"ஹலோ தலைவரே, தமிழகத்தில் தேர்தல் விறுவிறுப்பு ஆரம்பிச்சிடுச்சு. விருப்பமனு வாங்கும் அறிவிப்பை மற்ற கட்சிகளை முந்திக்கிட்டு அ.தி.மு.க. வெளியிட்டிருக்கு.''
""ஜெ. மாதிரி செயல்பட ணும்னு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் டீம் நினைக்குதோ!''
""நினைப்பு சரிதாங்க தலைவரே.... ஆனா, இந்த முறை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, கூட்டணிப் பேச்சு வார்த்தைக் குழுன்னு தி.மு.க.தான் முதலில் குழுக்களை அறிவிச்சிது. இதைப் பார்த்ததும் உஷாரான முதல்வர் எடப்பாடி, தி.மு.க. பாணியிலேயே தேர்தல் பேச்சு வார்த்தைக் குழு, அறிக்கை தயாரிப்புக் குழு, பிரச்சாரக் குழுன்னு அறிவிச்சதோட, தி.மு.க.வை முந்திக்கொண்டு, விருப்ப மனுவை பிப்ரவரி 4-ந் தேதி முதல் கொடுக்கலாம்ங்கிற தகவலை யும் வெளியிட்டிருக்கார்.''
""எம்.பி.யாவதற்கு அ.தி. மு.க.வினர் விருப்பமாகுறாங்கன்னு சொல்லுப்பா..''
""ஒருத்தர் ரொம்ப வெறுப்புல இருக்காரு. தேர்தல் தொடர்பான எந்தக்குழுவிலும் தன்னை இணைச்சுக்கலைங்கிற எரிச்சலில் இருக்காரு மைத்ரேயன். இரட்டை இலைச் சின்னத்தை அ.தி.மு.க. மீட்க முக்கியக் காரணமாக இருந்த தன்னை, எடப்பாடி தரப்பு ஓரங்கட்டறதா அவர் புலம்பறார். ஜெ. இருந்தபோது, இவரை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் போட்டதையும், அந்த அறிக்கையை கட்சிக்காரர்கள் மத்தியில் தன்னை விளக்கிச் சொல்ல வைத்து, அதை அவர் ரசித்துப் பாராட்டியதையும் தன் நண்பர் களிடம் நினைவுபடுத்தும் மைத்ரேயன், அப்படிப்பட்ட என்னை வேண்டுமென்றே எடப்பாடி நசுக்கப் பார்க்கிறாருன்னு தன் வேதனையை வெளிப்படுத்திக்கிட்டு இருக்கார். தன்னோட இந்த ஆதங்கத்தை தன் முகநூல் பக்கத்திலும் மைத்ரேயன் பகிரங்கமாவே பதிவிட்டு, எடப்பாடி
"ஹலோ தலைவரே, தமிழகத்தில் தேர்தல் விறுவிறுப்பு ஆரம்பிச்சிடுச்சு. விருப்பமனு வாங்கும் அறிவிப்பை மற்ற கட்சிகளை முந்திக்கிட்டு அ.தி.மு.க. வெளியிட்டிருக்கு.''
""ஜெ. மாதிரி செயல்பட ணும்னு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் டீம் நினைக்குதோ!''
""நினைப்பு சரிதாங்க தலைவரே.... ஆனா, இந்த முறை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, கூட்டணிப் பேச்சு வார்த்தைக் குழுன்னு தி.மு.க.தான் முதலில் குழுக்களை அறிவிச்சிது. இதைப் பார்த்ததும் உஷாரான முதல்வர் எடப்பாடி, தி.மு.க. பாணியிலேயே தேர்தல் பேச்சு வார்த்தைக் குழு, அறிக்கை தயாரிப்புக் குழு, பிரச்சாரக் குழுன்னு அறிவிச்சதோட, தி.மு.க.வை முந்திக்கொண்டு, விருப்ப மனுவை பிப்ரவரி 4-ந் தேதி முதல் கொடுக்கலாம்ங்கிற தகவலை யும் வெளியிட்டிருக்கார்.''
