சார்பட்டா' வெற்றி தெம்பு தந்த நிலையில்... பணமோசடிப் புகார் ஒன்று நடிகர் ஆர்யாவை துரத்தத் தொடங்கியிருக் கிறது. நடிகர் ஆர்யா திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பணமோசடி செய்துவிட்டதாக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இலங்கைப் பெண்ணான டாக்டர் விட்ஜா போலீசில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகார்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, நடிகர் ஆர்யா, அவரது தாயார் ஜமீலா, புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான், அவரது உறவினர் உசேன் ஆகியோர் மீது கடந்த மாதம் 19-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

arya

இந்த வழக்கில் ஆர்யா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு இதுதான். 2018-ஆம் ஆண்டு முகநூலில் விட்ஜாவுடன் நடிகர் ஆர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் வாட்ஸ் ஆப் எண் மூலம் தொடர்புகொண்டு தனது காதலை வெளிப் படுத்தி அவரை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துள்ளார். விட்ஜாவுக்கு, ஆர்யாவை திருமணம் செய்து வைப்பதாக அவரது தாயாரும் உறுதியளித்துள்ளார். அதன்பிறகு வீடியோ அழைப்பிலும் இருவரும் பேசிவந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் நிதி நெருக்கடியில் இருப்ப தாக கூறி ஆர்யா தரப்பில் டாக்டர் விட்ஜாவிடம் பணம் கேட்டுள்ளனர். விட்ஜா அவரது வங்கிக்கணக்கு எண்ணைக் கேட்க, அதற்கு ஆர்யா, தான் சினிமா பிரபலம் என்பதால் தன்னால் வங்கிக்குச் சென்று பணத்தை எடுக்க இயலாது ஆகையால் எனது ஆட்களின் வங்கிக்கணக்கு மூலம் இந்த பணத்தைப் போட்டுவிடு என்று கூறி 70 லட்சத்து 40 ஆயிரம் வரை விட்ஜாவிடமிருந்து பெற்றிருந்தாராம்.

Advertisment

ஆர்யா, ஜமீலா ஆகியோரை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்கும் நோக்கில் முகமது அர்மான், இந்த மோசடியில் தான் மட்டுமே ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அப்போது கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தில் இவையனைத்தும் ஆர்யா செய்யவில்லை, ஆர்யாவின் குரலில் நான்தான் பேசி பணத்தை வாங்கினேன் என்றும், அந்த பணத்தை ஆடம்பரச் செலவு செய்ததாகவும் தெரிவித் திருந்தார். ஆனால், அப்போது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாததால் அவர் சரணடைந்ததை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

aryaarya

இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார், ஜெர்மனி பெண்ணின் புகாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு அனுப்பி உள்ளதாக கடிதம் அனுப்பினர். சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆர்யா உள்ளிட்ட 4 பேர் மீது 19-ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உசேனையும் அர்மானையும் கைது செய்துள்ளனர். ஆர்யா, ஜமீலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், அவர்களை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.

Advertisment

தங்களது முகத்தை வெளிப்படுத்த மறுக்கும் சினிமாத்துறையைச் சேர்ந்த சிலர், “ஆர்யா லுடோ கேம் மூலமாக பழக்கங்களை உருவாக்கிக்கொண்டு சில பெண்களிடம் பணம் வசூல் செய்துள்ள தாகவும். இதற்கு உடந்தையாக நடிகர் ஜெய் இருந்ததாகவும்”கூறுகின்றனர்.

முகமது அர்மான், ஆர்யாவின் பி.ஏ.வாக இருந்துவருகிறார். அதற்கான போட்டோ ஆதாரம் காவல் துறையிடம் இருப்பதாக காவல்துறை ஒப்புதல் வாக்குமூலத்திலும் சொல்லப்பட்டுள்ளது. ஆர்யா ஜெர்மனி விட்ஜாவிடம் பேசிய தொடர்பு எண் என்னுடைய எண் இல்லை என்று நீதி மன்றத்தில் கூறியிருக்கும் சூழ்நிலையில், அதே எண் ணில்தான். சமீபகாலமாக திரைத்துறை நண்பர்களி டம் பேசிவந்துள்ளார் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆர்யா பெயரில் இருந்த எண்ணை மூன்று வாரத்திற்கு முன்பாக அர்மான் பெயரில் மாற்றி யிருக்கலாம் என்றும், 5 வாரம் வரையிலான வந்த அழைப்பு கள், சென்ற அழைப்புகள் லிஸ்டுகளை எடுக்கமுடியும் என்ற நிலையில், அந்த கோணத்தில் விசாரித்து வருகிறது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.

arya

இதுதொடர்பாக பணத்தை இழந்த விட்ஜாவிடம் பேசியபோது, "ஆர்யா என்னுடன் வாட்ஸ்அப் மூலம் பேசிய பதிவுகளை வழங்கும்படி அந்நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளேன். வீடியோ காலில் பேசியிருப்ப தால், நடிகர் ஆர்யா பேசிய வீடியோ நிச்சயம் கிடைத்துவிடும். அப்போது யார் பொய் சொல்வது என்பது தெரியவரும். திருமணம் செய்வதாகக் கூறி ஆர்யா ஏமாற்றினார். காவல்துறை வழக்குப்பதிவு செய்தும் இதுவரையிலும் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இது மனவருத்தத்தைத் தந்துள்ளது. நீதித்துறையையும் காவல்துறையையும் நம்பியிருக் கிறேன்''’என்றார்.

விட்ஜாவின் வழக்கறிஞர் ஆனந் திடம் கேட்ட போது, "இந்த வழக்கில் குற்றத் திற்கு உடந்தையாக இருந்த ஏ3, ஏ4 ஆகியோரைக் கைது செய்துள்ள னர். இந்த குற்றத்தை செய்த ஏ1 ஆர்யாவையும். ஏ2 ஜமீலாவையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்''’என்றார்.

“"நடிகர் ஆர்யா வழக்கில் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய் தோம். அதனடிப்படையிலேயே விசாரித் தோம். விசாரணையில் புகார்தாரர் எண்ணிற்கும் இவருக்கும் தொடர்பு இல்லை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது ஆர்யா பெயர் நீக்கப் படும். புகார்தாரரிடம் வீடியோ கால் மூலம் விசாரணை நடத்தியுள்ளோம்'' என்றார் கமிஷனர் சங்கர் ஜிவால்.