எவ்வளவுதான் மோசடி நிதி நிறுவனக் கதைகளை மக்கள் அறிந்திருந்தாலும், ஏமாறுவதில் இருந்து அவர்கள் மீளவில்லை. அதிக வட்டி என்றதும், அவர்கள் எளிதாக வழுக்கி விழுந்துவிடு கிறார்கள். அப்படியொரு சம்பவம்தான் இது.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியை தலைமையிடமாக கொண்டு வட தமிழகத்தின் பல இடங்களிலும் இயங்கி வந்தது. ஐ.எப்.எஸ் (இண்டர்நேஷனல் ஃபைனான்ஸியல் சர்வீஸஸ்) நிறுவனம்.
ரிசர்வ் வங்கியில் பதிவு பெறாத இந் நிறுவனத்தை, சத்துவாச்சாரியை சேர்ந்த லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேதநாராயணன் சகோதரர்களும், இவர்களின் உறவினர் மோகன்பாபுவும் இணைந்து நடத்திவந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/financecompany.jpg)
ஆரம்பத்தில் பங்குச் சந்தையில் தங்களது பணத்தை முதலீடு செய்து லாபத்தை எடுத்துள் ளார்கள். இதையொட்டி, தங்களுக்கு நெருக்க மான வர்களை முதலீடு செய்ய வைத்து, அதிக வட்டியை அள்ளிக்கொடுத்தனர். இதனால் இவர்கள் பிரபலமாக இவர்கள் வலையில் ஏராள மானோர் விழுந்தனர். கடைசியில், எல்லோரது நெற்றியிலும் நாமத்தைப் போட்டுவிட்டார்கள். இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவை, கார்த்திக் என்பவர் தட்டினார்.
இதனால், அந்த நிறுவனத்தின் மீது சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஐ.எப்.எஸ். அலுவலகங்கள் மற்றும் ஏஜென்ட்டுகளின் வீடுகள் என 21 இடங்களில் சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஏஜென்ட் மின்மினி சரவணன், வேலூர் ஜனார்த்தனன் ஆகியோர் வீடுகளுக்கு சீல் வைத்துள்ளனர். இதனால் தலைமை மற்றும் கிளை அலுவலகங்கள் முற்றிலும் மூடப்பட்டது. இயக்குநர்கள் தலைமறைவாகி ஓடிவிட்டார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/financecompany2.jpg)
இந்நிறுவனத்தில் வங்கி அதிகாரிகளும் முதலீடு செய் துள்ளனர். அவர்களில் ஒருவர் நம்மிடம், "என் நண்பர் ஒருவர் சொன்னதை நம்பி, இந்த நிறுவனத்தில் கடந்த ஜூலை யில் முதலீடு செய்தேன் 100-க்கு 2 சதவீத வட்டி என்று சொன்ன வர்கள், 6 சதவீத வட்டியைக் கொடுத்து அசத்தினார்கள். முதலீடு போட்டதுமே கையெ ழுத்திட்ட செக் ஒன்றையும் தந்தார்கள். அதில் அரக் கோணம் மோகன்பாபு வின் கையெழுத்து இருந்தது. இதனால் நம்பிக்கை அதிகமானது. அதோடு, கடந்த ஏப்ரல் மாதம் ஈ.சி.ஆர். சாலை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு ரிசார்ட்டில் எல்லோருக்கும் பார்ட்டியும் தந்தார்கள். அப்போதும் அதிக வட்டி கொடுப்ப தாகச் சொல்லி எல்லோரையும் மயங்க வைத்தார்கள். கடைசியில் நாமம் போட்டுவிட்டார்கள். இதனால், இவர்களிடம் முதலீடு செய்து ஏமாந்த வினோத் என்பவர் தற்கொலையே செய்துகொண்டார். எங்களுக்கெல்லாம் நீதிவேண்டும்''’என்றார் கவலையோடு.
தற்கொலை செய்துகொண்டவர் பற்றி விசாரித்த போது, அவர் காட்பாடி அருகே உள்ள சேவூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதே ஆன வினோத்குமார் என்பது தெரிந்தது. இவர், 30- க்கும் அதிகமானவர்களிடம் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமாகப் பணத்தை வாங்கி இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்திருக்கிறார் என்பது தெரியவந்தது. தன் மூலம் பணம் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் கடந்த 7-ஆம் தேதி தற்கொலை செய் திருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/financecompany1.jpg) அதற்கு முன்பாக அவர் எழுதிவைத்திருந்த கடிதத்தில், ஐ.எப்.எஸ். தரப்பினர் மீது நடவடிக்கை எடுத்து, என்னை நம்பிப் பணம் கொடுத்தவர் களுக்கு அதைத் திருப்பி வாங்கிக் கொடுங்கள். இதற்கான ஆவணங்கள்அனைத்தும் எனது ஆன்லைன் புக்கில் உள்ளது. என்று தெரிவித்திருப்பதோடு “என்னை நம்பியவர்களுக்கு எனது முடிவிலாவது பணம் கிடைக்கட்டும். சாரி டு ஆல்.” என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதற்கு முன்பாக அவர் எழுதிவைத்திருந்த கடிதத்தில், ஐ.எப்.எஸ். தரப்பினர் மீது நடவடிக்கை எடுத்து, என்னை நம்பிப் பணம் கொடுத்தவர் களுக்கு அதைத் திருப்பி வாங்கிக் கொடுங்கள். இதற்கான ஆவணங்கள்அனைத்தும் எனது ஆன்லைன் புக்கில் உள்ளது. என்று தெரிவித்திருப்பதோடு “என்னை நம்பியவர்களுக்கு எனது முடிவிலாவது பணம் கிடைக்கட்டும். சாரி டு ஆல்.” என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
வினோத்குமாரின் வீட்டில் இருந்த பாண்டு பத்திரங்கள், லேப்டாப் உள்ளிட்டவற்றை காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல் வன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வரு கின்றனர். இதுகுறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, "அந்த நிறுவனத்தை நடத்தியவர்கள் நேரடியாக சட்டப்படி சிக்கக்கூடாது என்பதற்காகவே ஏஜென்ட் கள் வழியாகவே அனைத்து முதலீடுகளையும் வசூலித்திருக்கிறார்கள். ஒரு லட்ச ரூபாய்க்கு 12 சதவீத வட்டியை, அதாவது லட்ச ரூபாய்க்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் டீம் லீடர்களுக்குத் தந்துள் ளார்கள். அதில் லீடர்கள் தங்களுக்கு 4 சதவீதம் எடுத்துக்கொண்டு மீதியுள்ள 8 சதவீதத்தையே முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளார்கள். சிலருக்கு 6 சதவீத வட்டியைத் தந்துவிட்டு இவர்கள் 6 சதவீதம் எடுத்துக்கொண்டுள்ளார்கள்'' என்றார்கள்.
வினோத்குமார் மட்டுமல்லாமல் இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட இன்னும் சிலரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்கள். வினோத்குமா ரைப் போலவே, திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவர் 20 பேரிடம் 1.5 கோடி ரூபாய் வரை, வசூலித்து இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக் கிறார். அவரும் தற்கொலைக்கு முயல, கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டிருக்கிறாராம்.
இதற்கிடையே ஐ.எப்.எஸ். நிறுவனத்தின் காஞ்சிபுரம் ஏஜெண்ட் மின்மினி சரவணன் மற்றும் இராணிப்பேட்டையை சேர்ந்த இருவரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள்.
இதேபோல் ஆரணியில் "ஆரூத்ரா கோல்டு நிறுவனம்' என்ற பெயரில் தொடங்கிய ஒரு நிறுவனம், இரண்டே நாளில் கோடிகளைக் குவித்தனர். இந்த நிறுவனமும் அதிக வட்டி என்று ஆசைகாட்ட, காவல்துறையினர் ரெய்டு நடவடிக்கையில் இறங்கி, இதையும் இதன் கிளைகளையும் மூடியிருக்கிறார்கள். இதுபோன்ற மோசடி நிறுவனங்களின் பின்னணியில் அரசியல் புள்ளிகள் இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
ஆசை வலை விரிக்கும் மோசடி நிறுவனங் களிடம் மக்களுக்கு எச்சரிக்கை தேவை என்பதை யே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/financecompany-t.jpg)