கேரளாவுக்கு பணிந்ததா தமிழ்நாடு அரசு? -கொந்தளிப்பில் விவசாயிகள்!

dam

"கேரள அரசு, தமிழகத்துக்கு எதிரான அடாவடியை ஆரம் பித்துவிட்டது' என் கிறார்கள் விவசாயிகள்.

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, கேரள அரசு அடா வடியாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, தன் பகுதிக்குத் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது.

dd

தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய 5 மாவட்ட விவசாயிகளின் வாழ் வாதாரத்திற்காகவே கர்னல் பென்னிகுக் முல்லை பெரியாறு அணையைக் கட்டினார். இந்த அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம். அந்த அளவுக்கு பலம் வாய்ந்த அணையாக இது இருந்துவருகிறது. இருந்தாலும் கேரள அரசின் பிடிவாதத்தால் 1979-ஆம் ஆண்டு நீர் கொள்முதல் 136 அடியாக குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டங்கள் நடத்தி, உச்ச நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனையடுத்து பல்வேறு நிபுணர்கள், அணையின் பாது காப்பு குறித்து ஆய்வு செய்த

"கேரள அரசு, தமிழகத்துக்கு எதிரான அடாவடியை ஆரம் பித்துவிட்டது' என் கிறார்கள் விவசாயிகள்.

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, கேரள அரசு அடா வடியாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, தன் பகுதிக்குத் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது.

dd

தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய 5 மாவட்ட விவசாயிகளின் வாழ் வாதாரத்திற்காகவே கர்னல் பென்னிகுக் முல்லை பெரியாறு அணையைக் கட்டினார். இந்த அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம். அந்த அளவுக்கு பலம் வாய்ந்த அணையாக இது இருந்துவருகிறது. இருந்தாலும் கேரள அரசின் பிடிவாதத்தால் 1979-ஆம் ஆண்டு நீர் கொள்முதல் 136 அடியாக குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டங்கள் நடத்தி, உச்ச நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனையடுத்து பல்வேறு நிபுணர்கள், அணையின் பாது காப்பு குறித்து ஆய்வு செய்து, கடந்த 2014-ஆம் ஆண்டு 142 அடிவரை தண்ணீரை தேக்க பரிந்துரை செய்தனர். மேலும், பேபி அணையைப் பலப்படுத்திய பின் 152 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர்.

அணை பாதுகாப்பு குறித்து ஆய்வுசெய்ய மூன்று பேர் கொண்ட குழுவும் அவர்களுக்கு உதவ ஒரு துணைக்குழுவும் அமைக்கப்பட்டது. இப்படி உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு 2014, 2015, 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டது. அதேபோல் தற்போது கேரளாவிலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்துவருவதால், இந்த ஆண்டு மீண்டும் 142 அடிவரை தேக்கப்படும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கேரள அரசு தொடர்ந்து அணை பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் தீர்ப் பளித்த நீதிமன்றம், "தொடர் மழை பெய்துவருவதால் நவம்பர் மாதம் பத்தாம் தேதி வரை 139.50 அடிவரை தண்ணீர் தேக்கிக்கொள்ள லாம் என்றும், அதற்குப் பிறகு 142 அடியாக அதை உயர்த்துவதில் தடையில்லை' என உத்தரவிட்டது.

duraimurugan

இந்த நிலையில்தான் தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே திடீரென்று பெரியாறு அணைக்கு, கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், இடுக்கி மாவட்ட கலெக்டர் சிவா, பீர்மேடு எம்.எல்.ஏ. சோமன் மற்றும் அம்மாநில நீர்வளத் துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.

அதன் பிறகு கேரள மந்திரி ரோசி அகஸ்டி னோ, தமிழக அரசிடமும் அதிகாரிகளிடமும் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக, "முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்' என்று, இடுக்கி மாவட்டத்தின் சில பகுதிகளில் தண்டோரா போட்டுவிட்டு, கடந்த 29-ஆம் தேதி அதிகாலை அணைப் பகுதிக்கு சென்ற அமைச்சர் ரோஸி அகஸ்டின் மற்றும் அம்மாநில அதிகாரிகள், பெரியாறு அணையில் 3 மற்றும் 4-வது மதகை திறந்து, தண்ணீரை கேரளாவுக்குத் திறந்துவிட்டனர். அப்பொழுது, தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சரோ, எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் தேனி மாவட்ட கலெக்டரோ அதில் கலந்துகொள்ளவில்லை.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக அதிகாரிகள் சிலர் மட்டுமே இருந்தனர். ஆனால் உச்சநீதிமன்றத்தில் 139.6 அடிவரை தேக்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டு 138.7 அடியை எட்டிய நிலையிலேயே கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப் பட்டது கண்டு, தமிழக விவசாயிகள் அதிர்ச்சி யடைந்திருக்கிறார்கள். இதனால், தேனி கலெக்டர் அலுவலக குறை தீர்ப்புக் கூட்டத்தை அவர்கள் புறக்கணித்துவிட்டனர்.

இது சம்பந்தமாக, ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் செயலாளர் பொன்.காசி கண்ணனிடம் நாம் கேட்டபோது...

"கேரள அமைச்சர் ரோசி அகஸ்டின் தன்னிச்சையாகத் தண்ணீரைத் திறந்துவிட்டதோடு, அது வண்டிப்பெரியாறு வழியாகப் போவதை பார்வையிட்டு தனது டுவிட்டரிலும் பதிவிட்டு வருகிறார். இவ்வளவு பெரிய அடாவடி நடந்தும், தமிழக அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லை. கேரளாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி யினரும் திரைப்பட நட்சத்திரங்களும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக குரல் கொடுத்துவரும் நிலையில்... தமிழகத்தில் அதுபோன்ற நிலை இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. எனவே இதைக் கண்டித்து விவசாயிகளின் மாபெரும் போராட்டம் நடைபெறும். இதில் தென் தமிழகத்தில் ஒட்டுமொத்த விவசாயிகளும் குரல் கொடுக்கவேண்டும்''’என்றார் அழுத்தமாக.

dd

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு "முல்லைப்பெரியாறு அணையை வெடிவைத்து தகர்ப்போம்' என்று மலையாளிகள் குரல் கொடுத் ததைக் கண்டு இதே நவம்பர், டிசம்பர் மாதங்களில் தென்மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தொடர் போராட்டத்தில் குதித்ததன் மூலம், கேரளா அரசும் மலையாளிகளும் அரண்டுபோனார்கள்.

தமிழ்நாட்டின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், "கேரளாவே தண்ணீர் திறந்துவிட்ட தாகக் கூறுவது தவறானது. உச்சநீதிமன்ற உத்தரவிற்கேற்பவே, தமிழக அரசு செயல்படுகிறது. தண்ணீர் திறந்துவிட்டது, அணையில் உள்ள தமிழக அதிகாரிகள்தான்'' என்று தெரிவிக்கிறார்.

தமிழ்நாட்டின் உரிமையை தி.மு.க. அரசு விட்டுத் தந்துவிட்டதாக குற்றம்சாட்டி போராட் டத்திற்குத் தயாராகிறது அ.தி.மு.க. தலைமை.

தமிழ்நாட்டு முதல்வர் விரைந்து கவனிக்க வேண்டிய பிரச்சினை இது.

nkn061121
இதையும் படியுங்கள்
Subscribe