கொரோனா தொற்றுக்குள் ளாகும் டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், போதிய பாதுகாப்பு கவசங்கள் இல்லை என சென்னை முதல் கிராமங்கள் வரை உள்ள மருத்துவர்கள் குரல் எழுப்பு கிறார்கள். இந்நிலையில் இளம் டாக்டர் ஜெயமோகனின் மரணம் அதிர்ச்சியையும் பலத்த சந்தேகங் களையும் உருவாக்கியிருக்கிறது.

dr

2007 ஆம் ஆண்டு பன்னி ரெண்டாம் வகுப்புத்தேர்வில் மாநில அளவில் மூன்றாவது இடம் பிடித்து அப்போதைய முதல்வர் கலைஞரால் பாராட்டுப் பத்திரம் பெற்று டாக்டர் படிப்பில் சேர்ந்தவர் ஜெயமோகன். படிப்பு முடிந்ததும், நகர்புறமாக போஸ்டிங் வாங்க நினைப்பவர்கள் மத்தியில் நீலகிரி மாவட்டம் மலைப் பகுதியான தெங்குமரஹாடா என்கிற ஆரம்ப சுகாதாரநிலையத் தில் ஏழை எளிய மக்களுக்கு ஜெயமோகன் மருத்துவசேவை புரிந்துவந்தார். பல மைல்தூரம் நடந்து அதுவும் தண்ணீரைக் கடந்து செல்லவேண்டிய சூழல். லீவு கிடைக்காமல் தொடர்ந்து ஓய்வின்றி பணியாற்றிவந்த டாக்டர் ஜெயமோகனுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது. கொரோனா தொற்றாக இருக்குமோ என்ற அச்சத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் நிலைமை மோசமானதால் கோவை பி.எஸ்.ஜி. தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டு, பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இவரது, இறப்பிற்கு காரணம் கொரோனா அல்ல, டெங்கு காய்ச்சல்தான் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்பெல்லாம், டெங்கு காய்ச்சல் வந்தால் மர்மக்காய்ச்சல் என்றுதான் கூறும் அரசாங்கம். ஆனால், தற்போது தாங்களாக முன்வந்து டெங்கு காய்ச்சல்தான் என்று தனியார் மருத்துவமனையும் அரசும் கூறும்போது சந்தேகம் எழும்புகிறது என்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.

Advertisment

அவர்கள் நம்மிடம், ""கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையிலுள்ள அரசு டாக்டர் களுக்கே கொரோனா தொற்றியுள் ளது. டாக்டர் ஜெயமோகனோ கேரள எல்லையிலுள்ள நீலகிரி மாவட்ட ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணிபுரிந்திருக்கிறார். பரிசோதனையில் கொரோனா இல்லை, டெங்கு என வந்துள்ளதாக கூறுகிறார்கள். சில நேரங்களில் கொரோனா பி.சி.ஆர் பரிசோதனை தவறுதலாக நெகட்டிவ் காண்பிக்கும். ஆனால், சளி, இருமல், காய்ச்சல் இருந்திருக்கிறது. இதெல்லாம், கொரோனாவின் அறிகுறிகள்.

ரத்தத்தில் ப்ளேட்லட்ஸ் எனப்படும் தட்டையணுக்கள் குறைவது டெங்குவில் மட்டுமல்ல கொரோனாவிலும் ஏற்படும். டயரியாவும் ஏற்பட்டுள்ளது. மோஷன் டெஸ்ட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் பார்த்தால்தான் முடிவு செய்யமுடியும். ஆனால், அதை எடுத்தார்களா என்பது கேள்விக்குறி. காய்ச்சல், சளி, இருமல் என அவரது க்ளினிக்கல் பிக்சரை வைத்து முடிவுசெய்யவேண்டும். அவரது, குடும்பத்தினருக்கு இழப்பீட்டை வழங்கவேண்டும். இனி, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கு அரசு டாக்டர்களுக்கு இப்படியொரு, மரணம் நிகழக்கூடாது'' என்கிறார்கள்.

டாக்டர் ஜெயமோகனைப் போன்ற அரசு டாக்டர்களின் மரணம் ஆயிரமாயிரம் ஏழை மக்களுக்கு பேரிழப்பு.

Advertisment

-மனோசௌந்தர்