""எம்.பி.யாவதற்கு அ.தி. மு.க.வினர் விருப்பமாகுறாங்கன்னு சொல்லுப்பா..''
""ஒருத்தர் ரொம்ப வெறுப்புல இருக்காரு. தேர்தல் தொடர்பான எந்தக்குழுவிலும் தன்னை இணைச்சுக்கலைங்கிற எரிச்சலில் இருக்காரு மைத்ரேயன். இரட்டை இலைச் சின்னத்தை அ.தி.மு.க. மீட்க முக்கியக் காரணமாக இருந்த தன்னை, எடப்பாடி தரப்பு ஓரங்கட்டறதா அவர் புலம்பறார். ஜெ. இருந்தபோது, இவரை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் போட்டதையும், அந்த அறிக்கையை கட்சிக்காரர்கள் மத்தியில் தன்னை விளக்கிச் சொல்ல வைத்து, அதை அவர் ரசித்துப் பாராட்டியதையும் தன் நண்பர் களிடம் நினைவுபடுத்தும் மைத்ரேயன், அப்படிப்பட்ட என்னை வேண்டுமென்றே எடப்பாடி நசுக்கப் பார்க்கிறாருன்னு தன் வேதனையை வெளிப்படுத்திக்கிட்டு இருக்கார். தன்னோட இந்த ஆதங்கத்தை தன் முகநூல் பக்கத்திலும் மைத்ரேயன் பகிரங்கமாவே பதிவிட்டு, எடப்பாடி தரப்போடு கோதாவுக்கும் அவர் தயாராயிட்டார்.''
""எடப்பாடியின் ரியாக்ஷன் என்ன?''
""அவர் ஜெ.வின் 71வது பிறந்தநாளை பிரம் மாண்டமா கொண்டாட ப்ளான் பண்ணிக்கிட்டி ருக்காரு. கட்சித் தொண்டர்களை பலப்படுத்த இது பயன்படும்னு எடப்பாடி நினைப் பது போலவே, அ.ம.மு.க.வின் தினகரனும் ஜெ.’ பிறந்தநாள் விழாவைக் கோலா கலமா கொண்டாடத் திட்டமிட்டிருக்கார். தங்கள் விழாவுக்குப் பெரும்கூட்டத் தைக் கூட்டி, எடப்பாடி தரப்புக்கு கலக் கத்தை உண்டாக்கறதுதான் தினகரனின் நோக்கமாம்.''’
""பா.ஜ.க.வோடு கூட்டணி அமைக்க முழுமையா இணக்கம் காட்டாத எடப்பாடி மீது, பிரதமர் மோடி, கோபமா இருக்காராமே? அதனால்தான் மதுரை விசிட்டில் கூட, அவரை தன்னிடம் அதிகமா நெருங்கவிடாமல் ஓ.பி.எஸ்.சிடம் பரிவு காட்டினாராமே?''
""உண்மைதாங்க தலைவரே. அந்தக் கோபத்தின் தொடர்ச்சியா, சென்னை மண்டல வருமான வரித்துறை இயக்குநரான தமிழ்ச் செல்வனை பெங்களூருக்குத் தூக்கி அடிச் சிடிச்சி மோடி அரசு. இவர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரின் உடன்பிறந்த சகோதரர். இவர் எடப்பாடிக்கும் நம்பிக்கையானவர். எடப்பாடிக்கு எதிரான அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள்னு பலர் வருமானவரித்துறை ரெய்டில் சிக்கியிருக்காங்க. எடப்பாடி தரப்பின் மீது ரெய்டு நடவடிக்கை பாயும் போது, இந்த அதிகாரி சைடி லிருந்து அலர்ட் அலாரம் வந்திடுமாம். இதையெல்லாம் தெரிந்துவைத்திருந்த டெல்லி, எடப்பாடிக்கு ஷாக் தர, தமிழ்ச்செல்வனை, சென்னையில் இருந்து பெங்களூருக்கு பேக் பண்ணிவிட்டதாம்.''’
