்சிலரா, 25 வருஷம் கட்சியில் அனுபவமுள்ள எனக்கே இன்னும் அனுபவம் பத்தலைன்னு சொல்லாம சொல்லி அடிச்சுட்டாரு எம்.எஸ்.எம் ஆனந்தன். எனது மூத்த மகன் ஜீவானந்தம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியிருந்தான். அவனுக்கு நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் வேலை கேட்டுப் போய் ஆனந்தன்கிட்ட நின்னேன். 20 லட்சம் ஆகும்னு சொன்னாரு. 10 லட்சம் முன்பணமா ரெடி பண்ணிக்கொண்டுபோய் கொடுத்தேன். வேலையும் வரலை. பணமும் வரலை''’இது ரவியின் சோகம்.
இளைஞரணிச் செயலாளர் கந்தவேலின் மகனோ, ""எங்க அப்பா 40 வருஷமா கட்சியில இருந்தவரு. எனக்கு கவர்மெண்ட் வேலை வாங்கிக்கொடுக்கணும்னு அப்பாவுக்கு ரொம்ப ஆசை. திருப்பூர் மாநகராட்சியில டிரைவர் வேலைக்கு சேர்க்க ஆசைப்பட்டாரு. ஆனந்தன் 25 லட்சம் கேட்டாரு. எங்க அப்பா, எங்க அம்மா கிட்டம்மாள், மூணுபேரும் சேர்ந்து 25 லட்சத்தைக் கொண்டுபோய் ஆனந்தன்கிட்ட கொடுத்தோம்.
ஆனா வேலையும் கிடைக்கலை. ஒண்ணும் கெடைக்கலை. பணத்தைத் திருப்பிக் கொடுங்கன்னு ஆனந்தனோட காருக்குப் பின்னாலயே அலைஞ்சு… பணம் போச்சேன்னு புலம்பிப் புலம்பியே ஒடம்பு சரியில்லாமப் போய் இறந்தே போயிட்டாரு அப்பா.… எங்களை மாதிரி எத்தனை பேரை ஆனந்தன் ஏமாத்தியிருக்காருன்னு தெரியலை... அத்தனைக்கும் ஆசைப்படறாரு ஆனந்தன்''“என்கிறார் கண்ணில் நீர்ததும்ப.
""இவர்களின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மாவட்டச் செயலாளர் ஆனந்தன், “""உள்ளாட்சித் தேர்தல் வர்ற நேரத்துல என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறாங்க. இவை முற்றிலும் பொய்யான புகார்கள். பதிலுக்கு அவுங்கமேல நான் போலீஸ்ல புகார் கொடுக்க இருக்கறேன்''’என்கிறார் கோபமாய்.
இது கட்சிக்கு திரும்ப வந்திருக்கற சிவசாமி பண்ற வேலை. எப்படியாவது ஆனந்தன் மேல பழிபோட்டு, மாவட்டச் செயலாளர் பதவியை ஆனந்தன்கிட்ட இருந்து புடுங்கிறணும்ங்கற சிவசாமியோட திட்டம்''’என்கிறார்கள் ஓப்பனாய்.
-அ.அருள்குமார்