தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித்பவார், 28ஆம் தேதி, புதனன்று காலையில் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமொன்றில் பேசுவதற்காக சிறிய ரக விமானம் ஒன்றில் மும்பையிலிருந்து அவரது சொந்த தொகுதியான பாராமதி சென்றபோது, விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. அவ்விபத்தில், அவரோடு பயணித்த விமானிகள் உட்பட   4 பேரும்  உயிரிழந்தனர்.

Advertisment

தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவாரின் அண்ணன் மகன்தான் அஜித்பவார். இவர், பாராமதி தொகுதியிலிருந்து 8 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒருமுறை எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற்றவர். இதுவரை மகாராஷ்டிராவில் 6 முறை துணை முதலமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். 

Advertisment

இவர் 2019ஆம் ஆண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்ட நிலையில், இரவோடு இரவாக கட்சி தாவியதோடு, பா.ஜ.க.வை ஆட்சியிலேற்றி, தான் துணை முதல்வராகப் பதவியேற்றார். போதுமான மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத சூழலில், மீண்டும் அவர் சிவசேனா கூட்டணிக்குத் திரும்பினார். இங்கும் துணை முதலமைச்சர் பதவியை கைப்பற்றினார். 

அதன்பின் மூன்றாண்டுகளுக்கு முன்னர், மீண்டும் சரத்பவாரின் கட்சியை உடைத்துக் கொண்டு ஏக்நாத் ஷிண்டேவின் ஆட்சியில் துணை முதல்வரானார். தற்போது தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சரவையிலும் துணை முதல்வராக பொறுப்பிலிருந்து வந்தார்.

Advertisment

இவர் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதில் சுமார் 70,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதேபோல், அவர்மீதும், அவரது குடும்பத்தினர் மீது 1000 கோடி ரூபாய் அளவில் சொத்து சேர்த்த வழக்கு பதியப்பட்டு, அவரது சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கிய நிலையில், பா.ஜ.க. அமைச்சரவையில், 2024, டிசம்பர் 5 அன்று துணை முதல்வராக அஜித் பவார் பொறுப்பேற்ற இரண்டே நாட்களில், முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டது பெரிய அளவில் விமர்சனத்தை எழுப்பியது. 

தற்போது அஜித்பவார், பா.ஜ.க. கூட்டணியி லிருந்து விலகி தனது சித்தப்பாவின் கூட்டணியில் இணையவுள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலை யில் அவரது மரணம் சந்தேகத்துக்குரியதாக இருப்ப தாகவும், உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித் துள்ளார். விபத்தை நேரில் பார்த்தவர்களும் நான்கைந்து முறை வெடித்த சத்தம் கேட்டதாகக் கூறியிருப்பதால் விரிவான விசாரணைக்கு பின்னரே உண்மை வெளிவரக்கூடும்.