Advertisment

ரங்கநாதருக்கு வைரக்கிரீடம்! நெகிழ்ச்சியில் ஜாஹீர் ஹூசைன்!

ss

டந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி பரதநாட்டியக் கலைஞரான ஜாகீர் ஹுசைன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரங்க நாதரை தரிசிக்கச் சென்றார். அங்கிருந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சத்தம் போட்டு, கோவிலை விட்டுத் துரத்தியதாக ஜாகிர் ஹுசைன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் மனக்கசப்புடன் பதிவிட்டிருந்தார்.

அதில் "நான் என் தாய்வீடாகக் கருதும், தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாகக் கணப்பொழுதும் மறவாது கருதிக்கொண்டி ருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளி யேற்றப்பட்டேன். காரணம், என் பெயர். முதன் முறையாக நான் இம்மதத்திற்கு தொடர் புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக்கொண்டிருக்க, அரங்கனைக் காணத் தடைசெய்யப்பட்டு, பல அவமானங் களுக்கிடையே துரத்தப்பட்டேன். இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக்கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்க னையும், ஆண்டாளை யும் விட்டு அணு அளவு

டந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி பரதநாட்டியக் கலைஞரான ஜாகீர் ஹுசைன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரங்க நாதரை தரிசிக்கச் சென்றார். அங்கிருந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சத்தம் போட்டு, கோவிலை விட்டுத் துரத்தியதாக ஜாகிர் ஹுசைன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் மனக்கசப்புடன் பதிவிட்டிருந்தார்.

அதில் "நான் என் தாய்வீடாகக் கருதும், தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாகக் கணப்பொழுதும் மறவாது கருதிக்கொண்டி ருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளி யேற்றப்பட்டேன். காரணம், என் பெயர். முதன் முறையாக நான் இம்மதத்திற்கு தொடர் புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக்கொண்டிருக்க, அரங்கனைக் காணத் தடைசெய்யப்பட்டு, பல அவமானங் களுக்கிடையே துரத்தப்பட்டேன். இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக்கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்க னையும், ஆண்டாளை யும் விட்டு அணு அளவும் அகலாது. காலம், திருப் பாணனை உள்ளழைத் ததுபோல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை'' என்று கூறியிருந்தார்.

Advertisment

tt

"நான் இஸ்லாமிய பெற்றோருக்குத்தான் பிறந்தேன். என் பெரியப்பாவுக்கு குழந்தை இல்லை என்பதால் என்னைத் தத்துக் கொடுத்துவிட்டார்கள். என்னுடைய பெரியப்பா இந்து நாயுடு சமூகத்தை சேர்ந்த அலமேலு மங்கா என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர் மிகப்பெரிய பெருமாள் பக்தர். அவரின் தாக்கத்தில் நான் பெருமாளை சேவிக்க ஆரம்பித்தேன். பரத நாட்டியம் கற்றுக்கொண் டேன். பரத நாட்டியத்தில் நான் இந்துக் கதைகளைத்தானே ஆடுகிறேன். கோவில்களின் சன்னிதிக்கு முன்பாக இந்து அல்லாதவர்கள் உள்ளே செல்லக்கூடாது என போர்டு வைத்திருப்பது உண்மைதான். ஆனால், ஒருவர் இந்து நம்பிக்கைகளுடன் இருக்கும்போது அவரைத் தடுப்பது எப்படி சரியாகும்? பகவானுக்கும், பக்தனுக்கும் இடையில் வந்து நிற்க அந்த ரங்கராஜன் யார்?'' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

Advertisment

இந்நிலையில், டிசம்பர் 11ஆம் தேதி, தி.மு.க.வின் கொடி பொறிக்கப்பட்ட வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியுடன் இக்கோயிலுக்கு வந்த பரதநாட்டியக் கலைஞரான ஜாகீர் ஹுசைன், அரங்கநாதர் மேல் கொண்ட பக்தியால் வைரக்கிரீடத்தை கோயில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோரிடம் காணிக்கையாக வழங்கியது பக்தர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பின்னர் ஜாகீர்ஹுசைன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது முழுக்க, முழுக்க ரத்தினத்தால் ஆனது. ஒரே ரூபி கல்லை குடைந்து செய்யப்பட்ட கிரீடம். இந்த கிரீடத்தில் 600க்கும் அதிகமான வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஒரே கல்லிலான மரகதம் பதிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 200 வருடத்திற்கு பின் முதன்முறையாக வைரக் கிரீடம் கோயிலில் சமர்பிக்கப்படுகிறது. பெருமாள் மீது கொண்ட பக்தி யால் இந்த கிரீடம் செய்யப்பட்டது. இந்த கிரீடத்திற் கான கல்லை குடைந்தெடுத்தவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். இந்த கிரீடத்தை செய்தது திருச்சியைச் சேர்ந்தவர். இதன் மதிப்பை சொல்ல விரும்பவில்லை.

இந்த கிரீடம் செய்ய ஏறத்தாழ 8 வருடங்கள் ஆனது. இதற்கான கல் கண்டுபிடிப்பதற்கு 3 வருடங்கள் ஆனது. இந்த கிரீடம் செய்வதற்கு தேவையான கல்லை கொடுத்தபோது அவர்கள் ஒரு நிபந்தனை போட்டார்கள். அது என்னவென்றால், இந்த கல்லை குடையும்போது வெடித்துவிட்டால் அதற்கான மதிப்பை நாம் கொடுத்துவிட வேண்டும். கல்லை நாங்கள் ரிட்டர்ன் எடுக்கமாட்டோம் எனக் கூறினார்கள். ஆனால், பெருமாளின் அருளால் கல் வெடிக்கவில்லை. எங்கேயும் ஜாயிண்ட் இல்லாமல் கல்லை குடைந்து ஒரே கல்லினால் செய்யப்பட்டது. ரூபி மட்டும் 3,169 கேரட். எனக்கு அரங்கநாதரை பிடிக்கும் என்பதால் இதை செய்தேன்'' என்று கூறினார்.

ttt

கடந்தமுறை கோவிலுக்குள் ஜாஹீர் ஹுசைன் வருவதற்கு இந்துத்வா கும்பல் எதிர்ப்பு தெரி வித்தது போலவே தற்போதும் அவருக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஜாஹீர் ஹுசைன், "நான் கோவிலுக்குள் செல்லவில்லை. நான் கோவில் அலுவலகத்திற்கு மட்டுமே வருகிறேன்'' என்று அவர்களிடம் தெரிவித்த பின்னர் தான் அவர் கோவி லுக்குள் செல்ல அனுமதிக்கப்பட் டுள்ளார். இந்நிலையில், அந்த கிரீடத்தை பெருமாளுக்கு வைப் பார்களா? அல்லது இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் அளித்த காணிக்கை என்பதால் அதை புறம்தள்ளி விடுவார்களா? அதை என்ன செய்வார்கள் என்று பல தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இஸ்லாமியராகப் பிறந்தபோதும், அரங்கநாதர் மீது தீவிர பக்தி கொண்டு, அவரை வணங்க வந்தவரைத் தடுப்பதும், அவர் மனமுவந்து கடவுளுக்கு நன்கொடை தந்தும்கூட அவரிடம் இந்துத்வா கும்பல் மத அரசியல் செய்வதும் கண்டிக்கத்தக்கது. இச்சம்பவம், இந்துத்வா கும்பலின் கட்டுப்பாட்டில் கோவில் இருப் பதையே வெளிப்படுத்துகிறது. இன்னொருபுறம், இப்படி இந்து மதத்தின்மீது பற்றுக்கொண்டவர்களை வெறுப்பதுதான் இந்து மதத்தின் கொள்கையா? பெருமையா? என்ற கேள்வியும் எழுகிறது.

nkn181224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe