புகழ்பெற்ற மதுரை அவனியாபுரத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஊர்கமிட்டி அமைப்பதில் கலெக்டரே தலையிட்டும் சிக்கல் வலுத்தது. விவகாரம் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருக்கும் நிலையில், களநிலவரத்தை அறிய அவனியாபுரம் புறப்பட்டோம்.…

jalikattu

அனைத்து சமுதாய தரப்பைச் சேர்ந்த ராமசாமியிடம் பேசியபோது, ""ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு தென்கால் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருந்த கண்ணனை, ஊர்கமிட்டி தலைவராக தற்காலிகமாக நியமித்தோம். அவர் அனைத்து சமுதாய மக்களை யும் அரவணைத்துச் செல்லாமல், தனிநபராக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்ததால் கடந்தாண்டு பிப்.14-ல் ஊர்கமிட்டி கூடி நீக்கினோம். தற் போது, தனக்கு எதிர்ப்பு தெரிவிப்ப தாக போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றம் சென்றிருக்கிறார். நாங்கள் கலெக்டர் மூலம் அனைவரையும் இணைத்து நடத்துங்கள் எனக்கேட்டும் மறுக்கவே செய்கிறார். தீர்ப்பு நியாயமானதாகத்தான் வரும்''’என்றார் உறுதியுடன்.

Advertisment

jalikattuபுரட்சிப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரும், இதுதொடர்பாக வழக் குத் தொடர்ந்துள்ளவருமான தமிழ் அமுதன், “""தமிழர்களின் வீரவிளை யாட்டில் எங்கிருந்து வந்தது சாதி? ஏற்கெனவே ஊர்கமிட்டியில் அக முடையார், பிள்ளைமார், கோனார், செட்டியார், நாடார் இருந்தனர். தற்போது தலித்துகளை இணைத்துக்கொள்ளச் சொன்னால், நிலம் உள்ளவர்களையே சேர்க்கமுடியும் என்கின்றனர். வடநாட்டு சேட்டுகள் நிலம் வைத்திருப்பதால் அவர்களையும் சேர்த்துக்கொள்வீர்களா? கண்ணன் அ.தி.மு.க. முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா வின் சகலை என்பதால் ஆளுங்கட்சி செல்வாக்கு கொண்டவர். அதேபோல், ஜல்லிக்கட்டில் பெரிய நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்பால் கிடைக்கும் வெகுமதிகளை விட்டுவிட அவருக்கு மனசில்லை''’’ என்றார் அழுத்தமாக. சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் கண்ணனைச் சந்தித்தபோது, “""நாங்கள்தான் காலங்காலமாக ஜல்லிக்கட்டு நடத்துகிறோம். இதில் தற்போது ஆளாளுக்கு பணத்திற்கு ஆசைப்பட்டு சாதி, ஊர்கமிட்டி என்று குழப்பத்தை ஏற்படுத்து கின்றனர். அவர்கள் எனக்கு எதிரானவர்கள்''’என்று முடித்துக்கொண்டார். ஊர் வாடிவாசல் அருகே தன் காளையோடு வந்த பால்பாண்டி, “ஜல்லிக் கட்டுக்காக தமிழர்களாக ஒண்ணுகூடி அடி, உதை வாங்கி போராடினோம். இவுங்க சாதி ஈகோ காரணங்களைக் காட்டி, ஜல்லிக்கட் டையே நடத்த விடாம ஆக்கிடுவாங்கபோல'' என்றார் ஆதங்கத்துடன். "ஒற்றுமையாக இல்லையென்றால் ஜல்லிக்கட்டு விழாவுக்கே தடைவிதிக்க வேண்டியிருக்கும்' என எச்சரித்த உயர்நீதிமன்றம், ஒரு ஆணையர் தலைமையிலான குழுவை ஜல்லிக்கட்டு நடத்த நியமித்துள்ளது.

இதற்கிடையில், அலங்காநல்லூர் வாடி வாசலில் ஜல்லிக்கட்டை வாங்கிவந்த இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்.ஸுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, கல்வெட்டுடன் வந்திறங்கிய எம்.எல்.ஏ. மாணிக் கத்தை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்தனர்.

-அண்ணல்

Advertisment