"ஹலோ தலைவரே,…சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்குவது தொடர்பாக தமிழகத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த, தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் பன்வார் பிரகாஷ் தலைமையில் 7 பேர் கொண்ட குழு சென்னையில் முகாமிட்டிருக்கு.''”
"அப்ப சீக்கிரமே தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்பார்க்கலாம்கிற?''”
"ஆமாம், தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்கப்போறாங்க தலைவரே..… அதற்கு முன்னால, தேர்தல் பணிகளை எந்தளவுக்கு தயார்படுத்தி வைச்சிருக்காங்கன்னு விசாரணை நடத்தத்தான் 7 பேர் குழு வந்திருக்கு! அர்ச்சனா பட்நாயக்குடன் ஆலோசனை நடத்திவிட்டு, பிறகு புதுச்சேரியிலும் ஆலோசனை நடத்தவிருக்காங்க. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் இந்த எழுவர் குழு, எஸ்.ஐ.ஆர். பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் முடித்துள்ள நிலையில், பட்டியல் பற்றியும், இறுதி வாக்காளர் பட்டியலை ரிலீஸ் செய்வது குறித்தும் விவாதிச்சிருக்காங்க. எல்லா ஆலோ சனைகளையும் முடிச்சிட்டு 13-ஆம் தேதி இரவு டெல்லிக்கு போகிறது எழுவர் குழு.''”
"தேர்தல் தேதி எப்போ அறிவிக்கப்போறாங்கன்னு ஏதேனும் விசேச தகவல் உண்டா?''”
"பிப்ரவரி 28-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும்னு அதிகாரிகள் தரப்புல ஒரு பேச்சு ஓடிக்கிட்டிருக்கு! இது தவறுச்சுன்னா, மார்ச் முதல் வாரத்துல அறிவிப்பு வந்துடும். எப்படியிருந்தாலும் டெல்லி எஜமானர்களிடம் கலந்துக்காம தேதியை முடிவுபண்ணப் போறதில்லை. இந்த முறை தேர்தல் பிரச்சாரத்துக்கு குறைந்தபட்சம் 1 மாத காலம் கொடுக்கணும்னு தமிழக பா.ஜ.க. எதிர்பார்க்குதாம். ஆனா, அதிகபட்சம் 25 நாட்கள் கொடுக்க லாம்னு தேர்தல் ஆணையம் தீர்மானிச்சிருக்காம்.''”
"தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் எப்ப தாக்கலாகுதாம்?''”
"பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கலாகுது தலைவரே. அதிகபட்சம் 21ஆம் தேதியோடு பட்ஜெட் செசன்ஸை முடித்துக்கொள்ள அரசு தரப்பில் யோசனை சொல்லி யிருக்காம். அனேகமாக அதன்படிதான் பட்ஜெட் கூட்டம் இருக்கும். நடப்பு தி.மு.க. அரசு தாக்கல்செய்யும் கடைசி பட்ஜெட் என்பதால், தேர்தலை மையப்படுத்தி நிறைய புதிய அறிவிப்பு கள் வரும்னு பல்வேறு தரப்புகளில் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு. எனக்குக் கிடைக் கிற தகவல்படி, புதிய அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் சொல்ல லாம்; இடைக்கால பட்ஜெட்டில் சொல்ல வேண்டுமா?ன்னு முதல்வர் ஸ்டாலின் யோசிக்கிறாராம். அத னால் புதிய அறிவிப்பு களுக்கு ஃபிப்டி, ஃபிப்டி சாய்ஸ்தான் இருக்கு.''”
"யாருடன் காங்கிரஸ் கூட்டணி? எனும் தலைப்பில் கடந்த நக்கீரன் இதழில

"யாருடன் காங்கிரஸ் கூட்டணி? எனும் தலைப்பில் கடந்த நக்கீரன் இதழில் விரிவாக பதிவுசெஞ்சிருந்தோம் இல்லையா...…அந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு போலயே!''”