""கூட்டணிக்காக பா.ஜ.க. கொடுக்கும் நெருக்கடிகளை சமாளிச்சபடியே, பா.ம.க.வை கூட்டணிக்குக் கொண்டு வர்றதில் எடப்பாடி தீவிரம் காட்டறாராமே?''
""ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. சார்பில் பா.ம.க.வோடு கூட்டணிப் பேச்சுவார்த்தை ரகசியமா நடந்துக்கிட்டிருக்கு. பா.ம.க.வுக்கு 5 எம்.பி. சீட்டும் ஒரு ராஜ்யசபா சீட்டும் தேர்தல் செலவில் பக்கபலமா இருப்பதாகவும் பேச்சு ஓடுது. பா.ம.க.வோ அந்த ஐந்தில் அன்புமணியின் சிட்டிங் தொகுதியான தருமபுரியும் ஆரணியும் கிருஷ்ணகிரியும் தங்களுக்குக் கட்டாயம் வேணும்னு நிபந்தனை விதிக்கிறது. காரணம், இந்தமுறை அன்புமணி ஆரணியில் நிற்க நினைக்கிறார். தர்மபுரியில் முன்னாள் எம்.பி.யான டாக்டர் செந்திலை நிறுத்துவதுதான் அன்புமணியின் திட்டமாம். கிருஷ்ணகிரி தொகுதி ஜி.கே.மணிக்காம். ஆனால் இந்த 3 தொகுதிகளைப் பா.ம.க.வுக்குத் தரும் விசயத்தில்தான் இழுபறி நீடிக்குது. அதேநேரம் அ.தி.மு.க.வில் இருக்கும் எம்.பி.க்கள் உட்பட அங்கே ஒரு தரப்பு, நம் கூட்டணிக்கு பா.ம.க. வேண்டவே வேண்டாம்ன்னு கொடிபிடிக்குது. இதை மேனேஜ் பண்ணும் வழிகளைத் தேடிக்கிட்டு இருக்காராம் எடப் பாடி.''’
""ஓ...''’’
""தலைவரே... பா.ம.க.-தி.மு.க. கூட் டணிக்கு ஏற் கனவே ரெண்டு சைடிலும் ஒரு மூவ் நடந்தது. துரைமுருகன் போன்ற அங் குள்ள வன்னிய சமூகப் பிர முகர்கள் முயற்சி எடுத்தாங்க. டாக்டர் ராமதாஸுக்கும் இதில் ஓரளவு லேசான உடன்பாடு இருந்தது. ஆனால் அதுக்கு பொன்முடி, எ.வ.வேலு போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஸ்டாலின் கூட்டணி முடிவைக் கைவிட்டுவிட்டார். இப்போது அ.தி. மு.க.வோடு பா.ம.க. கூட்டணி அமைக்கப்படு கிறது என்றதும் தி.மு.க.வின் பார்வையிலும் மாற்றம் தெரியுதாம். கொங்குமண்டலத்தில் அ.தி.மு.க. வாக்கு வங்கியும், தன் சமூக பலமும் எடப்பாடிக்கு கை கொடுக்கும். தென்மாவட்டங் களில் தினகரன் தன் சமூக பலத்தை நம்புவார். அதனால், தி.மு.க.வுக்கு அடித்தளம் உள்ள வடமாவட்டங்களில் கூட்டணி பலத்தை அதிகரிக்க பா.ம.க கூட்டணி உதவும்னு நம்பி, சில சீக்ரெட் முயற்சிகள் மேற்கொள்ளப்படுது.''’
""பா.ஜ.க.வும் தமிழ்நாட்டில் ஒரு வலிமையான கூட்டணியை அமைக்கணும்னு போராடிக்கிட்டு இருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, தமிழ்நாட்டில் தான் எதிர்பார்க்கிற மாதிரி பலமான கூட்டணி அமையாதோங்கிற கவலை இப்ப பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கு. அ.தி.மு.க.வை தன் பக்கம் இழுப்பதுதான் அதன் முதல் அஜெண்டா. அதேநேரத்தில் தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்கு கொண்டுவர, காய் நகர்த்தி வரும் பா.ஜ.க., ரஜினியையும் விடறதா இல்லை. கட்சியை விரைவில் ஆரம்பித்து கூட்டணிக்கு வாருங்கள். இல்லைன்னா, இப்பவே எங்களுக்கு ஆதரவா குரல் கொடுக்க ஆரம்பியுங்கள்னு அமித்ஷா, விடாமல் ரஜினியிடம் பேசிக்கிட்டே இருக்கார். ரஜினியோ பிடி கொடுக்காமல் இருக்கார். அதனால் பா.ஜ.க. அடுத்தடுத்த வியூகங்களை வகுத்துக்கிட்டு இருக்கு.''’
""பா.ஜ.க.வுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தியும் பலமான ஷாக் கொடுத்திருக்கார் போலிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே. ரெண்டு நாளைக்கு முன் ராகுல் காந்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும், குறைந்தபட்ச வருவாய் கிடைப்பதற்கான திட்டத்தைக் கொண்டு வருவோம்னு அறிவிச்சார். இதையறிந்த மோடியும் பா.ஜ.க. சீனியர்களும் அதிர்ச்சியில் உறைஞ்சுப் போயிட்டாங்க. காரணம் என்னன்னா, பிப்ரவரி 1-ந் தேதி தொடங்கும் நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, ஏறத்தாழ இதேபோல் ஒரு அறிவிப்பை வெளியிடத் திட்ட மிட்டிருந்தார் மோடி. அதே நேரத்தில், காங்கிரஸின் சீனியரான ப.சி.யும் தனது டிவிட்டர் பக்கத்தில், ராகுலின் அறிவிப்பு, நடைமுறைக்கு சாத்தியமில்லாத அறிவிப்புன்னு விமர்சனம் செஞ்சிருக்கார். ப.சி.யிடமிருந்து ராகுலுக்கு எதிராக வந்த இந்தக் கருத்து, காங்கிரஸுக்குள்ளேயே பரபரப்பைப் பற்ற வச்சிருக்கு.''’
""இதுவும் பட்ஜெட் தகவல்தான்.. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே தமிழக பட் ஜெட்டைத் தாக்கல் செய்ய முதல்வர் எடப்பாடி திட்ட மிட்டிருப்பது குறித்து இதற்கு முன்பே நாம் பலமுறை பேசியிருக்கோம். பிப்ரவரி 7, 8, 11 ஆகிய தேதிகளில் ஒன்றில், பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய நினைக்கிறோம். இதில், உங்களுக்கு உகந்த நாளைத் தெரிவியுங்கள்னு அரசு சார்பில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்குது. அதோடு, அது 11-ந் தேதியாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்ங்கிற விருப்பத்தையும் எடப்பாடி தரப்பு ராஜ்பவ னுக்குத் தெரிவிச்சிருக்கு. பட் ஜெட்டைத் தாக்கல் செய்து விட்டு, அது தொடர்பான விவாதங்களை 18, 19 தேதி களுக்குள் அவசரகதியில் முடிக்கும் முடிவிலும் இருக்குது எடப்பாடி அரசு.''’
""நான் ஒரு தகவலைச் சொல்றேன்... ஜெ.வின் மர்ம மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய ’விசாரணையின் போக்கு சரி யில்லை. நாங்கள் ஜெ.வுக்குக் கொடுத்த மருத்துவ சிகிச்சை கள் குறித்து மதிப்பிட ஒரு மருத்துவக் குழுவைப் போட்டு விசாரணை கமிஷன் ஆராய்ந் திருக்க வேண்டும் என்ற ரீதியில் தன் வழக்கில் சொல்லியிருக்கிறதாம் அப்பல்லோ. இதையொட்டி, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்கப்படலாம்ங்கிற பேச்சும் வழக்கறிஞர்கள் மத்தியில் அடிபடுது.''’