தமிழக அரசியலில் மிகவும் பலம்வாய்ந்த அரசியல்வாதி கள் என்று ஒரு சிலரை நாம் விரல்விட்டு எண்ணிவிட முடியும். அப்படி, அரசியலால் தவிர்க்கமுடியாத அரசியல்வாதிகளின் பட்டியலில் இடம்பிடித்திருப் பவர் அமைச்சர் கே.என்.நேரு. என்றைக்கும் தனக்கான தனித்துவத்தோடு செயல்படும் இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் திருச்சி அரசியலில் பெரும் ஆளுமையாக வலம் வருபவர். தி.மு.க.வில் கிளையில் தொடங்கி யூனியன் சேர்மன், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், முதன்மை செயலாளர், 16 வருடங்களுக்கு மேல் அமைச்சர் என தமிழக அரசியலை திரும்பிப் பார்க்கவைப்பவர்.
1986-ல் தி.மு.க. சார்பில் புள்ளம்பாடி யூனியன் தலைவராக கே.என்.நேரு பொறுப்பேற்றார். 1989-ல் லால்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி, மின்சாரம், பால்வளம், தொழிலாளர் நலத்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சராக பதவியிலிருந்தார். 1996-ல் மீண்டும் வெற்றிபெற்று உணவு, கூட்டுறவு மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 2006-ல் திருச்சி மேற்கு தொகுதியில் வென்று, போக்க
தமிழக அரசியலில் மிகவும் பலம்வாய்ந்த அரசியல்வாதி கள் என்று ஒரு சிலரை நாம் விரல்விட்டு எண்ணிவிட முடியும். அப்படி, அரசியலால் தவிர்க்கமுடியாத அரசியல்வாதிகளின் பட்டியலில் இடம்பிடித்திருப் பவர் அமைச்சர் கே.என்.நேரு. என்றைக்கும் தனக்கான தனித்துவத்தோடு செயல்படும் இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் திருச்சி அரசியலில் பெரும் ஆளுமையாக வலம் வருபவர். தி.மு.க.வில் கிளையில் தொடங்கி யூனியன் சேர்மன், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், முதன்மை செயலாளர், 16 வருடங்களுக்கு மேல் அமைச்சர் என தமிழக அரசியலை திரும்பிப் பார்க்கவைப்பவர்.
1986-ல் தி.மு.க. சார்பில் புள்ளம்பாடி யூனியன் தலைவராக கே.என்.நேரு பொறுப்பேற்றார். 1989-ல் லால்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி, மின்சாரம், பால்வளம், தொழிலாளர் நலத்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சராக பதவியிலிருந்தார். 1996-ல் மீண்டும் வெற்றிபெற்று உணவு, கூட்டுறவு மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 2006-ல் திருச்சி மேற்கு தொகுதியில் வென்று, போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2016ல் எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். தற்போது தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகப் பதவியில் உள்ளார். திருச்சி மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவர், தி.மு.க.வின் தலைமைக் கழக முதன்மை செயலாளராகவும் பொறுப்பிலிருக்கிறார்.
கட்சிக்கும் தலைமைக்கும் எப்போதும் நம்பிக்கைக் குரியவராக செயல்பட்டுவரும் அமைச்சர் கே.என்.நேரு, கலைஞரின் மிகுந்த நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். இவருடைய முயற்சியால் தான் முதன்முதலாக சென்னையி லுள்ள அண்ணா அறிவாலயம் போல் திருச்சியில் கலைஞர் அறிவாலயம் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டது. அன்று ஆரம்பித்த வளர்ச்சி, இன்றுவரை தொடர்கிறது. ஒருபக்கம் வளர்ச்சி என்றால், மற்றொரு பக்கம் பிரமாண் டத்திற்கு பெயர் போனவர். 2006-ல், திருச்சி தீரன்நகர் பகுதியில் கலைஞர் தலைமையில் மாபெரும் மாநாடு நடத் தப்பட்டது. அந்த மாநாட்டை திறம்பட பிரமாண்டமாக நடத்திக்காட்டிய பின்னர், பல மாநாடுகளை நன்முறையில் நடத்தி அசத்தியவர் கே.என்.நேரு. அவர், வரும் 2026, ஜன வரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளார். அந்த மாநாட்டை எங்கு நடத்துவது என்பது குறித்த ஆலோசனை நடைபெற்றுவருகிறது. தனது அமைச்சர் பொறுப்பின் மூலம், திருச்சி மாவட்டத்திற்கென இந்த 5 ஆண்டுகளில் மட்டும் 9 புதிய கூட்டுக்குடிநீர் திட்டங் களை செயல்படுத்தியுள்ளார். இதற்காக மொத்தம் ரூ.976.93 கோடி நிதி ஒதுக்கி, அந்த பணிகளனைத்தும் முடிவடைந்து 118.47எம்.எல்.டி. அளவு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், கரூர் மாவட்டத்தில் 604 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் திருச்சி மாவட்டத்திலுள்ள 839 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர்த் திட்டம் ஆய்விலுள்ளது. இதற்காக 1220.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இதுவரை எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு மாபெரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திருச்சியில் பஞ்சப்பூர் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. அரசு பேருந்து முனையம், தனியார் பேருந்து முனையம், ஒருங்கிணைந்த மார்க்கெட் என்று மொத்தம் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு, தற்போது அரசு பேருந்து முனையமும், தனியார் பேருந்து முனையமும் பணிகள் முடி வடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மார்க்கெட் பணிகள் நடைபெற்றுவருகிறது. மேலும் கலைஞர் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்ட காவிரி பாலம் பல ஆண்டுகளைக் கடந்து நின்றாலும், அதில் அவ்வப்போது ஏற்படும் பழுது காரணமாக, புதிய காவிரி பாலம் அமைப்பதற்காக ரூ.106 கோடி நிதி ஒதுக்கி பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகிறது. அதேபோல், ரூ.20 கோடியில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.100 கோடியில் காமராஜர் பெயரில் மன்னார்புரத்தில் மாபெரும் நூலகக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.3 கோடி ரூபாய் மதிப்பில் திருச்சி உறையூரில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டு வருகிறது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரூ.11.10 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடை பெற்றுவருகிறது, விரைவில் திறக்கப்படவுள்ளது. அதுபோல் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வெளிநாட்டை சேர்ந்த காலணி தயாரிக்கும் பெரிய நிறுவனம் அமையவுள்ளது.
இப்படியாகத் தான் பதவியிலிருக்கும் காலங்களில் திருச்சி மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகளை கே.என்.நேரு செய்துவரு கிறார். குறிப்பாக, திருச்சி மாவட்டத்தில் மட்டும் இதுவரை ஐயாயிரம் கோடிக்கும் அதிகமான வளர்ச்சித்திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, பல பணிகள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இவருடைய பதவிக்காலத்தில் திருச்சி ஓர் வளர்ந்த நகரமாக உருவெடுத்துள்ளது. இதே வளர்ச்சி தொடர்கையில், தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சி உருவெடுக்கும்.
2026-ல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அச்சாரமாக, வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இதுவரை நடத்தப்படாத அளவிற்கு ஒரு மாபெரும் மாநாட்டை நடத்த அமைச்சர் கே.என்.நேரு, நிர்வாகி களுடன் ஆலோசனை செய்துவருகிறார். மீண்டும் திருச்சி மாவட்டம் ஒரு மாபெரும் மாநாட்டை சந்திக்கப் போகிறது!