"எனக்கும் அந்த தகவல் வந்துச்சு தலைவரே...… கூட்டணி விசயத்துல காங்கிரஸ் கட்சியில நடக்கிற வெளிவராத அத்தனை உண்மைகளையும் நக்கீரன் அம்பலப்படுத்தியிருந்துச்சு. இது முதல்வர் ஸ்டாலின் வரைக்கும் போனதால, ஆட்சியில் பங்கு விசயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும்னு முடிவுசெஞ்ச முதல்வர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது, ஆட்சியில பங்குங்கிறது தமிழகத்துக்கு ஒத்துவராது. இது எங்களுக்கும் தெரியும், அவங்களுக்கும் (காங்கிரஸ்) தெரியும். கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படாதான்னு சிலர் சதி செய்கின்றனர். அதுபற்றி கவலைப்பட வில்லை. ஆட்சியில் பங்கு என்ற பேச்சே எழவில்லை. அரசியலையும் தாண்டி ராகுல்காந்தி என்னுடைய மூத்த சகோதரர். தி.மு.க.வும், காங்கிரசும் சேர்ந்துதான் தேர்தலைச் சந்திக்கும்னு தெளிவுபடுத்தியிருக்காரு.''”
"திண்டுக்கல் மாவட்ட எஸ்.ஐ. விவகாரம் ஒண்ணு பரபரப்பா இருக்கே என்ன விவரம்?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/13/rang2-2026-02-13-10-15-25.jpg)
"திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்தி நகரை சேர்ந்தவர் முருகன். இவர் காரைக்குடி ரயில்வே சாலையிலுள்ள தனது உறவினர் சபரிராஜின் மொபைல் கடையில் பணி யாற்றி வந்திருக்கின்றார். இந்த நிலையில், புதன் கிழமையன்று இவரைத் தேடி வத்தலக் குண்டுவிலுள்ள வீட்டிற்கு காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ்.ஐ. பிரேம்குமார், ஏட்டையா இருவரும் வந்திருக்கின்றனர். வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிய நிலையில் யாரும் கதவைத் திறக்காததால் கதவை உடைக்க, தூக்கில் தொங்கியபடி முருகனின் உயிரற்ற உடல் இருந்திருக்கிறது. பயந்த எஸ்.ஐ. பிரேம்குமார் உள்ளூரிலுள்ள வத்தலக்குண்டு போலீஸாரை அழைத்திருக்கிறார். "என்ன காரணத்திற்காக இங்கு வந்தீர்கள்? வாரண்ட் இருக்கின்றதா? குற்றவாளியை தேடிவருகின்றீர்கள் என்றால் உள்ளூர் போலீஸிற்கு தகவல் கூறிவிட்டு வர வேண்டியதுதானே? உங்களுடைய மேலதிகாரி கொடுத்த அனுமதிக் கடிதத்தைக் கொடுங்கள்'’ என வத்தலக்குண்டு போலீஸார் காரைக்குடி எஸ்.ஐ. பிரேம்குமாரை குடைய, தனிப்பிரிவு மூலம் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் பறந்திருக்கின்றது. அவர் அங்கிருந்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யை தொடர்புகொண்டிருக்கிறார். நிலவரம் அறிய சம்பந்தப்பட்ட துணைச்சரகத்தை தொடர்புகொண்ட நிலையில், ‘காரைக்குடி ரயில்வே சாலையிலுள்ள மொபைல் கடையில் மொபைல் போன் தவிர, கடன் அட்டைக்கு பணம் தரும் நிகழ்வும் நடக்கும். அதனால் அங்கு பணப்புழக்கம் அதிகம். தூக்கிட்ட நபர் முருகன் ரூ.8 லட்சத்தை அங்கிருந்து திருடி ஊருக்கு வந்ததாக கூறப்பட்ட நிலையில், "சார்! முடிச்சுக் கொடுத்தீங்கண்ணா 25 சதவிகித கமிஷன் எடுத்துக்கொள்ளுங்கள்'’என டீல் பேசப்பட்டி ருக்கின்றது. கமிஷனுக்கு ஆசைப்பட்டு எஸ்.ஐ. பிரேம்குமார் வத்தலக்குண்டுவுக்கு வந்துள்ளார்’ என்கிற தகவல் சிவகங்கை மாவட்ட எஸ்.பி.க்கு கூறப்பட்டிருக்கிறது. கோபமான எஸ்.பி., எஸ்.ஐ. பிரேம்குமாரை போனில் பிடித்து, "ஸ்டேஷனில் நூற்றுக்கணக்கான வழக்கு இருக்கு. கொடுக்கல்-வாங்கல் வழக்கில் உனக்கு என்ன தனிப்பட்ட அக்கறை? எப்.ஐ.ஆர்.கூட போட வில்லை. என்ன .........க்கு அங்கே போயிருக் கிறாய்?'’என டோஸ் விட்டிருக்கிறார். இந்த விவகாரம் டி.ஜி.பி. வரை சென்ற நிலையில், எஸ்.ஐ மீது துறைரீதியான நடவடிக்கை இருக்கலாம் என்கின்றது காவல்துறை வட்டாரம்.''”
"திருச்சி எஸ்.பி. நாகரத்னா மீதும் இதேபோல புகார் வருதே… என்ன விவகாரம்?''”
"திருச்சி மாவட்டம் மணப்பாறை தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ஆரோக்கியம். இவர் மணப் பாறை பகுதியில் கிராவல் மண் விற்பனை செய்துவரக்கூடிய நிலையில், சட்டத்திற்குப் புறம்பாக மண் கடத்தியதாகவும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் ஏற்றிச்சென்ற தாகவும், பல்வேறு குற்றச் சாட்டுகளை முன்வைத்து அவருடைய லாரியை திருச்சி மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் பிடித்துவைத் துள்ளார். அந்த லாரியை விடுவிக்க கீழ்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஆனால் லாரியை காவல்துறை விடுவிக்காததால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பிப்ரவரி 11-ஆம் தேதி ஆரோக்கியத்தின் வழக்கறிஞர் மூலம் நீதிபதி முன் இந்த விவகாரத்தை கொண்டுசென்றார். இந்நிலையில், எஸ்.பி. செல்வநாகரத்தினத்திற்கு அனைத்துமாகச் செயல்படக்கூடிய ஆக்ஸினா கருணா, 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு ஒன்றியச் செயலாளர் ஆரோக்கியத்திடம் அழுத்தம் கொடுத்துவருகிறாராம். இதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டும் திருச்சி எஸ்.பி. மீது முன்வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதத்தில் 8 எப்.எல்.டு பார்கள் அனுமதி கொடுக்கும் விவகாரத்திலும், ஆக்சினா கருணா மூலமாக பணம் கேட்டு அழுத்தம்கொடுத்ததா தகவல் வருது.”
"சசிகலா வியூகத்தால் தினகரன் இக்கட்டான நிலையில் இருக்கிறாராமே?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/13/rang1-2026-02-13-10-15-42.jpg)
"டி.டி.வி.தினகரன் கட்சியில் இருப்பவர்களும் சரி, முக்குலத்தோர் சமூகத்தவரும் சரி, சசிகலாவைத்தான் மதிக்கிறார்கள். சசிகலாவின் தம்பி திவாகரன் தற்போது தமிழக வெற்றிக் கழகத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார். விரைவில் கூட்டணி அமையலாம் எனத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இருக்கிற அ.தி.மு.க.வினரிடமும் பேசிக்கொண்டிருக்கிறார் சசிகலா. டி.டி.வி. தினகரன் வந்துவிட்டால், முக்குலத்தோர் மொத்தமும் வந்துவிட்டதுமாதிரி என பில்டப் கொடுத்துக்கொண்டிருந்தனர் தினகரனும், அவரது ஆதரவாளர்களும். சசிகலா "அப்படியொன்றுமில்லை, அச்சமூகம் என் கையில்தான் இருக்கிறது' என களமிறங்கியதால், தினகரன் இக்கட்டான நிலையில் இருக்கிறார். நிலவரத்தை சுமுகமாக்க சசிகலாவுக்கு சமாதானத் தூது அனுப்பிக்கொண்டிருக்கிறார். சசிகலாவோ அதை ஏற்கவில்லை. நான் எடப்பாடி, தினகரன் இருவரையும் ஒரு கை பார்ப்பேன் என உக்கிரமாகக் கூறிக்கொண்டிருக்கிறாராம்.''”
"ஓ.பி.எஸ்.ஸுக்கு எடப்பாடி ஏதோ தூதுவிட்டிருக்காராமே?''”
"ஓ.பி.எஸ். தன் கட்சித் தொண்டர்களைக் கூட்டி, தி.மு.க.வுக்குப் போவதா… அல்லது த.வெ.க.வுக்குப் போவதா என கருத்துக் கேட்டிருக்கிறார். அதில் பெரும்பாலானவர்கள் தி.மு.க.வுக்குப் போவதுதான் மரியாதை என கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். இருந்தும் இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை ஓ.பி.எஸ். ஊசலாட்டத்தில் இருக்கிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு தூது அனுப்பியிருக்கிறார். நீங்கள் தி.மு.க.வுக்குச் சென்றால் அழிந்துபோய்விடுவீர்கள். அது தற்கொலை செய்வதற்குச் சமம் எனச் சொல்லியிருக்கிறார். எடப்பாடி எதற்கு இப்போது தூது அனுப்பியிருக்கிறாரென தனக்கு நெருக்க மானவர்களிடம் ஆச்சரியப்பட்டு பேசியிருக் கிறாராம் ஓ.பி.எஸ்.''”
