சென்னைப் பல் கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருப்பவர் டாக்டர் எஸ்.கௌரி. இவரைப் பற்றி விவகாரமான குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுமத்திவருகிறார்கள்.

Advertisment

இந்த கௌரி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தால் 2020-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர் சமீபத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் வசிக்கும் பங்களாவில் புதுப்பிக்கும் வேலைகள் செய்யத் திட்டமிட்டார். அதற்காக 33 லட்ச ரூபாய் செலவு செய்தார். மிகவும் நல்ல நிலையில் பாரம்பரியமான சூழலில் கட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தைப் புதுப்பிக்க அதிகபட்சம் 8 லட்ச ரூபாய் செலவாகும். ஆனால் 33 லட்ச ரூபாய் எடுத்து அதை புதுப்பித்திருக்கிறார். இந்தச் செலவுக்கு தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக செனட் அனுமதியின்றி செலவு செய்திருக்கிறார். 25 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்தாலே அதை ஒப்பந்தப் புள்ளி கோரிதான் செய்யவேண்டும் என்கிற தமிழக அரசின் விதி மீறப்பட்டுள்ளது. பேராசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றிற்கே சிரமநிலை. தமிழகமும், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் அவர் குடியிருக்கும் பங்களாவுக்கு 33 லட்ச ரூபாய் செலவு செய்வது எந்தவிதத்தில் நியாயம் என கோபத்தோடு குரல் எழுப்புகிறது.

Advertisment

vc

இதற்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.எம். ஆர்.இ.எல் என்ற துறையின் டைரக்டராக இருந்தார். அந்தப் பதவியில் பல வருடங் களாக சட்டவிதிகளை மீறி பதவி வகித்தார். அவர் அந்தப் பதவியில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டார் என பல புகார்கள் எழுந்தன. மத்திய கணக்குத் தணிக்கை நிறுவனம் இவர் 15 கோடியே 61 லட்ச ரூபாயை தனது பெயரில் செக் எழுதி எடுத்துக்கொண்டார் என் றும், ஒரு கோடியே 31 லட்ச ரூபாயை பல்வேறு கருவிகள் வாங்குவதில் ஊழல் செய்தார் என்றும் கண்டுபிடித்து அறிக்கை கொடுத்துள் ளது. அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு பேர், கௌரி ஊழல் செய்தார் என அறிக்கை தயாரித்து விசாரணை அறிக்கையாக தந்துள்ளனர். இதையெல்லாம் காரணமாக வைத்து, இவர்மீது வழக்குப் பதிவு செய்யலாம் என பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரைத்து சி.பி.ஐ. கடிதம் அனுப்பியுள்ளது.

இப்படிப்பட்ட நபரை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பன்வாரிலால் புரோகித் 2020-ல் நியமித்துவிட்டார். அவர் சென்னை பல்கலைக் கழகத்திலும் விளையாட ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள் பேராசிரியர்கள்.

நாம் இதுகுறித்து கௌரியை தொடர்புகொண்டு விளக்கம் கேட் டோம். அவர் பதிலளிக்க வில்லை. துணைவேந்தர் களை மாநில அரசே நியமிக்கும் தீர்மானத்தை சட்டசபையில் நிறை வேற்றி அதை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி யிருக்கிறது தமிழக அரசு.