Advertisment

வேங்கைவயலை அடுத்து தர்மபுரி! -தொடரும் தண்ணீர்த்தொட்டி சர்ச்சைகள்!

dd

வேங்கைவயலை தொடர்ந்து தர்மபுரியிலும் பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டி யில் மலம் கலந்திருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

Advertisment

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பனைகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 120க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் கடந்த 21ஆம் தேதி காலையில் மாணவர்கள் தண்ணீர் எடுத்தபோது தண்ணீரில் துர்நாற்ற

வேங்கைவயலை தொடர்ந்து தர்மபுரியிலும் பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டி யில் மலம் கலந்திருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

Advertisment

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பனைகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 120க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் கடந்த 21ஆம் தேதி காலையில் மாணவர்கள் தண்ணீர் எடுத்தபோது தண்ணீரில் துர்நாற்றமடிக்கவே அது குறித்து ஆசிரியரிடம் புகாரளித்தனர். ஆசிரியரோ, பள்ளித் தலைமையாசிரியர் கணேசனிடம் சொல்ல, தலைமையாசிரியர் அத்தொட்டியை ஆய்வுசெய்ததில், தொட்டிக்குள்ளிருந்து மனித மலம் கலந்ததுபோல் துர்நாற்றமடிப்பதை உறுதிசெய்து, பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து பென்னாகரம் காவல் துறை கண்காணிப்பாளர் மகா லட்சுமி, பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் பென்னா கரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் ஆகியோர் விசாரணை செய்ததில், பள்ளியில் குடிநீர்த் தொட்டி வேறிடத்தில் இருப்பதும், துர்நாற்றம் அடிக்கும் தொட்டி கழிப்பறைகளுக்காகப் பயன்படுத்தும் தொட்டி என்றும் கண்டறிந்தனர். மேலும், சர்ச்சைக்குரிய தொட்டியில் மனித மலம் கலப்பதற்கான சாத்தியக்கூறு இல்லையென்றும், இருந்தபோதும் தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி உறுதிசெய்தபின்னரே விசாரணையைத் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ss

அப்பகுதி மக்கள் கூறுகையில், "அது கழிப் பிடத்திற்கே பயன்படுத்தும் தண்ணீராக இருந் தாலும் அந்த தண்ணீரீல் மலம் கலக்கலாமா?'' என கொந்தளித்தனர். இந்த நிலையில், உடனடி யாக அந்த தொட்டியிலிருந்த தண்ணீரை ஆய்வுக்காக சென்னைக்கு கொண்டு சென்றனர். இந்த ஆய்வறிக்கை வந்த பின்னரே மனித மலம் தண்ணீரில் கலந்துள்ளதா என்பது தெரியவரும்.

இதுகுறித்து பனைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வம் கூறும்போது, "எங்கள் ஊரில் உள்ள நடுநிலைப்பள்ளியிலுள்ள சின்டெக் டேங்க்கில் மலம் கலக்கப்பட்டதாக ஆய்வில் தெரியவந்தால் காவல்துறை கண்டிப்பாக நட வடிக்கை எடுக்கவேண்டும். பள்ளி வளாகத்தில் மது அருந்துவோர் தொல்லை அதிகரித்துவருவ தால் அவர்களால் இப்படி நடந்திருக்க வாய்ப் புள்ளது'' என்றார். இவ்விவகாரத்தை மூடி மறைக்கவே காவல்துறை முயல்வதாகவும், ஆய்வுக்கு அனுப்பப்படும் தண்ணீரில் தில்லு முல்லு நடக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சின்டெக்ஸ் டேங்க்கில் மலம் கலக்கப் பட்டதா? என்று தர்மபுரி எஸ்.பி. ஜேசுபாதத் திடம் கேட்டபோது, "அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. தண்ணீரை ஆய்வுக்காக அனுப்பி யுள்ளோம். வரும் திங்களன்று ஆய்வு முடிவு வந்ததும் உண்மை தெரிந்துவிடும்'' என்றார். தமிழ்நாட்டில் மீண்டும் மீண்டும் வேங்கைவயல் சம்பவம் தொடரக்கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

nkn270923
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe