தர்மபுரி தொகுதியில் அனைத் துக் கட்சிகளும் வாக்குச் சேகரிக்க சுட்டெரிக்கும் வெயிலிலும் சூறா வளியாக சுழன்றுகொண்டி ருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வின் கே.பி.அன்பழகன் தனது ஆதரவாளரான பூக்கடை ரவியின் மகன் அசோகனுக்கு சீட் வாங்கிக் கொடுத் திருக்கிறார். அசோகன் வேட்பாளராக அறிவிக்கப் பட்டதிலிருந்து அவருக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுக் கொடுக்க கே.பி.அன்பழகன் முழுமூச்சாகக் களம்கண்டாலும் அ.தி.மு.க.வில் கே.பி.க்கு எதிரான ஒரு குரூப் உள்ளடி வேலை செய்துவருகிறதாம்.
அ.தி.மு.க. அன்பழகனுக்கு எதிரான குரூப்பின் வாக்குகளைத் தன் பக்கம் இழுக்க பா.ம.க.வினர் முழுமூச்சாகக் களம்கண்டுள்ளனர். கடந்த முறை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தே 5 லட்சம் வாக்குகள்தான் கிடைத்தது. அப்போது தி.மு.க. 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த முறை பா.ம.க., பா.ஜ.க. கூட்டணியில் நின்றாலும் பா.ஜ.க. ஆதரவு வாக்குகள் இங்கு சொற்பமே.
தர்மபுரியில் வன்னியர்கள் வாக்கு 38% உள்ளது. அது தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. என மூன்றாகப் பிரியாமல் பெரும்பான்மை வாக்குகளைக் கைப்பற்றினால் தான் வெற்றி நிச்சயமென அன்புமணி, ராமதாஸ், பேரப்பிள்ளைகள், மச்சான் என ஒட்டுமொத்த குடும்பமும் தர்மபுரியிலேயே டேரா போட்டுவிட்டார் களாம். சௌமியாவின் வெற்றி அத்தியாவசியம் என்றாலும், மற்ற தொகுதி பா.ம.க வேட்பாளர்கள் எங்களுக்கு கட்சித் தலைமையின் பிரச்சாரம் வேண்டாமா என வருத்தப்படுகிறார்களாம்.
இரவு நேரங்களில் வன்னியர்கள் வாழும் கிரா மங்கள்தோறும் சென்று வன்னியர் இட ஒதுக்கீட்டையும் சமூக, பொருளாதார மேம்பாட் டையும் பெற்றுத் தருவோம் என வாக்குறுதி யளித்து வாக்குச் சேகரிப்பை நடத்தி வருகிறார்களாம். தர்மபுரியில் தி.மு.க. அ.தி.மு.க.வை விடவும் பா.ம.க.வின் பிரச்சாரம் வலுவாக இருக்கிறது. ஆனாலும் தி.மு.க. வேட்பாளரான ஆ.மணி அதே சமூகத்தை சார்ந்தவர் தான். தி.மு.க. கூட்டணிக் கட்சியிலுள்ள வி.சி.க. மற்றும் சிறுபான்மை வாக்குகள் பா.ஜ.வுக்கு எதிராகவே விழும். தவிரவும், தி.மு.க. நாற்பதும் நமதே என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி தர்மபுரி மாவட்ட துணைச் செயலாளர். அதனால் கட்சி நிர்வாகிகள் முழுவீச்சுடன் பணி யாற்றிவருகின்றனர். தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கான பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் கிடுக்கிப் பிடியும் தி.மு.க.வை வெற்றிக் கோட்டுக்கு நெருக்கமாகவே வைத்திருக்கிறது.
தர்மபுரி தொகுதியில் வெற்றிக்கு மல்லுக்கட்டுகின்றன தி.மு.க.வும், பா.ம.க.வும்.
-சே