"காங்கிரஸ்- தி.மு.க. மோதல் குறித்த செய்திகளுக்குப் பின்னணியில் ஆதவ் இருக் காராமே?''”
"நிஜம்தான் தலைவரே, காங்கிரஸில், ராகுல் காந்தி, ஸ்டாலின் மீது கோபமாக இருப்பதாக ஒரு பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். அதெல்லாம் இல்லை என காங்கிரஸ் வட்டாரத்
தில் தெரிவிக்கிறார்கள். தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் மிகப்பெரிய மோசடியாக மோதல் நடப்பதுபோல் தகவல்களை ஊடகங்களில் பரப்பிவருகிறார் ஆதவ் அர்ஜுனா. அந்தக் கூட்டணியை நான் உடைத்துக்காட்டுகிறேன் என சவால்விட்டு, ஊடகங்களைக் குறிவைத்து இத்தகைய தகவல்களைப் பரப்பிவருவதாகச் சொல்கிறார்கள்.''”
"சரிப்பா, நானும் ஒரு தகவல் சொல்றேன் கேட்டுக்க. சமீபத்திய கேசவவிநாயகம் பதவிநீக்கம் அவருக்கு மட்டும் வைக்கப்பட்ட ஆப்பல்ல. அ.மலை, பி.எல்.சந்தோஷுக்கும் சேர்த்து வைக்கப்பட்ட ஆப்பு என்கிறார்கள் பா.ஜ.க.வினர். கேசவவிநாயகம், ஆர்.எஸ்.எஸ். தலைவர் செந்தில், அ..மலை என இந்த மூவர் கூட்டணிதான் ஆயிரக்கணக்கான கோடிகளை அடித்தது. இந்த மூவரின் திருவிளையாடல்கள் புகார்களாக தலைமைக்குப் பறந்திருக்கிறது. இதையடுத்தே கேசவவிநாயகத்தை நீக்கியிருக்கிறார்கள். பி.எல்.சந்தோஷின் ஆளுகைக்குட்பட்ட கேரளாவிலும் கர்நாடகாவிலும் ஸ்தாபன பொதுச்செயலாளர் பதவியில் தற்போதைக்கு சந்தோஷுக்கு வேண்டியவர்கள் அனைவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அகில இந்திய அளவில் அதற்குச் சமமான பதவியில் இருக்கும் சந்தோஷும் நீக்கப்படலாம் என்கிறது பா.ஜ.க. வட்டாரம்.''’
_____________
இறுதிச் சுற்று!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/13/ranbox-2026-02-13-10-16-03.jpg)
வடசென்னையில் கொருக்குப்பேட்டை -மணலி சாலையில், ரயில்வே லெவல் கிராசிங்கிற்கு கட்டப்பட்ட புதிய ரயில்வே மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 12ஆம் தேதி, வியாழனன்று திறந்து வைத்தார். பின்னர் அந்த பாலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாகனத்தில் பயணித்து பார்வையிட்டார். அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்தாண்டு இப்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். சுமார் ரூ.96.04 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தின் மூலம், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை மற்றும் எழில் நகர் பகுதி மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. மேம்பால திறப்பு விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ. எபிநேசர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
-கீரன்
புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்களை எதிர்த்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வியாழக்கிழமை (12/02/26) அன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "கோடிக்கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த 4 தொழிலாளர் சட்டங்களையும் தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர். தொழிலாளர்கள், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கும் போராட்டங்களுக்கும் நான் ஆதரவாக இருப்பேன். இவர்களுக்காக நான் உறுதியாக நிற்கிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.
மத்திய பட்ஜட்டில் தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.க. அரசையும், அதற்கு ஒத்துழைத்த அ.தி.மு.க.வையும் கண்டித்து தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வியாழக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு பா.ஜ.க. -அ.தி.மு.க.வை கண்டித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-இளையர்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us