கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா விவகாரம் நாளொரு நடவடிக்கை, தினமொரு புதிரென நகர்ந்துகொண்டிருக்கிறது. கர்நாடக உயர்நீதி மன்றத்தின் கேக் ஆர்டர் ரத்து செய்யப்பட்டதி லிருந்து, ஏதோ ஒருவழியில் இந்த விசாரணை யை முடக்கும்நோக்கில் கோயில் நிர்வாகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றது.
ஹசன் மாவட்டத்தில் தர்மஸ்தலா நிர்வாகத்தின்கீழ் செயல்படும் கல்லூரியில் படிக்கும் மாணவியொருவர் நக்கீரனை தொடர்புகொண்டார் (ஐஹள்ள்ஹய் க்ண்ள்ற்ழ்ண்ஸ்ரீற்). இக் கல்லூரியின் மாணவர்கள், சிறப்பு விசாரணைக் குழுவை எதிர்த்து போராட்டம் நடத்தவேண் டும் என்றும், அனைவரும் பொதுமக்களைப் போல சீருடையில்லாமல் சாதாரண ஆடை அணிந்து, தங்கள் சொந்த வாகனத்தில் பயணித்து துணை கமி ஷனர் அலுவலகம் எதிரே போராட் டம் நடத்தவேண்டும் என்றும், இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளா தவர்கள் மீது, கல்லூரி நிர்வாகம் துறைரீதியான நடவடிக்கை எடுக் கும் என்றும் மிரட்டப்பட்டதாகத் தெரிவித்தார். இந்தத் தகவலை போராட்டக் குழு தலைவர் மகேஷ் ஷெட்டி, கிரிஷ் மட்டுவனார் ஆகியோருக்குத் தெரியப்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.
இது ஒருபுறமிருக்க, ஸ்பெஷல் இன் வெஸ்டிகேஷன் டீமை சேர்ந்த பிரணாப் முகர்ஜியை மாற்றும் முயற்சியில் பெரும் புள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துவருகின்றன.
நம்மிடம் பேசிய இரண்டாவது அப்ரூவ ரான ஜெயந்த் ஷெட்டி, "கோயில் நிர்வாகம் தரப்பில் இந்த வழக்கைக் சீர்குலைக்க பல சதிகள் நடைபெற்று வருகிறது. துரிதமாகச் செயல்படும் போலீஸ் அதிகாரிகளை மாற்றும் முயற்சியில் முக்கிய புள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். என் மீதும் பொய் புகார்கள் பதியப்பட்டுள்ளன. 15 வருடங்களுக்கு முன்பு ஒரு போலீஸ்காரர் பதினைந்து வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுமியின் பிணத்தை எடுத்துவந்து சட்டவிரோத மாக அந்த உடலைப் புதைத்தார். அந்த இடம் எனக்குத் தெரியும். தற் போது அந்த இடத்தை அடையாளம் காட்டத் தயார். தற்போது சாட்சியம் அளித்துள்ள பீமா, நான் உள்பட உண்மையை வெளிக்கொண்டுவர விரும்புபவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. சைட் 13-ஐ தோண்டும் பணியில் ஏற்பட்டு வரும் தடை களுக்கு கோயில் நிர்வாகத்தின் மேல்மட்டப் புள்ளிகள்தான் காரணம்''’என்றார். இந்த நிலையில் 1986-ல் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப் பட்டு, கொலைசெய்யப்பட்டு ஆற்றங்கரை ஓரத்தில் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப் பட்ட பத்மலதாவின் சகோதரி இந்திராவதி, எஸ்.ஐ.டி. (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம்) இடம் பத்மலதாவின் வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம், பத்மலதாவின் கொடூர கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் பிணத்தை எரிப்பதைத் தவிர்த்து புதைத் துள்ளதாகவும், மீண்டும் அந்த பிணத்தை உடல்கூராய்வு நடத்தவேண்டு மென்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் புரந்தரா என்பவரும் எஸ்.ஐ.டி. யில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளது வழக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில், கடந்த 2012-ஆம் வருடம் தர்மஸ்தலாவுக்கு சுற்றுலா வந்த 17 வயது இளம் பெண் காணாமல் போனதாக அந்தப் பெண் ணின் பெற்றோர் புதிய புகார் ஒன்றை அளித் துள்ளனர். எஸ்.ஐ.டி. டீமிடம், பீமா அடையா ளம் காட்டிய சைட் 13-ஐ தோண்டும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர். அதற்காக ஜி.பி.ஆர். கருவி, அதற்கான நிபுணர்கள் பெங்களூரி லிருந்து வரவழைக்கப்பட்ட நிலையில், தோண்டவேண்டிய பகுதியில் காணப்படும் மின்சார வாரியத்தின் ட்ரான்ஸ்பார்மரை அகற்றுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இந்த சைட் நேத்ராவதி ஆற்றினருகே உள்ளதால் குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் தோண்டும்போது ஆற்றுத் தண்ணீர் திசைமாறி இங்கு வர வாய்ப்புள் ளது. கர்நாடகத்தில் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு பலத்த மழை பெய்து வருவதால் ஜி.பி.ஆர். கருவி பயன்படுத்து வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவுசெய்து டெல்லியிலிருந்து யுவராஜ் ஐ.பி.எஸ். தலைமையிலான ஒரு குழுவை தர்மஸ்தலாவுக்கு அனுப்பியுள்ளது. அக்குழுவும் தன் பங்குங்கு விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
_____________
இறுதிச்சுற்று!
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை (14-8-2025) காலை 11:00மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கோட்டையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் வெளிநாடு தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்வது, புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது, புதிய தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டது பற்றியும் விவாதித்துள்ளார் ஸ்டாலின். இது தவிர, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சில பிரச்சனைகள் தொடர்பானவைகளும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
-இளையர்