Advertisment

போலீஸ் கேன்டீன்களில் தேவாரத்தின் புத்தகம். விதிகளை மீறி விற்பனை!

dd

ந்திய ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், வீட்டுக்குத் தேவை யான பொருட்கள் வாங்குவதற்கான கேண்டீன்கள் இந்தியா முழுவதும் உள்ளன. மார்க்கெட் விலையைவிட மிகக்குறைந்த விலையில் இங்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

Advertisment

இதேபோல் ஒரு சிஸ் டத்தை தமிழ்நாடு காவல் துறையில் முதலமைச்சராக இருந்த கலைஞர், 2011, பிப்ரவரி மாதம் அரசாணை எண் 125-ன் கீழ் தமிழ்நாடு காவல் அங்காடிகள் என்கிற பெயரில் காவலர்களுக்கான கேன்டீன்களை உருவாக்கினார். இங்கு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்

ந்திய ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், வீட்டுக்குத் தேவை யான பொருட்கள் வாங்குவதற்கான கேண்டீன்கள் இந்தியா முழுவதும் உள்ளன. மார்க்கெட் விலையைவிட மிகக்குறைந்த விலையில் இங்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

Advertisment

இதேபோல் ஒரு சிஸ் டத்தை தமிழ்நாடு காவல் துறையில் முதலமைச்சராக இருந்த கலைஞர், 2011, பிப்ரவரி மாதம் அரசாணை எண் 125-ன் கீழ் தமிழ்நாடு காவல் அங்காடிகள் என்கிற பெயரில் காவலர்களுக்கான கேன்டீன்களை உருவாக்கினார். இங்கு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறை, இதன் அமைச்சுப்பணியாளர்கள், இங்கு பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.

Advertisment

ssssssss

தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்கள், மாநகர காவல் ஆணையரகம், அதிரடிப்படை முகாம், பயிற்சிப் பள்ளிகள் என தமிழ்நாடு முழுவதும் சுமார் 63 கேன்டீன்கள் செயல்படுகின்றன. இதனை நடத்த தனி டீம் உள்ளது. இந்த கேன்டீன்களுக்கு பொருட்கள் சப்ளை செய்வதற்கான டெண்டர் விடப்படும், அந்த டெண்டர் எடுப்பவர்கள் ஒவ்வொரு கேண்டீனுக்கும் தேவையான பொருட்களை சப்ளை செய்வார்கள். இங்கு மளிகைப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்களான டிவி, ப்ரிட்ஜ், வாசிங்மிஷின், ஏ.சி, செல்போன், வீட்டுக்குத் தேவையான கட்டில்மெத்தை, சிறிய ரக வாகனங்கள் போன்றவற்றை விற்பனை செய்வார்கள். தமிழ்நாடு அரசு, பொருட்களுக்கான விற்பனை வரியிலிருந்து சலுகை தருகிறது.

கடந்த 10 நாட்களாக 1997-ல் காவல்துறை பணியில் இருந்து ஓய்வுபெற்ற தேவாரம் எழுதிய "மூணாறிலிருந்து மெரினா வரை' என்கிற புத்தகம் காவல்துறை கேன்டீனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் வெளியான இந்த புத்தகம் எந்த அடிப்படையில் காவல்துறை கேன்டீனில் விற்பனை செய்யப்படுகிறது எனத் தெரியவில்லை என்கிறார்கள். கேன்டீன் நடைமுறை ஓராண்டுக்கு முன்பு மாற்றப்பட்டுள்ளது. பொருள் வாங்குபவர்கள் நேரடியாகப் பணம் தந்தால் பெறக்கூடாது என்பது தலைமையகத்தின் உத்தரவு. டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு வழியாகவே பணம் செலுத்தவேண்டும். ஆனால் இந்த புத்தகம் கேன்டீனிலிருந்து வாங்குபவர் களுக்கு பில் எதுவும் போடாமல் நேரடியாக பணம் வாங்கிக்கொண்டு விற்கப்பட்டுவருகிறது.

காவல்துறை கேன்டீன் தலைவராக இருப்பவர் ஐ.ஜி. நஜ்முல் ஹோடா ஐ.பி.எஸ். அவரது அலுவலக உத்தரவின்படி தலைமை யகத்திலிருந்து ஒவ்வொரு கேன்டீனுக்கும் தேவாரத்தின் புத்தகங்கள் அனுப்பப்பட்டு விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்படுகிறது. கேன்டீனில் எந்த பொருட்கள் வாங்கினாலும் சலுகை உண்டு. வழக்கமாக வெளியே கடைகளில் புத்தகங்கள் வாங்கினாலே 5 முதல் 10 சதவிகிதம் வரை விலை தள்ளுபடி உண்டு. தேவாரத்தின் இந்த புத்தகம் கேன்டீனில் என்ன விலை குறிப்பிடப்பட்டுள்ளதோ அதே விலைக்கு விற்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

nkn040524
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe