ருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்க்கும் பெருமை அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் எழுதி வைத்திருக்கிறதா என்ன? அதிகாரிகளும் அதில் பங்குக்கு வருவோம் என சொல்வதுபோல் மன்னார்குடி துணை ஆட்சியர் பவானி, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 11 கோடி சொத்து சேர்த்த புகாருக்கு ஆளாகி, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இலக்காகியுள்ளார்.

ss

மன்னார்குடியில் துணை ஆட்சியராக பணியாற்றி வரும் பவானி, கடந்த அ.தி. மு.க. ஆட்சியில் ஸ்ரீரங் கம் தாசில்தாராகப் பணியாற்றினார். பின் மண்ணச்சநல்லூர் சிறப்பு நில மீட்புத் துறையில் தாசில்தாராக பணியாற்றினார். அ.தி.மு.க. ஆட்சியில் அரசு தலைமை கொறடாவாக இருந்த மனோகரின் உறவினர். பணியாற்றிய வரு டங்களில் பிரச்சினை களோடு வரும் நிலங்களை தன்னுடைய உறவினர்கள் பெயரில் பதிவுசெய்து தன்னுடையதாக்கிக் கொள்வதாக அப்போதே புகார் எழுந்தது.

தற்போது மன்னார்குடியில் பணியை செய்து தர லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் சாலை சாரதி நகர் 2-வது தெருவி லுள்ள பவானிக்கு சொந்தமான வீட்டில் காலை 6 மணிக்கு துவங்கிய சோதனையானது... மாலை 5 மணி வரை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது.

Advertisment

ss

வீடு மட்டுமின்றி, மண்ணச்சநல்லூரிலுள்ள எஸ்.வி.ஆர். மெட்ரிகுலேசன் பள்ளி, வாளாடி பகுதியிலுள்ள இ.எஸ்.ஆர். பெட்ரோல் பங்க், டால்மியாபுரம் அலுமினியம் தொழிற்சாலை, புறத்தாகுடி பைப் கம்பெனி உள்ளிட்டவைகளில் அதிகாரிகள் ஒரேநேரத்தில் சோதனை நடத்தினர்.

எஸ்.வி.ஆர். மெட்ரிக் பள்ளியில் மொத்தம் 36 பேர் பங்குதாரர்களாக உள்ளனர். அதில் பவானி, பவானி மகன், அவரது மாமா மகன் 3 பேரும் முக்கிய பங்குதாரர்கள். மற்றவர்கள் அனைவரும் மிகவும் சொற்பமான அளவில் முதலீடு செய்தவர்கள்.. அப்படி சிறிய அளவில் முதலீடு செய்துள்ள பங்குதாரர்களில் பெரும்பாலானவர்கள் வருவாய்த்துறையிலுள்ள திருச்சியைச் சேர்ந்த சில தாசில்தார்களும், இவ ரோடு படித்து சேர்ந்து திருச்சியில் பணியாற்றும் சப்லிகலெக்டர்கள் சிவ சுப்ரமணியன், மஞ்சுளா உள்ளிட்ட அதிகாரிகளும் ஆவர்.

Advertisment

பவானிக்கு தற் போது விருதுநகரில் ஒரு வீடும், திருச்சியில் ஒரு வீடும் இருப்பதோடு, தொழிலதிபர்களோடு கூட்டு சேர்ந்து அடுக்கு மாடி குடியிருப்பும் கட்டி வருவதாகவும் விசா ரணையில் தெரியவந்துள் ளது. சென்னையில் ஒரு பெட்ரோல் பங்க் நடத்தி வருவதாகவும், கே.கே.நகர் அம்பிகா நகரில் நிலம், நாச்சிக்குறிச்சியில் இடம் என்று பலவற்றையும் லஞ்ச ஒழிப்புத் துறை யினர் கண்டறிந்துள்ள னர். இந்த சோதனையில் 225 சவரன் நகையும் பல ஆவணங்களும் சிக்கியுள்ளதாகக் கூறப் படுகிறது.